Showing posts with label குறுங்கவிதை.... Show all posts
Showing posts with label குறுங்கவிதை.... Show all posts
Monday, January 15, 2024
Tuesday, November 14, 2023
Wednesday, October 25, 2023
Thursday, April 12, 2012
உரிமை 7
சுகம் தரும் குளிர் போய்
இதம் தேடி நான்
போர்வையின் கதகதப்பில்...
மேலும் என் போன்றோரின்
தேவைக்காக உருவானது கம்பளிகள்
ஆட்டுத் தோலுரிப்பில்....
இதம் தேடி நான்
போர்வையின் கதகதப்பில்...
மேலும் என் போன்றோரின்
தேவைக்காக உருவானது கம்பளிகள்
ஆட்டுத் தோலுரிப்பில்....
Wednesday, March 21, 2012
உரிமை-6
வளர்பிறை நாள்
எதையும் ஆரம்பிக்க
உகந்த நாளாம்.
சூரிய நிழலின் மேல் நம்பிக்கை
பூலோகத்தில்.
நிழலாடியது நிஜத்தை திருடிக்கொண்டு.
எதையும் ஆரம்பிக்க
உகந்த நாளாம்.
சூரிய நிழலின் மேல் நம்பிக்கை
பூலோகத்தில்.
நிழலாடியது நிஜத்தை திருடிக்கொண்டு.
Tuesday, March 6, 2012
Tuesday, February 14, 2012
உரிமை 4
ஊர் கூட்டி 20 வருட
உரிமையை இழந்தேன்.
இதோ வெளி நிலத்திற்கு
சொந்தமாகி போனது
என் வீட்டு விதை.
மகளின் திருமணம்.
உரிமையை இழந்தேன்.
இதோ வெளி நிலத்திற்கு
சொந்தமாகி போனது
என் வீட்டு விதை.
மகளின் திருமணம்.
Wednesday, February 8, 2012
உரிமை 3
நட்பில் துரோகம் பழகிப்போனது
பழக்கவைக்கப்பட்டது உன்னால்
இப்போழுதெல்லாம் என் கண்களின் நீரை
சேமிக்க ஆரம்பிக்கிறேன்,
வரண்ட என் இதயத்தின்
நட்பு என்னும் தாகம் தீர்க்கும் என்று.
பழக்கவைக்கப்பட்டது உன்னால்
இப்போழுதெல்லாம் என் கண்களின் நீரை
சேமிக்க ஆரம்பிக்கிறேன்,
வரண்ட என் இதயத்தின்
நட்பு என்னும் தாகம் தீர்க்கும் என்று.
Monday, February 6, 2012
உரிமை! - 2
அழகிய வண்ணங்கள் சேர்த்த ஓவியமாய் கோலம்
தெருவடைத்து திமிர் பேசியது
தன்வீட்டு மார்கழி கொண்டாட்டத்தை.
வழி அறியோரின் மிதியால்
நசுங்கப்பட்டது சில உயிர்கள்
தெருவடைத்து திமிர் பேசியது
தன்வீட்டு மார்கழி கொண்டாட்டத்தை.
வழி அறியோரின் மிதியால்
நசுங்கப்பட்டது சில உயிர்கள்
Wednesday, January 18, 2012
உரிமை! -1
நேற்று என் ஜன்னல் ஓரத்தில்
குழந்தையின் மழலை சிரிப்பாக
இன்று அவள் கூந்தலில்
மோனோலிசா புன்னகையாக
அவள் வீட்டு ரோஜாவாம்
உரிமை கொண்டாடுகிறாள்
உயிரை பறித்து.
குழந்தையின் மழலை சிரிப்பாக
இன்று அவள் கூந்தலில்
மோனோலிசா புன்னகையாக
அவள் வீட்டு ரோஜாவாம்
உரிமை கொண்டாடுகிறாள்
உயிரை பறித்து.
Friday, November 11, 2011
Tuesday, October 18, 2011
குறுங்கவிதை...
