Showing posts with label பொது கவிதைகள். Show all posts
Showing posts with label பொது கவிதைகள். Show all posts
Monday, September 22, 2025
Tuesday, November 7, 2023
Monday, November 6, 2023
Monday, May 20, 2019
வெப்பம்
பெருமூச்சுதான் அனல் காற்றாய்
நமை எரிப்பது
காய்ந்த குளங்களில் மடியில் மடிந்திருக்கும் மீனின் உடலை புழுதிக்காற்று அடக்கம் செய்தது.
கோடை காலங்கள் நன்கொடையாகமல்
பறவைகளின் தீப்பிடித்த இறகுகளில் நாம் எரித்தெறிந்த தீக்குச்சிகளின் பங்கும் ஒட்டியுள்ளன
வீட்டிற்கொர் மரம் வளர்க்கும்
திட்டம் மறக்கப்பட்டு
வீட்டிலுள்ளோர் மரமாயினர்
தேக்கு, சந்தன, செம்மரங்களாய் சிலையாயினர்...
தட்டுகள் தங்கமாய் மின்னாவிடினும்
அதற்கான நோக்கம் அழியாமல் இருக்கட்டும்
விவசாயிகளின் கண்களில் மட்டும்
பெய்யும் மழை
இனியேனும் வானில் இருந்து
பொழியட்டும்
Sunday, October 25, 2015
சிறுபான்மையினர்
கடவுள் ஒதிக்கிவைத்த வாழ்க்கையா
இல்லை
சாத்தன் ஒ(ஓ)திக்கிவைத்த வாழ்க்கையா?
ஏதோ ஒன்று,
கடைசியில் தீர்மானம் ஆனது.
மொத்ததில் ஒதுக்கப்பட்ட வாழ்க்கை
ஒன்று சிறுபாண்மையினர் என்ற சிறைக்குள்,
இங்கிருந்த இவனுக்கும்
அங்கிருந்த அவனுக்கும்.
"இ" யும் "பா" வும் இனி
"இனிப்பா"கா முடியாது என்ற
எண்ணத் திரைக்குள் பொய்யாய் சிரித்தன.
Thursday, March 20, 2014
Saturday, March 15, 2014
மழைதுளியாய் நான்
கண்ணாடி
திரையில் மழை துளியாய் விழுந்தேன்.
காற்று
என்னும் விதி வழியே ஊந்துதலால் நழுவ
என்
வழியில் சில துளிகளின் சந்திப்பு
பெருக்கெடுத்தது
என் துளி நீர் உதவிய துளிகளின் வாயிலாக
அவர்களால்
நான் பெருக பெருக பயணமானேன்
என்
இலக்கு நோக்கி.
நன்றி
உரைக்க திரும்பிப் பார்க்கையில்
எதோ
ஒரு புதிய பனிதுளிக்கு வழியாகி கொண்டிருந்தது
என் வழித்தடம்.
Tuesday, October 1, 2013
இரயில் பயணம்
தண்டவளம் தரையிறங்கி ஓடும் நிழல் பயணம்
இறக்கும் காக்கை முதல்
இறவா ப்ளாஸ்டிக் பைகள் வரை
குப்பைகளை தன்னகத்தே கொண்டிருப்பினும்
அழுக்கு சுமந்து அமைதி காக்கும் பல பயணம்
நினைவு களைந்து நிஜத்தை தேடும் நீண்ட பயணம்
நிலத்தில் நீந்தி நிலவில் கால் பதிக்க
ஓங்கும் சாகச பயணம்
மரங்கள் பின்நோக்கி ஓடும்
கலங்களின் உண்மை பயணம்.
புதியவர் பழகியவர்களாக மாற்றும்
பழகியவர்களை புதியவர்களாய் ஆக்கும் விந்தை பயணம்.
மேற்கு நோக்கி
விடியலையும் கிழக்கு நோக்கி அஸ்தமனத்தையும்
புரட்டிடும் அசுரப் பயணம்
கருவுக்குள் தொடங்கி கல்லரைக்குள் முடியும் முன்
காலதேவனின் தொடர் பயணம்.
