Showing posts with label வசுவின் பாஸிடீவ் பக்கங்கள்( கதைகள்). Show all posts
Showing posts with label வசுவின் பாஸிடீவ் பக்கங்கள்( கதைகள்). Show all posts

Sunday, September 7, 2025

அன்பு

 டேய் கிளம்புடா, டைம் ஆச்சுல்ல...இன்னும் வேணு,குமார்,சாதிஷ்,தினேஷ் எல்லோர் வீட்டுக்கும் வேற போகனும்...நீயே இப்படி தூங்கிகிட்டு இருந்தா எப்படிடா அன்பு...என கதிர் கத்திக்கொண்டே வந்து அன்புவை எழுப்பினான். இவனும் சோம்பல் முறித்துக்கொண்டே “ஹும் உன் முகத்தில் விழிச்சுட்டேனா, போச்சுடா இன்னைக்கு என்ன ஆகப் போகுதோ.. என கிண்டலடிக்க, அன்புவின் அன்பான அம்மா அங்கு வந்து சேர்ந்தாள். சரி சரி, கிளம்பு, கூப்பிடறான்ல போய் சீக்கிரமா குளிச்சு கிளம்பரவழிய பாருடாஎன கூறவும் சிரித்துக் கொண்டே நண்பனை ஒரு இடி இடித்து குளிக்கச் சென்றான். “என்னைக்குமே உனக்கு விளையாட்டுத்தான் டா...என கதிர் சிரிக்க ஒருவழியாக அன்புவும் கதிரும் மற்ற நண்பர்களை அழைக்கச் சென்றனர்.

ஒவ்வொருவராய் கிளப்பிக் கொண்டு செல்வதற்குள் உச்சி போழுதாகிவிட்டது. ஆனாலும் கொஞ்சமும் வெய்யிலுக்கு நாங்களும் சளைத்தவர்களில்லை என்பது போல அவர்களது குறிக்கோளான கபடி ஆட்டத்தை ஆடதுவங்கினர். ஆடி முடித்து சிறிது சிரிப்பும் கும்மாளுமுமாக ஓய்வெடுக்கு போழுது, அந்த அணியின் தலைவனான அன்பு எல்லோரையும் பார்த்து, “வருகிற ஞாயிறு அன்று நடக்கயிருக்கிற போட்டில நாம ஜெயிச்ச கிடைக்கற பரிசு தொகைகாக மட்டும் ஆடாம், நம்ம ஊருக்கும் நமது டீமிர்க்கும் பெருமை சேர்க்க ஆடனும் சரியா...என கேப்டனுக்கேயுரிய கம்பீரத்துடன் கூற, குழுவினர் அனைவரும் உற்சாக்த்துடன் கைதட்டி ஆமோதித்தனர்.

அந்த இனிய நாளும் வந்தது, மிகக் கடுமையாக போறாடி வெற்றி கண்டனர் அன்பு குழுவினர். ரூபாய் 1 லட்சம் அணியின் தலைவனான அன்புவிற்கு அணியின் சார்பில் பரிசாக அளிக்கப்பட்டது. வந்திருந்த விருந்தினர் அரசியல் பிரமூகர்கள் ஊர் பெரியவர்கள் என அனைவரும் பாராட்டு மழை பொழிந்தனர். அடை மழைவிட்டது போல் அத்த்னை சலசலப்பிற்கு பிறகு அன்புவின் டீம் அவர்களது சொந்த ஊருக்கு திரும்பிற்று. வழியில் எல்லோரும் ஒரே சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயிருந்தனர் எனபதும் அந்த வெற்றியின் களிப்பு மீதமிஞ்சியே காணப்பட்டது என்பதும் அவர்களது பேச்சிலும் நடவடிக்கைகளிலுமே நன்றாக தெரிந்தது. இந்த ஒரு லட்சத்தை என்னவெல்லாம் செய்யலாம் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி ஐடியா கொடுத்துக்கொண்டே ஊர் வந்தைந்தனர்.

பிறகுதான் கவணித்தனர் அன்புவை மட்டும் காண முடியவில்லை. எல்லோருக்கும் ஒரே குழப்பமாகவும் பயமாகவும் உணர்ந்தனர். ஒவ்வொருவரும் தனித்தனியே அன்புவைப் பற்றி எண்ணமிட்டனர். ‘ஒரு வேளை பணத்துடன் வந்த அன்பு அப்படியே கம்பி நீட்டிவிட்டானா...?  என நினைத்த போழுதும் வெளியே காட்டிக்கொள்ளாமல் “பெரிய தொகையுடன் வந்த்தால் அவனை யாராவது ஏதாவது செய்திருப்பாங்களோஎன பொத்தம்பொதுவாக கூறிக் கொண்டார்னரே தவிர, ஒருவருக்கும் தான் மனதில் என்ன உண்மையாக நினைத்தோம் என வெளியே சொல்லிக்கொள்ள துணிவு வரவில்லை.

இரவு ஆனதால் வேறுவழியின்றி அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டியதாயிற்று. விடிந்ததும் ஒவ்வொருவரும் ஒரு புது பொருளுடன் அவரது குடும்பத்தாருடன் அன்புவின் வீட்டின் முன் நின்றிருந்தனர். அன்புவின் அம்மாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அன்புவை எழுப்பி வெளியே வந்து பார்க்கச் செய்தார். அன்புவை பார்த்தும் எல்லா நண்பர்களும் சேர்ந்து நன்றி கூற...கதிர் முன்னால் வந்து நின்று “ஏன் இப்படி செஞ்சே..? எங்க கிட்டயும் சொல்லியிருந்தா நாங்களும் சேர்ந்து வந்து வாங்கியிருப்போம்லஎன்றான். அதற்கு அன்பு,இல்லடா அன்னைக்கு ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் கூப்பிட போகும் போதுதான் தெரிஞ்சது யார் யாருக்கு அவங்க வீட்ல என்னென்ன தேவைனு, நாமபாட்டுக்கு வெற்றி களிப்பில அதை ஊதாரித்தனமா செலவு செய்ய நினைச்சோம். எனக்கு அது சரினு தோனலை. உங்க சந்தோஷ்த்தைவிட நம்மள பெத்தவங்க, கூடபிறந்தவங்க சந்தோஷம் முக்கியம்னுபட்ட்து அதான் தனியா போயே வாங்கி வந்துட்டேன். உங்கள கூட்டிகிட்டு போயிருந்தா அளவிற்கு மீறியோ குறைச்சோ இல்ல கூச்சபட்டுகிட்டு வாங்காமகூட இருந்திருவீங்கனு தான்.... என தயங்க, நண்பர்கள் அனைவரும் அன்புவை அன்புடன் அணைத்துக் கொண்டனர். நேற்று தப்பாக நினைத்த்தற்கு குற்ற உணர்வினால் மானசீகமாய் மன்னிப்பு கேட்டுக்கொண்டே....!

