
பொய்யும் புரட்டும் முகத்தில் தாண்டவமாடி
பொய்யென உரைக்கும் மெய்யாய்.
வெளிப்பட்ட வேஷம் துவேஷமாய் மாற
உரைந்து நிற்கும் உண்மையும்
இரக்க குணம் அரக்க குணமாய்
நெஞ்சை பிளந்து வெடிக்கும் நாற்புறமும்
காலம் முழுதும் கசையடியாய்
கனவுகள் தொலைத்த கருவறையாய்
மீந்து கிடக்கும்
எதை கொண்டு அதை அழிக்க
எதை கொண்டு நான் விழிக்க
என கெஞ்சி கேட்கும் மனிதமும்.
நீரூற்றி நெருப்பூற்றி
நெடுங்கால நினைவூற்றி
துவேஷம் வளர்ந்து நிற்கும் வேளையிலே
உண்மை உறுத்தலாய் உள்மனதை உடைக்கும்
திருந்திட திண்டாடும் மனதின் மூலையில்
பொய் முகம் அழியத்துவங்கும்.
நல்லதொரு ஆரம்பம்
நாள் முடிவில் துவங்கும்.
மாற்ற இயலாத மனதினை
மாற்றிவிட்ட பெருமிதத்தோடு
காலம் கடைசி நிமிடங்களை கடக்கும்...