பயணங்கள் மாறலாம் பாதை பாராமலேயே....
Monday, August 13, 2012
இறப்பு
நான் இறக்க நினைக்கிறேன்
என் வாழ்க்கை இறந்துவிட்டதால்
மழைக் காடுகளில் சுற்றி திரிய
மண்வாசனை
நாசி நுழைய
பிறந்து கொண்டே இறக்கிறேன்.
பூவிறக்கையின் பனித்துளியாய் நழுவ
விரிந்த பறவையின் காற்றாய் தழுவ
பிறந்து கொண்டே இறக்கிறேன்.
மலையை பிரிக்கும் புனலாய் பாய
மேக மெத்தையின் வெண்மையாய் பரவ
பிறந்து கொண்டே இறக்கிறேன்.
பாதம் நனைத்த குளிராய்
பகலில் குளிக்கும் நிலவாய்
புத்துணர்வூட்டும் கதிராய்
இயற்கையின் மடியில்
இறந்து
கொண்டே பிறக்க இருக்கிறேன்....Wednesday, April 11, 2012
ஆசை
பறந்து பறந்து உலகை
ஒர் வலம். . . ஊர்வலம்.
சுதந்திர சாவி கிடைத்த சந்தோஷம்
எதன் மீதும் விறுப்புவெறுப்பில்லா நேசம்
ஒய்யாரமாய் பறந்து கையில் சிக்காமல்
எக்காளமிட்டு எட்டி செல்லும் வேகம்
நீண்டு பறந்து
நிலவு முட்ட ஆசை
நேரம்காலம் கடந்து
துள்ளலாய் பறக்கும்
நிற்காத வேலை
பனித்துளியிடம் ஒர் பதிவு
பணியாளனின் வியர்வையில்
ஒர் பதிவு
நிலத்திலும் ஒர் பதிவு
ஓடும் நீரிலும் ஒர் பதிவு
காற்றை கிழித்து பதிவிட
நூற்றுக்கணக்கில் முயற்சி
நீலவானம் தொட்டு
கதைகள் பேச நினைக்க
கார்மேகம் முட்டிற்று உன்னை
சிவ்வென்று பறந்து செல்லும்
காற்றாடியின் ஊடே
உன் சிறிய சிறகின் சாதனை
உன் பெயரில் வரும்
ஈகையை எடுத்துக்கொண்டேன்
தன் இச்சையை அனிச்சையாக தணிக்கை
செய்ய. . . .
ஆம் நானும் ஒர் ”ஈ” ஆக ஆசை.
ஒர் வலம். . . ஊர்வலம்.
சுதந்திர சாவி கிடைத்த சந்தோஷம்
எதன் மீதும் விறுப்புவெறுப்பில்லா நேசம்
ஒய்யாரமாய் பறந்து கையில் சிக்காமல்
எக்காளமிட்டு எட்டி செல்லும் வேகம்
நீண்டு பறந்து
நிலவு முட்ட ஆசை
நேரம்காலம் கடந்து
துள்ளலாய் பறக்கும்
நிற்காத வேலை
பனித்துளியிடம் ஒர் பதிவு
பணியாளனின் வியர்வையில்
ஒர் பதிவு
நிலத்திலும் ஒர் பதிவு
ஓடும் நீரிலும் ஒர் பதிவு
காற்றை கிழித்து பதிவிட
நூற்றுக்கணக்கில் முயற்சி
நீலவானம் தொட்டு
கதைகள் பேச நினைக்க
கார்மேகம் முட்டிற்று உன்னை
சிவ்வென்று பறந்து செல்லும்
காற்றாடியின் ஊடே
உன் சிறிய சிறகின் சாதனை
உன் பெயரில் வரும்
ஈகையை எடுத்துக்கொண்டேன்
தன் இச்சையை அனிச்சையாக தணிக்கை
செய்ய. . . .
ஆம் நானும் ஒர் ”ஈ” ஆக ஆசை.
Thursday, March 8, 2012
இறப்பு
Thursday, January 12, 2012
நான்!

காற்று புகாத மூங்கில்
அல்ல நான்.
புல்லாங்குழலாய் மாறியபின்னும்
இசை சேரா வெற்று
குழல் நான்!