 

Saturday, November 28, 2015

பெண் தோழி


                                                                           (3) 

அவன் பார்க்கும் பார்வையை தாங்க முடியாமல் ரகு விழுந்து விழுந்து சிரித்த போது இன்னும் ஒன்றும் புரியாமல் குழம்பிப் போனான். பிறகு மெல்ல வாயை திறந்து, 'ரகு எனக்கு ஆச்சர்யமாக இருக்கு. நீயா? நீயா இப்படி பேசினே? எப்படி அந்த அழகான தேவதையை வேண்டாம்னு ஒதறிதள்ள முடிஞ்சது உன்னால? என்னால நம்பவே முடியலை. சாதாரண துணை நடிகையா இருந்தாலும் உனக்கு பிடிச்சுருச்சுன்னா விடமாடே, உடனே டேட்டீங் கிளம்பிடுவே. இன்னைக்கு என்ன ஆச்சு உனக்கு? நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்டியே இப்படி.' என  புலம்பாத குறையாக கூற,
அதற்குள் தனது வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்து முடித்துவிட்டு ரகு, "நான் என்ன முட்டாளா? இப்படி ஒரு ஃபிகர் தானா வந்தா சும்மாவிட? எல்லாம் காரணம் இருக்கு". என கூறும் போதே ஷாட் ரெடி என அழைப்பு வர இருவரும் போனார்கள்.

இங்கு ரகு வீட்டில்....
" அய்யோ அம்மாடி ரதி, என்னால அந்த ருத்திர மூர்த்தி எதுர்க்க நிற்க முடியலை, என்ன ஒரு ஆவேசம், கோவம். நான் எழுதினதை படிச்சதும்...அப்பாப்பா... என்னால இனி இந்த ஜென்மத்துல அவர் முன்னாடி போய் நின்னு நான் உங்க தீவிர விசிறினு சொல்லகூட முடியாத மாதிரி பண்ணிடியேடி, ஏன் தான் உனக்கு போய் நான் ப்ரண்டா ஆனேனோ தெரியலை போ..." என அந்த தேவதை பெண் ரதியிடம் கூறி அங்காலாய்த்தாள்.
ரதி,"இல்லடி மேகா, நீதான் நான் வச்ச டெஸ்ட்க்கு சரியான ஆள். உன் அழகுக்காக எத்தனை ஆம்பிளைங்க உன்ன பின்னாடி வந்திருக்காங்க. ஒரு நிமிடமாவது தடுமாறமாட்டாங்க. அதுக்குத்தான் அவரை பார்க்க உன்னை அனுப்பினேன். இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்குடி. அவரை பத்தி அங்க இங்க கேள்விபட்டது, பத்திரிகைல படிச்சதுனு ரொம்ப குழம்பி போயிருந்தேன். நல்ல வேளை என் புருஷன் உத்தமன் தான்" என கூறி இருவரும் சேர்ந்து சந்தோஷத்தை ஐஸ்கிரிம் சாப்பிட்டு கொண்டாடிக் கொண்டிருந்த அதே வேளையில்,

இடைவெளியின் போது மீண்டும் நனது ஹீரோ பேக் டு தி பாய்ண்ட் வந்து கேள்விகளை அடுக்க, ரகுவும் ஏளன சிரிப்புடன், " என் பொண்டாட்டிக்கு கொஞ்ச நாளா என் மேல சந்தேகம்னு அவ ஆக்ட்டிவிடீஸ்லயே தெரிஞ்சுகிட்டேன். இப்படி ஏதாவது செய்வானு எதிர் பார்த்தேன். அதான் நடந்துச்சு"  என்றான் கூலாக.
ஹீரோவும் விடவில்லை, "ஹே... அது சரி...இருந்தாலும்.... எப்படிடா இந்த ஃபிகர்னு கண்டுபிடிச்ச" என்றான்.
ரகு, " நாமெல்லாம் யாரு....?! கல்யாணத்தன்னைக்கு என் பொண்டாட்டியோட ப்ரண்ட்ஸ்லயே இவதாண்டா ரொம்ப அழகு. அன்னைக்கே பிராக்கேட் போட நினைச்சேன். முடியலை. ஏன்னா... மேடயவிட்டு எழுந்திரிக்க கூடாது, நீதான் கல்யாணப் பையனு அப்பப்போ வாத்தியார் நியாபகபடுத்திகிட்டேருந்தார். அதான் அன்னைக்கு மிஸ் ஆகிடுச்சு. மறக்க முடியுமா இவளையெல்லாம் ஹும்ம்ம்....சொல்லு? என கேட்டு சிரித்து, "ஆனா இவளையே என் அருமை பொண்டாட்டி என்கிட்டயே நடிக்க அனுப்பியிருக்கா பார். முட்டாள்... என மீண்டும் உறக்க சிரிக்க, ஷாட் ரெடி என கூவிய குறலுக்கு அங்கும் நடிக்க சென்றான் அந்த அபார நடிகன்.
                                                               
                                                                        முற்றும்.

Monday, November 23, 2015

பெண் தோழி

                                                                              (2)

இந்த முறையும் இந்த படத்தின் இளம் ஹீரோ டிப்ஸ் கேட்டுக் கொண்டிருக்கும் போது தேவதையாக ஒரு பெண் ரகுவிடம் ஆட்டோகிராஃப் கேட்க, அவனும் போட்டு கொடுத்தான். திருப்பி கொடுக்கும் போதுதான் பார்த்தான், அதில் 'இன்று டேட்டிங்கிற்கு போகலாமா?' என்றிருந்தது.  அதை பக்கதிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த ஹீரோவிற்கு பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது என எண்ணி ரகுவை பார்த்து அசட்டு சிரிப்பொன்றை உதிர்க்க, அதை பொருப்படித்தாமல் ரகு வந்த தேவதையை மேலும் கிழும் பார்த்தான்.