11. விரல்களின் வலுகட்டாய
சந்திப்பில் எழுத்துக்கள்
என் கற்பனைக்கு தீனிபோடுகிறேன்
இரையாய் என் வாழ்க்கை.
சந்திப்பில் எழுத்துக்கள்
என் கற்பனைக்கு தீனிபோடுகிறேன்
இரையாய் என் வாழ்க்கை.
குறுங்கவிதை...
9. கடைசியில் சம்மதித்துவிட்டாள்
காதலிக்க அல்ல.
அவள் கல்யாண பந்தலில்
முன்நின்று அட்சதை தூவ.
10. ' மாமா, மச்சான் எப்படிடா இருக்க...?'
கூவும் குரல்கள்
உறவுகளில் நட்பை காணாமல்
நட்பில் உறவுகளை தேடுகின்றனர்.
காதலிக்க அல்ல.
அவள் கல்யாண பந்தலில்
முன்நின்று அட்சதை தூவ.
10. ' மாமா, மச்சான் எப்படிடா இருக்க...?'
கூவும் குரல்கள்
உறவுகளில் நட்பை காணாமல்
நட்பில் உறவுகளை தேடுகின்றனர்.
குறுங்கவிதை...
7. காலம் என்னும் சூரிய கதிர்களால்
உன் நினைவு என்னும் பனித்துளி
மறைந்துவிட்டது. ஆம் என் நாட்களில்
நீ தொலைந்த நிமிடங்களானாய்.
8. மழை:
மரயிலைகளில் முத்துக்கள்.
மழைத்துளின் சரணாலயம்.
மரண வாசலில் உயிர் தண்ணீர் பெற்றேன்.
கரிசல் காட்டில் மழைத்துளி.
உன் நினைவு என்னும் பனித்துளி
மறைந்துவிட்டது. ஆம் என் நாட்களில்
நீ தொலைந்த நிமிடங்களானாய்.
8. மழை:
மரயிலைகளில் முத்துக்கள்.
மழைத்துளின் சரணாலயம்.
மரண வாசலில் உயிர் தண்ணீர் பெற்றேன்.
கரிசல் காட்டில் மழைத்துளி.
குறுங்கவிதை...
5. என் வாழ்க்கை கேள்விக்குறியாக
இருக்கும் போது அதை தாங்கி
நிற்கும் புள்ளியாக நிற்கிறாயே...?
6. நீ மட்டும் தான் கவிதையை
ரசிப்பவனா. நானும் ரசிப்பேன்
கவிதை நீயாக இருந்தால்.
இருக்கும் போது அதை தாங்கி
நிற்கும் புள்ளியாக நிற்கிறாயே...?
6. நீ மட்டும் தான் கவிதையை
ரசிப்பவனா. நானும் ரசிப்பேன்
கவிதை நீயாக இருந்தால்.
குறுங்கவிதை...
3.முடிவான ஒன்றை
முறியடிக்க முயலும்
முற்றுப் புள்ளி நான்.
4. நீ ஏறும் ஒவ்வொரு படிகளிலும்
கைப்பிடிச் சுவரை நம்பாதே
உன் கால்களை நம்பு.
முறியடிக்க முயலும்
முற்றுப் புள்ளி நான்.
4. நீ ஏறும் ஒவ்வொரு படிகளிலும்
கைப்பிடிச் சுவரை நம்பாதே
உன் கால்களை நம்பு.
குறுங்கவிதை...
1. கணவுகள் பலிப்பதில்லை ஆனால்
காண்கிறவர்கள் சலிப்பதில்லை.
2. மரணம்:
நிம்மதியை தேடி ஒரு ஜீவன்
நிரந்தர நித்திரையில்.
இதோ உன் நித்திரைக்கு
என் ஆழ்ந்த மொளனங்கள்.
காண்கிறவர்கள் சலிப்பதில்லை.
2. மரணம்:
நிம்மதியை தேடி ஒரு ஜீவன்
நிரந்தர நித்திரையில்.
இதோ உன் நித்திரைக்கு
என் ஆழ்ந்த மொளனங்கள்.
Subscribe to:
Posts (Atom)