கடல் சேர்ந்தும் சேரா
நுரை அல்ல நான்.
கரையை எட்ட துடிக்கும்
சிறிய அலை நான்!
பாரதியாய் பாடி
பெண்ணியம் வளர்க்கும்
பிறை அல்ல நான்.
பாச வலையால் பின்னப்பட்ட
கூட்டுப் புழு நான்!
பொய்மை மறைய போராடும்
புழுதி புயல் நல்ல நான்.
நிதர்சனம் தேடி நிம்மதி துலைத்த
மெய்மையின் பகுதி நான்!
நான் என்றும் நானாக
வாழ முயல்கிறேன்
மாற்றம் சகிக்கும் வானாக
நிலைக்க நினைக்கிறேன்.
Tuesday, December 13, 2011
தமிழ் மணக்கும் என் முத்தமிழ் மன்றமிது
கிளிஞ்சல்களின் சப்தங்கள் சங்கமித்த
என் கடற்கரையிது
குயில்களின் கிதங்கள் பரவிய
என் வனமிது
மணிகளின் ஓசைகள் நிரைந்த
என் கோயிலிது
கரவொலிகள் முழங்கிய
என் நகைச்சுவை கூடமிது
அறிவுரைகள் பகிரும்
என் முதிர்ந்த பள்ளியிது.
இரவுகளை ஒளிர்க்க செய்யும்
என் நட்சத்திர கூட்டமிது
வண்டுகளின் ரீங்காரங்கள் கரைந்த
என் பூந்தோட்டமிது
நெல் மணிகள் சிதரிய
என் வீட்டு களஞ்சியமிது
மழை கூட்டங்கள் சூழ்ந்த
என் கருநீல வானமிது
இதை விடுத்து வெருமைக்கு
நான் சென்றால் அங்கும்
ஏங்கி நிற்கும்
என் பாலைவனத்து மெளனமிது.
என் கடற்கரையிது
குயில்களின் கிதங்கள் பரவிய
என் வனமிது
மணிகளின் ஓசைகள் நிரைந்த
என் கோயிலிது
கரவொலிகள் முழங்கிய
என் நகைச்சுவை கூடமிது
அறிவுரைகள் பகிரும்
என் முதிர்ந்த பள்ளியிது.
இரவுகளை ஒளிர்க்க செய்யும்
என் நட்சத்திர கூட்டமிது
வண்டுகளின் ரீங்காரங்கள் கரைந்த
என் பூந்தோட்டமிது
நெல் மணிகள் சிதரிய
என் வீட்டு களஞ்சியமிது
மழை கூட்டங்கள் சூழ்ந்த
என் கருநீல வானமிது
இதை விடுத்து வெருமைக்கு
நான் சென்றால் அங்கும்
ஏங்கி நிற்கும்
என் பாலைவனத்து மெளனமிது.
Tuesday, November 15, 2011
பொய் முகம்

பொய்யும் புரட்டும் முகத்தில் தாண்டவமாடி
பொய்யென உரைக்கும் மெய்யாய்.
வெளிப்பட்ட வேஷம் துவேஷமாய் மாற
உரைந்து நிற்கும் உண்மையும்
இரக்க குணம் அரக்க குணமாய்
நெஞ்சை பிளந்து வெடிக்கும் நாற்புறமும்
காலம் முழுதும் கசையடியாய்
கனவுகள் தொலைத்த கருவறையாய்
மீந்து கிடக்கும்
எதை கொண்டு அதை அழிக்க
எதை கொண்டு நான் விழிக்க
என கெஞ்சி கேட்கும் மனிதமும்.
நீரூற்றி நெருப்பூற்றி
நெடுங்கால நினைவூற்றி
துவேஷம் வளர்ந்து நிற்கும் வேளையிலே
உண்மை உறுத்தலாய் உள்மனதை உடைக்கும்
திருந்திட திண்டாடும் மனதின் மூலையில்
பொய் முகம் அழியத்துவங்கும்.
நல்லதொரு ஆரம்பம்
நாள் முடிவில் துவங்கும்.