உடனே தைரியம் வந்தவளாக எழுதியதை வாய்விட்டே கேட்டாள். ரகுவிற்கு கோபம் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை.  " என்ன நினைச்சுகிட்டு இப்படி ஒரு வார்த்தையை என்னை பார்த்து கேக்கறீங்க? மரியாதை கெடறதுக்கு முன்னாடி இங்கிருந்து போய்டுங்க" என அவளுக்கு மட்டும் கேட்கும் அளவிற்கு கடுமையாக கூறினான்.  அவளது முகம் வெளுத்து ப்ரம்மை பிடித்தவள் போல் சிலையாக நிற்க, மேலும் ரகு " என்ன ஒரு தடவை சொன்னா புரியாதா? போங்க... எனக்கு கல்யாணமாயிடுச்சு... வீட்டல் பொண்டாட்டி இருக்கா. வேணும்னா நான் அவளை கூட்டிகிட்டு டேட்டிங் போவேன். பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணறவன் நான் இல்ல. புரியுதா?!
உங்கள மாதிரி ரசிகைனு சொல்லிகிட்டு வர்ர எந்த பெண் தோழியும் வேண்டாம் எனக்கு." என ஆத்திரமுடன் கத்தி தீர்த்த பிறகே அவள் ஓடாத குறையாக அங்கிருந்து சென்று காணாமல் போனாள்.

இதை எல்லாம் வெகு அதிர்ச்சியோடும் ஆச்சர்யத்தோடும் பார்த்துக் கொண்டிருந்த ஹீரோவிற்கு என்ன கேட்பதென்றே தெரியவில்லை. ரகுவையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.
                                                                                                         தொடரும்....

Sunday, November 22, 2015

பெண் தோழி

                                                                            (1)
அன்று காலை முதலே ஒரே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள் ரதி.  இன்று கடைசி நாள் (க்ளைமேக்ஸ்) சூட்டீங் சீக்கிரம் போகவேண்டும் என திரையுலகில் பிரபல காமெடியனாக உருமாறிவிட்ட தனது  கணவன் ரகு சொன்னது நினைவிற்கு வந்தது முதல் அவனுக்கு முன்னதாகவே எழுந்து கணவனுக்கு தேவையானவற்றை எடுத்து வைப்பதில் மும்முறமானாள்.

காலை 8 மணி என கடிகாரம் மணி அடித்து தன் கடமையை ஆற்றிய போதுதான் நினைவு வந்தவளாக ரகுவை எழுப்பும் தன் கடமையை ஆற்ற போனாள். அவசரமாக ஓடிவந்து கட்டிலில் உருளும் கணவனை " எழுந்திரிங்க நேரம் 8 ஆச்சு ஹும்ம்ம்.... சீக்கிரம்" என அவசரம் காட்ட உடனே ஷாக் அடித்தவன் போல் துள்ளி குதித்து உட்கார்ந்து அவளை முறைத்தான். பிறகு கொஞ்சியும் கெஞ்சியும் ஒரு வழியாக அவனை வேலைக்கு அனுப்பிவைத்தாள். 

வழக்கம் போல் இந்த படத்திலும் ரகுவே காமெடியன் மற்றும் சத்தமில்லாத ஹீரோ. இந்த படத்தின் நிஜ ஆனால் பெயருக்கு ஹீரோ கூட சீக்கிரம் வந்து இவனுக்காக காத்திருக்க, கடைசி சீனும் இவன் தயவிலேயே முடியும் சூழ்நிலை. ஹீரோவின் பன்ச் டயலாக்கைவிட, இவனது பன்ச் டயலாக்கிற்காக காத்திருந்தது மொத்த யூனிட்டும். இப்படியிருக்க, பெண்களிடம் எந்த ஆணிற்குத்தான் ஈர்ப்பு இல்லை. நமது காமெடியன் இதில் எப்போதும் சோலோ ஹீரோ. யாரையும் கூட்டு சேர்ப்பதுவும் இல்லை நம்புவதுமில்லை. இதனால் பல ஹீரோக்களே இவனிடம் வந்து சில பல டிப்ஸ்களை வாங்கி செல்வர். பதிலுக்கு அவர்களின் நெருங்கிய நட்பும் படங்களும் பரிசாக இவனுக்கு.  
                                                                                                                      தொடரும்...... 

Sunday, September 29, 2013

நிசப்தத்தின் சப்தம் (அத்தியாயம் 5)

குழந்தை தொடர்ந்தது, “ இன்னும் உன் அன்பும், உன் மனைவியின் அன்பும், சுற்றுபுற சூழ்நிலையின் காரணமாகவும் நான் கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் மறந்துடுவேன். அப்பறம் என் மாந்திரீக சக்தி, அதுல நான் கொடிகட்டி பறந்த காலம் கரிந்தே போய்டும்.நீ எனக்கு உதவி செஞ்சா நான் உனக்கும் உதவுவேன் என்ன சொல்லறே? என்றது.

உடனே தருண் “இல்ல... இல்ல என்னால உனக்கு help  பண்ண முடியாது. இது தப்பு. உலகத்தோட ஒத்துபோ அதுதான் நியாயம்எனவும்,

குழந்தை இனி உன்கிட்ட பேசி பலனில்லை, உன்கிட்ட சொன்னதால உன்ன அழிசாத்தான் எனக்கு நிம்மதி, இல்லைனா உன்னால என் ரகசியம் எல்லாம் வெளிய வந்திடும்”  என ஆக்ரோஷத்துடன் சொன்னது.

தருண், “ முடியாது நீ என்ன மிறட்டினாலும் நான் பயப்படமாட்டேன். நீ என்னை அழிச்சு இந்த உலகத்தோட நியதியை மாத்திறத்துக்கு முன்னாடி, நான் உன்ன அழிச்சுடறேன்.என ஆவேசத்துடன் அதன் கழுத்தை நெறிக்க முற்பட்டான்.

அப்போழுது ஏதோ ஒன்று தன் மண்டையை பலமாக தாக்கியதாய் உணர்ந்து திரும்பியவன் அதிர்ச்சியிலும் வலியிலும் உரைந்தே போனான் ஆனால் அவன் ரத்தம் மட்டும் உரையாமல் ஈரமாக்கியது அவனது கழுத்து பகுதியினை.

“சுஜா...நீயா என்னை ஏன் அடிச்சேஎன பலவீனமாய் கேட்டவன் கிட்ட்தட்ட மயக்க நிலைமைக்கு சென்று கொண்டிருந்தான்.

“ஏன்னா இப்போதைக்கு இந்த இரும்பு தடிதான் கிடச்சது எனக்கு. என்ன தைரியம் இருந்த நான் அவ்வளவு சொல்லியும் உங்க பைத்தியகாரதனத்தால், நம்ம குழந்தையை சாகடிக்க நினைப்பீங்க. இப்படிபட்ட புருஷனே எனக்கு வேண்டாம். எல்லாத்தையும்விட ஒரு தாய்க்கு அவ குழந்தைதான் முக்கியம்னு,நாளைக்கு இந்த ஊர் உங்க நிலைமையைப் பார்த்து தெரிஞ்சுக்கட்டும்.என மேலும் தாக்கிவிட்டு வேகமாக குழந்தையை தூக்கி கொண்டு வெளியே சென்றாள், குழந்தையும் அந்த கிண்டல் சிரிப்பு மாறாமல் இவனயே பார்த்துக்கொண்டு சென்றது.

