Saturday, November 28, 2015

பெண் தோழி

அவன் பார்க்கும் பார்வையை தாங்க முடியாமல் ரகு விழுந்து விழுந்து சிரித்த போது இன்னும் ஒன்றும் புரியாமல் குழம்பிப் போனான். பிறகு மெல்ல வாயை திறந்து, 'ரகு எனக்கு ஆச்சர்யமாக இருக்கு. நீயா? நீயா இப்படி பேசினே? எப்படி அந்த அழகான தேவதையை வேண்டாம்னு ஒதறிதள்ள முடிஞ்சது உன்னால? என்னால நம்பவே முடியலை. சாதாரண துணை நடிகையா இருந்தாலும் உனக்கு பிடிச்சுருச்சுன்னா விடமாடே, உடனே டேட்டீங் கிளம்பிடுவே. இன்னைக்கு என்ன ஆச்சு உனக்கு? நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்டியே இப்படி.' என  புலம்பாத குறையாக கூற,
அதற்குள் தனது வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்து முடித்துவிட்டு ரகு, "நான் என்ன முட்டாளா? இப்படி ஒரு ஃபிகர் தானா வந்தா சும்மாவிட? எல்லாம் காரணம் இருக்கு". என கூறும் போதே ஷாட் ரெடி என அழைப்பு வர இருவரும் போனார்கள்.

இங்கு ரகு வீட்டில்....
" அய்யோ அம்மாடி ரதி, என்னால அந்த ருத்திர மூர்த்தி எதுர்க்க நிற்க முடியலை, என்ன ஒரு ஆவேசம், கோவம். நான் எழுதினதை படிச்சதும்...அப்பாப்பா... என்னால இனி இந்த ஜென்மத்துல அவர் முன்னாடி போய் நின்னு நான் உங்க தீவிர விசிறினு சொல்லகூட முடியாத மாதிரி பண்ணிடியேடி, ஏன் தான் உனக்கு போய் நான் ப்ரண்டா ஆனேனோ தெரியலை போ..." என அந்த தேவதை பெண் ரதியிடம் கூறி அங்காலாய்த்தாள்.
ரதி,"இல்லடி மேகா, நீதான் நான் வச்ச டெஸ்ட்க்கு சரியான ஆள். உன் அழகுக்காக எத்தனை ஆம்பிளைங்க உன்ன பின்னாடி வந்திருக்காங்க. ஒரு நிமிடமாவது தடுமாறமாட்டாங்க. அதுக்குத்தான் அவரை பார்க்க உன்னை அனுப்பினேன். இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்குடி. அவரை பத்தி அங்க இங்க கேள்விபட்டது, பத்திரிகைல படிச்சதுனு ரொம்ப குழம்பி போயிருந்தேன். நல்ல வேளை என் புருஷன் உத்தமன் தான்" என கூறி இருவரும் சேர்ந்து சந்தோஷத்தை ஐஸ்கிரிம் சாப்பிட்டு கொண்டாடிக் கொண்டிருந்த அதே வேளையில்,

இடைவெளியின் போது மீண்டும் நனது ஹீரோ பேக் டு தி பாய்ண்ட் வந்து கேள்விகளை அடிக்க, ரகுவும் ஏளன சிரிப்புடன், " என் பொண்டாட்டிக்கு கொஞ்ச நாளச் என் மேல சந்தேகம்னு அவ ஆக்ட்டிவிடீஸ்லயே தெரிஞ்சுகிட்டேன். இப்படி ஏதாவது செய்வானு எதிர் பார்த்தேன். அதான் நடந்துச்சசு"  எனறான் கூலாக.
ஹீரோவும் விடவில்லை, "ஹே... அது சரி...இருந்தாலும்.... எப்படிடா இந்த ஃபிகர்னு கண்டுபிடிச்ச" என்றான்.
ரகு, " நாமல்லாம் யாரு, கல்யாணத்தன்னைக்கு என் பொண்டாட்டியோட ப்ரண்ட்ஸ்லயே இவதாண்டா ரொம்ப அழகு. அன்னைக்கே பிராக்கேட் போட நினைச்சேன். முடியலை. ஏன்னா... மேடயவிட்டு எழுந்திரிக்க கூடாது, நீதான் கல்யாணப் பையனு அப்பப்போ வாத்தியார் நியாபகபடுத்திட்டிருந்தார். அதான் அன்னைக்கு மிஸ் ஆகிடுச்சு. மறக்க முடியுமா இவளையெல்லாம் ஹும்ம்ம்....சொல்லு? என கேட்டு சிரித்து, "ஆனா இவளையே என் அருமை பொண்டாட்டி என்கிட்டயே நடிக்க அனுப்பியிருக்கா பார். முட்டாள்... என மீண்டும் உறக்க சிரிக்க, ஷாட் ரெடி என கூவிய குறலுக்கு அங்கும் நடிக்க சென்றான் அந்த அபார நடிகன்.
                                             முற்றும்.