மாற்ற இயலாத மனதினை
மாற்றிவிட்ட பெருமிதத்தோடு
காலம் கடைசி நிமிடங்களை கடக்கும்...
Monday, November 14, 2011
அழைப்பிதழ் வேண்டுகோள்....!

மணமக்கள் தங்கள் திருமணத்திற்கு அழைக்கும் வரவேற்பு மடல்
எங்கள் மணவாழ்க்கையில் மணம் நிறைந்திட
மணத்துக்கொண்டிருக்கும் பூக்களே வாரீர்
எங்கள் வாழ்க்கைச் சக்கரம் நில்லாதோட
அச்சாணியாகிய சொந்தங்களே வாரீர்
நிலமகளும் இடம் தர, மலை மகளும் துணைவர
கலைமகளும் கை கோர்க்க வாழ்த்திட வாரீர்
இனிய தமிழில் இல்லறம் ஆரம்பிக்க
இந்த இனிய நாளில் வாழ்த்துப்பாட வாரீர்.
நீங்கா மணங்கொண்டு மாறா நற்குணங்ககொண்டும்
நிலைத்ததொரு வாழ்வைப் பெற வாழ்த்திட வாரீர்...!
Saturday, October 29, 2011
சாலையொர பூக்கள்

காலச் சுமை போல் பலரது
காலடி சுவடு உன் மீது.
வெய்யிலும், மழையும் இவ்வாறா
உன்னை ஆதரிக்க வேண்டும்...?
பெற்றவள் மடியில் ஏற்கவில்லை
பாரமெனகருதி மண்ணில் உதிர்த்துவிட்டாள்
இயற்கையாய் உன் வாசம்
உயிரிழக்கும் முன்,
வண்ணங்கள் தோய்ந்த உன் உடல்
வலுவிழக்கும் முன்,
எந்த செலவுமின்றி புதைக்கப்பட்டாய்
உற்றார் உறவினர்களாய் காரியம்
செய்த வாகங்களும்
மற்றபிற பயில்வான்களும்
நன்றி தெரிவித்துவிடு
நல்லவேளை உங்களில் ஒருவனாய்
பாவக்கணக்கில் மிதிபடாமல்
இருந்தேன் என்று....
Monday, October 24, 2011
விண்மீன்
Tuesday, October 18, 2011
முதிர்கன்னி
ஒற்றை மரமாய் வாழ்க்கை
உன் நினைவு என்னும் காற்றில்
ஊஞ்சலாட்டம் போடுகிறது.
சிட்டுக் குருவிகளின் சிறையில் இருந்தாலும்
அதனுடன் சிறகடித்து செல்ல வாய்பில்லை.
என் நிழல் கற்றைகளின் நடுவே
இளைப்பாறும் மான் கூட்டத்தில்
குதித்தோடி சென்று சுதந்திரம்
சுவாசிக்க வழியில்லை.
என்னை சுற்றியிருக்கும் ஈரத்தை எல்லாம்
வேர்களின் வழியே உறிஞ்சிவிடினும்
பழங்களை பரிசளிக்க விழைகிறேன் எப்போழுதும்.
பழுத்த மரம் தான் கல்லடிபடும் என்ற
பழமொழிக்குக்கூட விதிவிலக்கானவள்.
வருடங்கள் மட்டும் வழிவிட
வயதாகிப் போனவள்.
விழித்தெழு
விழி எங்கும் வீண்கவலை வித்திட்ட
கண்ணீர் முத்துகளை
வசந்த மாலையாக்கு
உழைப்பால் உயிர் கொண்டு
உதிர்ந்த உன் வியர்வையை
சூரியக் கதிர் கொண்டு
வைரக்கல் சாலையாக்கு
கன்னியமாய் கரைபுரண்டோடும்
உன் ரத்தத்தை கரைபடியவிடாமல்
கலங்கரை விளக்காக்கு.
உன்னில் நீயே உருவாக்கிக்கொள்ள முடியும்
உயர்ந்த மனிதனை
உதாரணத்தை உலகில் தேடாதே
உன்னில் தேடு.
Subscribe to:
Posts (Atom)