எரிச்சலும் வலியாலும் “சுஜா...சுஜாதா... அது சரியில்லை....சுஜா...அது குழந்தையே இல்லைஎன கத்தலும் முனங்கலுமாக எழுந்திரிக்க முற்பட்டான்.


ஒரே கும்மிருட்டாக இருந்த்து. “என்னங்க...என்னங்க ஆச்சு?! ஏன் இப்படி ஒளரிகிட்டு இருக்கீங்க...எழுந்திரிங்க, என்ன ஆச்சு உங்களுக்குஎன லைட்டை ஆன் செய்ய, சுற்றும் முற்றும் குழந்தையை தேடினான். பின் சுஜாதாவின் குறல் அருகில் கேட்டதும் திரும்பி பார்த்தான். பிறகுதான், தான் தன் படுக்கை அறையில் உள்ளோம் என உணர்ந்து சுஜாதாவையே வெறித்து பார்த்துகொண்டிருந்தான்.

திரும்பவும் சுஜாதா அவனை நன்றாக உலுக்க, “ஓ...எல்லாம் கெட்ட கனவாஎன பெருமூச்சு ஒன்றைவிட்டான்.ஆனாலும் கழுத்திலும் தலையிலும்  உள்ள ஈரபசை பயமுறுத்த் திடுக்கிட்டு தடவி பார்க்க,
சுஜாஅதுசரி தண்ணி பாட்டில் எடுக்கும் போது டொம்முன்னு உங்க மண்டைல விழுந்து மூடி திறந்துடுச்சு, சரி எழுப்பி சொல்லலாம்னு பார்த்தா

இப்படி அலற்றீங்களே?!என சுஜா கூறவும், நிம்மதியான் புண்சிரிப்போடு “அப்பாடா எனக்கு இப்போதான் நிம்மதியா இருக்கு என அவளை அனைக்க போக, அப்போழுது சுஜாதா “ ஏய்...வேண்டாம் வேண்டாம். இப்போ நான் இரண்டு ஆளாக்கும்எனவும் பீதி நிறைந்த அவன் விழிகளுக்குள் குழந்தை அதே கிண்டல் சிரிப்புடன் கண்ணடித்தது. 


முற்றும்.

Wednesday, September 18, 2013

நிசப்தத்தின் சப்தம் (அத்தியாயம் 4)

என்ன சொன்னீங்க? நம்ம குழந்தையை போய் கொண்ணுடுவேன்னா சொன்னீங்க!?அத்திரத்துடன் கேட்டாள் சுஜாதா.
இல்...இல்ல... இல்ல சுஜா நான்... வந்து... எனக்கு எப்படி குழந்தையை சமாதனபடுத்தறதுன்னு தெரியல. அதான் என தினறி தினறி பேசி முடித்தான்.
இருந்தும் ஆவேசம் வந்தவளாய் பால் பாட்டிலுடன் வந்து நங்கென்று அவன் தலையில் வைத்து, “ இதோட இப்படி பேசுறத நிறுத்திருங்க, இல்ல நான் ராட்சசியா மாறிடுவேன்”, என்று குழந்தையை தூக்கிக்கொண்டு அப்பால் சென்றாள்.
இப்ப மட்டும் என்னவாம்என முனு முனுக்க, அதை கண் அடித்து சிரித்து வெறுப்பூடிடியது குழந்தை. இனியும் அதன் அட்டகாசம் பொறுக்காது என திட்ட்மிடலானான் தருண்.

சுஜா கடைவீதிக்கு சென்றிருந்த நேரம் பார்த்து,

“உட்காரு உன்கிட்ட பேசனும்என்றான் தருண்.

எனக்கு தூக்கம் வருது இப்போ என்னால் உட்காரமுடியாது. ஏன்னா நான் கை கொந்தே தம்பிஎன பல்லில்லா ஈரை காட்டி கேலி செய்த்து குழந்தை.

“சரி படுத்துகிட்டே பதில் சொல்லு எப்படி இருந்தாலும் எனக்கு நீ பேசற ரகசியம் தெரிஞ்சுக்கனும்என ஆவேசமுடன் கூறினான் தருண்.

இனி இவன் விடாகொண்டனாகிவிட்டான் என தெரிந்த்தும் குழந்தை,
“சரி ஆனா நார் கிட்டையும் சொல்ல கூடாது சரியா? இந்த டீலுக்கு ஓகே வா? என கிண்டல் அடித்த்து.

சாதுர்யமாக எரிச்சலை அடக்கிக்கொண்டு தருணூம், “சரி, ஓகே....ஓகே....சரி. விஷயத்துக்கு வாஎன்றான்.

அது என்னப்பா... சரி ஓகே....சரி எல்லாம் ஒண்ணுதானே?! இப்போ மாத்திட்டாங்களா என்ன? என மேலும் வெறுப்போற்ற எரிச்சலின் உச்சத்திற்கே போய்விட்டான் தருண் ஆனாலும் பல்லை கடித்துக்கொண்டு இந்த அதிசயத்தை, ரகசியத்தை இதனிடமிருந்து கரப்பது என முடிவு செய்து திரும்பவும் அதே கேள்வியை அமைதியாக வினவினான்.


“ஹேய் சரி உன் ஜோக்...ஹா...ஹா...ஹா...சிரிச்சுட்டேன் போருமா? இப்போ சொல்லு, என கேட்க, “எதை கொல்ல சீ...சீ...சொல்ல சொல்லறே? என புரியாத்து போல விழித்த்து குழந்தை.
“உம்ம்ம்ம்...சரி, உன்கிட்ட முன்னாடியே கேட்டேன். எப்படி நீ இந்த் வயசிலேயே பேசற, உனக்கு மட்டும் அப்படி ஒரு சக்தியா? என் குழந்தைக்கு இப்படி ஒரு சக்தியிருந்தா எனக்கு பெருமைதானே....? நீயே சொல்லு. அதனால் எல்லாத்தையும் அழகாக நீ சொல்லுவியாம் நானும் நீ பேசறதையே ஆச்சர்யமா பார்பேனாம் சரியா? எங்க சொல்லு...சொல்லு பார்க்கலாம்? என குழய,
குழந்தையிடம் ஓர் நக்கலான சிரிபொன்று உதிர்ந்த்து. தொடந்து, “சரி நீ இவ்வளவு ஆசபடுற, நான் சொல்லறேன். எனக்கு இன்னும் பழய் ஜென்மத்து ஞாபகம் போகல, எல்லா குழந்தைக்கும் இருக்கும் ஆனால் நான் ஒரு மாந்திரிகன். அதனால என்னால நினைக்க மட்டும் இல்ல பேசவும் முடியுது.
நான் இந்த உடல்ல பிறந்தேனோழிய எனக்கு பழய சக்தி இன்னும் இருக்கறத நான் இழக்க விரும்பல.