Monday, November 23, 2015

பெண் தோழி

                                    (2)

இந்த முறையும் இந்த படத்தின் இளம் ஹீரோ டிப்ஸ் கேட்டுக் கொண்டிருக்கும் போது தேவதையாக ஒரு பெண் ரகுவிடம் ஆட்டோகிராஃப் கேட்க, அவனும் போட்டு கொடுத்தான். திருப்பி கொடுக்கும் போதுதான் பார்த்தான், அதில் 'இன்று டேட்டிங்கிற்கு போகலாமா?' என்றிருந்தது.  அதை பக்கதிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த ஹீரோவிற்கு பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது என எண்ணி ரகுவை பார்த்து அசட்டு சிரிப்பொன்றை உதிர்க்க, அதை பொருப்படித்தாமல் ரகு வந்த தேவதையை மேலும் கிழும் பார்த்தான்.

உடனே தைரியம் வந்தவளாக எழுதியதை வாய்விட்டே கேட்டாள். ரகுவிற்கு கோபம் எங்கிருந்து வந்த்ச்தோ தெரியவில்லை.  " என்ன நினைச்சுகிட்டு இப்படி ஒரு வார்த்தையை என்னை பார்த்து கேக்கறீங்க? மரியாதை கெடறதுக்கு முன்னாடி இங்கிருந்து போய்டுங்க" என அவளுக்கு மட்டும் கேட்கும் அளவிற்கு கடிமையாக கூற்னான்.  அவளது முகம் வெளுத்து ப்ரம்மை பிடித்தவள் போல் சிலையாக நிற்க, மெஎலும் ரகு " என்ன ஒரு தடவை சொன்னா புரியாதா? போங்க... எனக்கு கல்யாணமாயிடுச்சு... வீட்டல் பொண்டாட்டி இருக்கா. வேணும்னா நான் அவளை கூட்டிகிட்டு டேட்டிங் போவேன். பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணறவன் நான் இல்ல. புரியுதா?!
உங்கள மாதிரி ரசிகைனு சொல்லிகிட்டு வர்ர எந்த பெண் தோழியும் வேண்டாம் எனக்கு." என ஆத்திரமுடன் கத்திதீர்த்த பிறகே அவள் ஓடாத குறையாக  அங்கிருந்து சென்று காணாமல் போனாள்.

இதை எல்லாம் வெகு அதிர்ச்சியோடும் ஆச்சர்யத்தோடும் பார்த்துக் கொண்டிருந்த ஹீரோவிற்கு என்ன கேட்பதென்றே தெரியவில்லை. ரகுவையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.
                                             தொடரும்....

Sunday, November 22, 2015

பெண் தோழி

                               (1)
அன்று காலை முதலே ஒரே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள் ரதி.  இன்று கடைசி நாள் (க்ளைமேக்ஸ்) சூட்டீங் சீக்கிரம் போகவேண்டிம் என திரையுலகில் பிரபல காமெடியனாக உருமாறிவிட்ட தனது  கணவன் ரகு சொன்னது நினைவிற்கு வந்த்து முதல் அவனுக்கு முன்னதாகவே எழுந்து கணவனுக்கு தேவையானவற்றை எடுத்து வைப்பதில் மும்முறமானாள்.

காலை 8 மணி என கடிகாரம் மணி அடித்து தன் கடமையை ஆற்றிய போதுதான் நினைவு வந்தவளாக ரகுவை எழுப்பும் தன் கடமையை ஆற்ற போனாள். அவசரமாக ஓடிவந்து கட்டிலில் உருளும் கணவனை " எழுந்திதுங்க நேரம் 8 ஆச்சு ஹும்ம்ம்.... சீக்கிரம்" என அவசரம் காட்ட உடனே ஷாக் அடித்தவன் போல் துள்ளி குதித்து உட்கார்ந்து அவளை முறைத்தான். பிறகு கொஞ்சியும் கெஞ்சியும் ஒரு வழியாக அவனை வேலைக்கு அனுப்பிவைத்தாள். 

வழக்கம் போல் இந்த படத்திலும் ரகுவே காமெடியன் மற்றும் இயற்றாத சத்தமில்லாத ஹீரோ. இந்த படத்தின் நிஜ ஆனால் பெயருக்கு ஹீரோ கூட சீக்கிரம் வந்து இவனுக்காக காத்திருக்க, கடைசி சீனும் இவன் தயவிலேயே மிடியும் சூழ்நிலை. ஹீரோவின் பன்ச் டயலொக்கைவிட, இவனது பன்ச் டயலொக்கிற்காக காத்திருந்தது மொத்த யூனிட்டும். இப்படியிருக்க, பெண்களிடம் எந்த ஆணிற்குத்தான் ஈர்ப்பு இல்லை. நமது காமெடியன் இதில் எப்போதும் சோலோ ஹீரோ. யாரையும் கூட்டு சேர்ப்பதுவும் இல்லை நம்புவதுமில்லை. இதனால் பல ஹீரோக்களே இவனிடம் வந்து சில பல டிப்ஸ்களை வாங்கி செல்வர். பதிலுக்கு அவர்களின் நெருங்கிய நட்பும் படங்களும் பரிசாக இவனுக்கு.  
                                            தொடரும்......