தன்னையும் மறந்து குழந்தை சொல்வதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் கண் இமைக்க மறந்தவனாய் அந்த மாந்திரிக குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தான்.

Wednesday, October 31, 2012

நிசப்தத்தின் சப்தம்(அத்தியாயம் 3)


ஏய் என்ன கிண்டலா இருக்கா உனக்கு?என்றதும். ஆமா, உன்ன மாதிரி பைத்தியக்காரனை பார்த்தா பின்ன எப்படி இருக்குமாம்?என பதில் வர திரும்ப கத்த ஆரம்பித்தான். “ஹேய் சுஜா... சுஜா ப்ளீஸ்டி வா இங்க வந்து பாரு. திரும்ப பேசுதுடி பாரு, பாரு என கத்த, சுஜாதா எரிச்சலுடன் அங்கு ப்ரசன்னமானாள்.அய்யோ, உங்க உளரலுக்கு ஒரு அளவே இல்லையா?என கூறும்போதே குழந்தை தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்து “தயவு செய்து சத்தம் போட்டு தூங்கற குழந்தையை எழுப்பிடாதீங்கஎன கூறி கையுடன் அவனை அந்த அறையைவிட்டு நெட்டி தள்ளினாள்.

இரவில் சினுங்கல் சத்தம் கேட்டு தருண் எழுந்து பார்க்க அது குழந்தையிடம் இருந்துதான் வருகிறது என்றது ஏன் வம்பு என எண்ணி திரும்பி படுக்க எத்தனித்தான். உடனே சுஜாதா “ஏன் போய் குழந்தையை தூக்கி என்னன்னு பார்க்க கூடாதா?என கோவமாக கேட்டுக் கொண்டே குழந்தைக்கருகில் சென்று சமாதனபடுத்த முயல அது அழ ஆரம்பித்துவிட்டது. “ சரி, பசிக்குது போல குட்டிக்கு இதோ வரேன் அம்மா....என குழந்தையை சரேலென தருண் மடியில் கிடத்திவிட்டு சமையல் அறைக்கு சென்றாள்.

இவனும் ஓர் குழந்தை பாவம் அழுகிறதே என்ற பரிதவிப்பில் அதை சமாதனப்படுத்த முயல தோளில் போட்டு கொண்டு தட்டி “ஜோ...ஜோ...என ஏதோ பாடுவதாக முனங்க, “ஓய் போதும் நிறுத்து. நீ பாடறீயா இல்ல அழறியா? எனக்கு ஒன்னும் தூக்கம் வரல. ரொம்ப பசிக்குதுஎனவும், “அதான் பால் கொண்டு வர போய்ருக்கால்ல கொஞ்சம் பொருத்துக்கோஎனதெளிவாக  பதில்  தருண் சொன்னான்.“ஹும்ம்ம்...பரவாயில்லையே பயம் போய்டுச்சா?! நல்லா பேச ஆரம்பிச்சுட்டியே என கிண்டல் செய்த்து குழந்தை. “போரும்...போரும்... வாய மூடு இதுக்கு மேல பேசற வேலை எல்லாம் வச்சுகிட்ட உன்ன கொன்னுடுவேன் ஜாக்கரதைஎன ஆவேசமாக சொல்லிக்கொண்டிருக்கும் போதே சுஜாதா பால் புட்டியுடன் உள்ளே வர, இவனது வார்த்தைகளை கேட்டு அதிர்ந்தவளாய் வெறித்து பார்த்துக்கொண்டு நின்றாள்.

Monday, July 2, 2012

நிசப்தத்தின் சப்தம்(அத்தியாயம் 2)


உள்ளிருந்து சிரிந்த முகமாய் சுஜாதா வெளியே வந்தாள். “என்னங்க ஏன் இவ்வளவு லேட்டா வரீங்க? சரி வந்தது வந்தீங்க ரொம்ப நேரமா இங்கயே நின்னுகிட்டு இருக்கீங்க, நீங்களும் வருவீங்க வருவீங்கனு பார்த்தா, சரியான ஆளுங்க நீங்க..... நீங்க தெரு முக்குக்கு வரும்போதே பார்த்துட்டேன். உள்ளே நீங்களே வரலைன்னதும் நானே சர்ப்ரைஸ் கொடுக்க வெளியே வந்தேன். என ஒரே மூச்சில் கூறி முடித்தபின்னும் அவள் சுஜாதா தானா என சந்தேகமும் துணைக்கு ஆள் கிடைத்ததே என்ற சந்தோஷமும் வர, அப்படியே அயாசமாக அவளை கட்டிபிடிக்க எத்தனிக்க, “ஹேய் வேண்டாம் வேண்டாம். இப்போ நான் இரண்டு ஆளாக்கும்”, என கூற இரட்டிப்பு சந்தோஷத்தில் துள்ளினான்.


சில மாதங்களுக்கு பிறகு...

“ஹும்... கொஞ்சம் குழந்தையை பார்த்துக்கொங்களேன்என்று கூறி குளிக்க சென்றாள் சுஜாதா. குழந்தை கொள்ளை அழகாக தனது பொக்கை வாயை காட்டி சிரித்தது இவனை பார்த்து. “ஹே என் அச்சு குட்டி, பட்டு குட்டி, அம்மு குட்டிஎன கொஞ்ச ஆரம்பித்தான். “ஏய், போரும் போர் அடிக்குது. ஒரே மாதிரி கொஞ்சாதேஎன்ற குரல் வந்த திசையை பார்த்து அதிர்ச்சியடைந்தான் தருண். உட்கார்ந்த வாக்கில் பூகம்பம் வந்ததாக் உணர்ந்தவன் குழந்தையின் முகத்தையே உற்று பார்த்து திருதிருவென விழித்தான். மிக கடுப்புடன் “அட, ஏன் இப்படி பார்க்கிற?! இதுவரைக்கும் குழந்தைகளை பார்த்ததே இல்லையா?என அலட்ச்சியமாக கூறியது குழந்தை. உடனே தருண் திக்கி தினறி என்ன நடக்கிறது இங்கே என குழம்பி, ‘ஏய்...நீ... நீ...பே...பேசற? எப்படி...? என்று ஒரு வழியாக முடித்தான்.

இது என்ன வம்பா போச்சு. நான் சாகர வரைக்கும் நல்லாத்தான் பேசிகிட்டு இருந்தேன். ஏன் இப்ப என்னல பேச முடியாதா? என கேட்டது தான் தாமதம் உடனே அலறி அடித்துக்கொண்டு குழந்தையை படுக்கையிலேயே தொப்பென்று போட்டுவிட்டு குளியலறை பக்கம் ஓடினான்.” “ஹே...சுஜா...சுஜா... கதவை திறடி, கதவை திற... என உளரலாக கத்த, “ஏங்க, இப்படி கத்தறீங்க, போங்க போய் வேலைய பாருங்க, என்னமோ இப்பத்தான் புதுசா கல்யாணம் ஆனமாதிரி நடந்துக்கறீங்க. போய் குழந்தையை கவனிச்சுக்கோங்க முதல்ல” என திட்டி தீர்த்தாள்.
‘ஏய் இல்லமா... நம்ம குழந்தை பேசுது எனவும். ஹும்ம்... விளையாடாதீங்க நீங்க என்ன சொன்னாலும் நான் கதவை திறக்கமாட்டேன். நிம்மதியா குளிக்க கூட விட மாட்டீங்களா? குழந்தையை இரண்டு நிமிஷம் தான் பார்த்துக்க சொன்னேன். அதுகூட முடியலையா? என பேசிக் கொண்டே போக, “ஏய் அது பேசுதுடி பேசுது புரியுதா? நான் ஒன்னும் விளையாடல. பயந்து போய் உன்கிட்ட வந்து சொன்னா. நீ வேற.... வெளில வா சீக்கிரம். நான் உண்மை என்னன்னு காட்டறேன் என்றான்.

“ சரி...சரி... இருங்க வரேன். நம்ம குழந்தை பேசுறதை நானும் கொஞ்சம் கேட்டு சந்தோஷபடறேன்.என கிண்டலடித்துக் கொண்டே வந்து குழந்தையை தூக்கி கொஞ்சினாள். அது சமத்தாக தூங்கிக் கொண்டிருந்ததால் சின்ன செல்ல சினுங்கல் ஒன்றை உதிர்க்க. “ஆஹா...ஆஹா... நம்ம குழந்தை சூப்பரா பாட்டு பாடுதுல.. என மேலும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிவிட்டு சமயலுக்கு தாளிக்க எண்ணெய் எடுக்க சென்றாள் நமுட்டு சிரிப்புடன். ரொம்ப சந்தோஷம்டி, ரொம்ப சந்தோஷம். என வெறுப்புடன் குழந்தையை திரும்பி பார்க்க அது இவனை பார்த்து கண் அடித்து சிரித்தது. 

Sunday, June 24, 2012

நிசப்தத்தின் சப்தம்


தருண் அந்த அமானுஷ்ய புத்தகத்தில் முழ்கிய அந்த நள்ளிரவு நேரம் அவனுக்குள் திகில் பரவத் தொடங்கியது. எந்த ஆன்மாவும் உயிர் பிரிந்தபின் அழிவதில்லை. அதனதன் பாவ புண்யத்திற்கேற்ப அடுத்த பிறவிக்காக தயாரகுகிறது. அதன் மறுபிறப்பிலும் சில மாதங்களுக்கு அதன் பழைய நியாபகங்களும், நினைவுகளும் தொடர்கின்றன....இவ்வாறு புத்தகம் முழுவதும் ஆவிகள் பற்றிய தகவல்கள் அடங்கியிருந்தன.

தருண் இதையெல்லாம் ஏன் படித்தோம், அதுவும் இந்த நள்ளிரவில் மனைவி சுஜாதா இல்லாத நேரத்தில் என மிக பயந்து போயிருந்தான். மனைவி இரண்டு நாட்களுக்கு தனது பாட்டியின் உடல் நலன் குன்றிய காரணத்திற்காக செல்ல, ட்ரைனில் ஏற்றிவிடச் சென்றவன் சில புத்தகங்களை வாங்கச் சென்று இந்த ஆவிகளை பற்றிய புத்தகம் கண்ணில் படவே ஆர்வ மிகுதியால் வாங்கி வலிய கிலியை பற்றினான்.

எவ்வளவு தான் புரண்டுபடுத்தும் தூக்கம் வர மறுத்தது. எவ்வாறு பின் தூங்கி போனான் என அறியும் முன்னே காலையும் வந்துவிட சுறுசுறுப்பாக பழைய இரவின் தாக்கம் வராமல் பார்த்து கொண்டு இயல்பாக அலுவலகத்திற்கு கிளம்பினான். இருப்பினும் மனதின் ஓரத்தில் இன்று இரவை கழிப்பதைப் பற்றி பயம் பரவிக்கொண்டுதான் இருந்தது. வீட்டிற்கு யாரையேனும் நண்பர்களை அழைத்து செல்வோமா என எண்ணினான். ஆனாலும் விதி விளையாட அவனுடன் ஒருவரும் வர இயலாமல் போய், பேய் பயம் தலைக்கேறியது, சரி சினிமாவிற்கு சென்று பொழுதை கழித்து பின் வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்தான்.

பின் வீட்டிற்கு செல்கையில் பின்னிரவாகிவிட்டது. பயத்துடனேயே கதவில் கை வைத்தவனுக்கு வீட்டில் யாரோ இருப்பது போல் தோன்ற சாவியில்லாமலேயே கதவும் திறந்து கொள்ள பயத்தின் உச்சம் அதிகரிக்க இதயத்தின் சப்தமே முரசொலி போல அதிர்ந்து கேட்டு அவனை மேலும் பயமுறுத்தியது. ஹாலை கடக்கையில் நிச்சயமாகிவிட்டது, படுக்கை அறையில் யாரோ இருக்கிறார்கள் என அருகில் செல்லச் செல்ல மல்லிகை மணமும் அதிகரிக்க,உள் இருந்து வரும் மின் விசிறியின் சப்தமும், ஹாலில் மயான அமைதியின் ஊடே எழுந்த சுவர் கடிகாரத்தின் சப்தமும் சத்தியம் செய்தது இது பேயின் நடமாட்டமென. இவையனைத்தும் சேர்ந்து அவனை விரைவில் செயல்படவிடாமல் பயத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்ல, தடாலடியாக் கதவு தானாக திறந்து கொண்டது அவனை அதிர்ச்சியின் விளிம்பிற்கு செல்லவைத்து ஒர் அடி பின்னால் நகர்ந்தான்.

Sunday, April 22, 2012

தோழி

அப்போதுதான் எனக்கு ஆத்திரம் தாங்காமல் யாருடி அவ்ளோ பெரிய ஆளு? நான் பேசறேன். ஒத்துக்கொண்டால் சரி இல்லை என்றால் அப்பாவின் மானத்தை காப்பாத்த மண்டபத்திற்கு போ என சொன்னதும் அவள் என்னடி இப்படி கேட்கற உனக்கு தெரியாதா நான் பி.டியை விரும்புவது என்றாள்.

எனக்கு தரை நழுவியது. பூகம்பம் வந்தது போலவே தோன்றியது. என்னால் நம்ப முடியவில்லை என் தோழி இவள் நான் விரும்புபவனையா காதலிக்கிறாள் அவனுக்காகவா இவ்வளவு பாடுபடுகிறாள் என்றதும் மனதில் இருந்த ஏதோ ஒன்று கழன்று விழ உணர்ந்தேன்.

 இப்பவும் ஒர் வாய்ப்பு இவள் அப்பாவுடன் சமாதானம் செய்து மண்டபத்திற்கு செல்ல சொன்னால் இவளால் ஒன்றும் செய்ய இயலாது அடுத்து அவள் அப்பாவின் பிடிவாதத்தால் திருமணம் நடந்துவிடும். பின் நமக்கான பாதை வெளிச்சத்துடன் காணப்படும் என்று எண்ணத்திற்கூடே மனசாட்சி மனதிலிருந்து எட்டிபார்க்க, நானே பி.டிக்கு ஃபோன் செய்தேன். இவளுக்காக வார்த்தை வராமல் பேசினேன். பேச பேச என்னையறியாமல் என் தோழிக்காக பரிந்து பேச ஆரம்பித்தேன். கடைசியில் நேரில் சென்று பேச அவர் சம்மதித்தார். அதே திருமண்டபத்தில் அவள் கழுத்தில் இவர் கட்டிய தாலியுடன் சிரித்த முகத்துடன் என்னை பார்த்தாள்.

 மண்டபத்திலிருந்து விடைபெற்று பழய நினைவுகளிலிருந்து விடுதலை பெற்று மன நிறைவுடன், தெளிந்த வானத்தை பார்த்தேன். மனதின் பிரதி பிம்பமாய் தோன்றியது. இவள் என்றும் என் தோழி. மாற்றமில்லாமல் என்றும் தோழமையுடன் நானும்.

Thursday, April 5, 2012

தோழி

5 மாதங்கள் ஓடிவிட்டன நானும் சுகன்யாவும்(சுடிதார் டீச்சர்) சிநேகமாகி அவள் மூலமே அனைத்தையும் அறிந்தேன். அவளுக்கு மட்டும் எப்படி அனைத்தும் தெரியும் என்றால் அந்த சின்ன சார் இவளது குடும்பத்தாருக்கு குடும்ப நண்பர். இவர்தான் ஸ்கூல் கரஸ்பாண்டண்ட் அப்பறம் அந்த நெட்டை பெரிய சார் பிரின்சிபல். கேட்டவுடன் சிரிப்புத்தான் வந்தது பிறகு அவர்களது முயற்சியும் நிர்வாகத்திறனும் கண்டு அசந்து போனேன். இந்த 5 மாதங்களின் மிகவும் கவர்ந்தவர் பெரிய சார் அவருக்கு நாங்க பெரிய தம்பி எனவும் இவரைவிட குள்ளமாக இருந்ததனால் சின்ன தம்பி எனவும் கோட்வேட் வைத்து கூப்பிட்டோம் எங்களுக்குள். பி.டி (பெரிய தம்பி) மனதில் குடிகொள்ள ஆரம்பித்தார் சிறிது சிறிதாக.

மாதங்கள் ஓடின அடுத்த மே மாதம் வரவும் எங்கள் வீட்டில் எல்லோரும் டூர் போவோம் என கேரளாவிற்கு சென்றோம். மிக ஆனந்தமான நாட்களாக கழிந்தன. எல்லா படங்களுடன் ஆசையாக எனது ஸ்கூல் மிஸ்களுக்கு காட்ட முக்கியமாக பி.டிக்கு காட்ட அவற்றை எப்படி எல்லாம் கமண்ட் அடித்து ரசிப்பார் என ஆவலாக ஊர் திரும்பும் நாளை எதிர்பார்த்திருந்தேன்.
நாளும் வந்தது.எனது க்ளாஸுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இருப்பதால் புகைப்பட ஆல்பமுடன் சென்றேன். எல்லா மிஸ்ஸுக்கும் காண்பித்தாயிற்று பி.டியிடமும் காண்பித்து ஒவ்வோன்றாக ரசிக்கும் அழகையும் பார்த்தாயிற்று ஆனால் சுகன்யாவை மட்டும் காணவில்லை. சரி இன்று முடியாவிட்டால் வீட்டிலேயே உட்கார்ந்து திருத்திக்கொண்டிருப்பாள் போலிருக்கிறதென்னி வீட்டிற்கு வந்தவுடன் அவளின் கைபேசிக்கு தொடர்பு கொள்ள முயன்றேன். யாரும் எடுக்கவில்லை. உடல் நிலை சரியில்லையோ என எண்ணி மீண்டும் அடித்து பின் அதற்கும் பதிலில்லாததால் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவிட்டுவிட்டென்.

அடுத்த நாள் அரக்க பரக்க சுகன்யாவே ஓடிவந்தாள் என் வீட்டிற்கு. அழுது கொண்டே நின்றாள். என்ன ஏதேன்றே தெரியாமல் குழம்பி போயிருக்கும் நேரத்தில் அவளது அப்பாவும் இவளை தேடிக்கொண்டு வந்திருக்க, விஷயம் ஒரளவிற்கு புரிய ஆரம்பித்தது. இவளுக்கு அவசர கல்யாணம் செய்ய முடிவெடுத்ததும் மண்டபத்திலிருந்து போவதறியாது என்னிடம் வந்துவிட்டாள். நடந்த விஷயங்களை அவள் கூறும் முன் அவள் அப்பாவே கூற ஆரம்பித்தார்.

நான் உல்லாச பயணம் சென்ற அன்று இவள் தனது காதலை சொல்ல சென்றாளாம் காதலனிடம். அதை அவர் ஒத்துக்கொள்ளாததால் தற்கொலை செய்து கொள்ள போய் பக்க்த்துவீட்டு அக்காவால் காப்பற்றப்பட்டு வீட்டிற்கு அந்த விஷயம் தெரியவர அவர்களும் இவளுக்கு வேறு வரன் தேடி சொந்தத்திலேயே மாப்பிள்ளையை முடியும் செய்துவிட்டனர். இன்று திருமண நாள். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவளது அப்பாவிடம் நானும் சேர்ந்து கெஞ்ச ஆரம்பித்தேன் அவளது விருப்பபடியே மணவாழ்க்கையை அமைத்துதர. ஆனால் பிடிவாதமாக மறுத்தார். இவளும் இந்த கல்யாணம் வேண்டாம் என்னால் அவரை சமாதானம் செய்து திருமணம் செய்ய இயலுமென பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தாள்.

தொடரும்.....

Monday, April 2, 2012

தோழி

சிறிய கட்டிடம் வீடுகளுக்கு நடுவே, பள்ளி என முகப்பில் பெயர் பலகை வைத்திருந்ததால் அடயாளம் சட்டென தெரிந்தது. மறுநாள் அங்கு தயக்கத்துடன் உள்ளே சென்றேன். இருவர் சிறியவயதே இருக்கும் நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.

“சார், புதுசா பள்ளி ஆரம்பிச்சிருக்கீங்க போலருக்கு. நான் இளநிலை ஆங்கிலம் செய்யறேன். ஹிந்தியும் படித்திருக்கிறேன். உங்க ஸ்கூலில் டீச்சர் வேலை காலியா இருக்கா?” என்றேன்.
இருவரில் சிறிது குள்ளமாக இருந்தவர் பேசினார். சரிங்க மேடம், உங்க பயோடேடா கொண்டு வந்திருக்கீங்களா.?” என்றவுடன் நீட்டினேன். சரி நாளை உங்களுக்கு கால் செய்கிறோம். என்றார்.
சந்தோஷத்துடன் வீடு திரும்பினேன். அடுத்த நாள் அழைப்பு வரவே எனது சர்ட்டிஃபிகேட்டுடன் சென்றேன். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ”இது மே மாதம், நீங்க ஜூன் நான்காம் தேதி ஜாய்ன் பண்ணறீங்களா? என கேட்டனர். உடனே ஒப்புக்கொண்டேன். 3ஆம் வகுப்பு ஆசிரியராக நியமனமானேன். மாதம் 4000/- சம்பளம் முதல் சம்பள பணம் நிர்ணயிக்கப்பட்டது. மிக்க சந்தோஷத்துடன் வீடு வந்து சேர்ந்தேன்.

நாட்கள் நகர்ந்தன மெதுவாக ஆனாலும் எனது பரிட்சைகளுக்கு பங்கம் வராமல் மே மாதமே முடிந்து ஜூன் மாதம் தான் ஆசிரியர் பணிக்கு செல்வதால் மிக வசதியான உத்தியோகமாகபட்டது பல விதத்தில். ஜூன் 4ம் தேதி பரபரப்பாக இருந்தது பள்ளி. நான் சென்றது அந்த உயரமான சார் என்னை பார்த்து வாங்க வாங்க என்றார். உடனே அந்த குள்ளமான சார் வாங்க டீச்சர் உள்ள போய் ப்ரேயர் ஆரம்பிக்க போகுது போய் பசங்கள பாருங்க என உரிமையுடன் முதல் பணியை இட்டார்.

ப்ரேயர் செய்யும் இடமும் ஒரு 100 பேர் நிற்கும் இடமாக கச்சிதமாக இருந்தது. நிறைய பிள்ளைகளுடன் அவரவர் பெற்றோரும் நின்று கொண்டு அழும் பிள்ளைகளை சமாதம் செய்து கொண்டிருந்தனர். அதில் ஒருத்தி சுடிதாரில் மாநிறமாக ஒர் குழந்தையை சமாதனப்படுத்த முயற்சித்து தோற்றுக்கொண்டிருந்தாள். யாராக இருக்கும் என யோசித்து பின் சித்தி அத்தை உறவாக இருக்கும் என விட்டு சென்றேன் அவளையும் அவள் நினைவையும்.

ப்ரேயர் முடியவும் ஒவ்வொரு பெற்றோராக அழும் குழந்தைக்கு டாடா காட்டிவிட்டு மறைந்தனர். எனகான க்ளாஸ் ரூம் எது என கேட்க மாடியில் உள்ளது என உயர ஆசாமி சார் ரூமிக்கே உடன் வந்து விட்டுசென்றார். எல்லா பசங்களும் வரிசையில் மேலேயேறி வர, எனது மூன்றாம் வகுப்பு மாணாக்கர்களும் அவர்தம் இருக்கையில் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டனர்.
ஒர் மதில் சுவர் போல் தடுப்பு மட்டுமே உள்ள பக்கத்து க்ளாஸ் ரூமிலிருந்து ஒர் இளம்பெண் மாணவர்களை சத்தம் போடமல் இருக்கச் சொல்லி இரச்சும் குரல் கேட்க எனக்கு ஆர்வம் மேலிட்டது யாராக இருக்கும் ஃப்ரண்ட் ஆகிக்கலாம் என எண்ணி எட்டி பார்த்தேன். எனக்கு ஆச்சர்யமாக போய்விட்டது அந்த சுடிதார் பெண். ஆ..இவளா? இவ டீச்சரா? இப்படி இருந்தா எப்படி பசங்க பயப்படும் மரியாதை கொடுக்கும் என எண்ணினேன். அதற்கேற்றார் போல் அங்குள்ள பிள்ளைகள் ஒவ்வொருவராக அக்கா எனக்கு தண்ணி வேணும், அக்கா எனக்கு பாத்ரூம் போகனும் என கேட்க கடுப்பாகி போனாள் அவள். நானோ சிரித்துவிட்டேன் என் சிரிபொலி கேட்டவுடன் யாரது என்பது போல் என் பக்கம் திரும்பிப்பார்த்தாள்.

தொடரும்....

Friday, December 9, 2011

வேலை வாய்ப்பு




அங்கு கிட்ட்த்தட்ட 20 முதல் 25 பேர் வரை அமர்ந்திருந்தனர். நிகிலுக்கு தன்னையறியாமல் அரும்பரும்பாய் வியர்வை கொட்டத்துவங்கியது. அதை கைக்குட்டையில் துடைப்பதும் அதை யாராவது பார்த்துவிட போகிறார்களே என கூச்சம் கொள்வதுமாக சங்கடத்துடன் முதன் முதலில் பள்ளிக்கு செல்லும் சிறுவனின் மனோ நிலையில் பதட்டத்துடன் அமர்ந்திருந்தான்.அந்த MNCயில் வேலை கிடைப்பதே அபூர்வம்.! கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று அருகில் உட்கார்ந்திருப்பவன் வேண்டுமென்றே அடுத்தவனிடம் பேசி கொண்டிருந்த்தை தற்செயலாக கவனிப்பது போல காட்டிக் கொண்டு அவர்களது பேச்சில் ஊன்றிக் கவனிக்கலானான். அவனும் நிகில் மற்றும் மற்ற சிலரின் கவனத்தையும் ஈர்த்த இருமாப்பில் மேலும் சில குண்டுகளை முடிந்த அளவு அவர்கள் தலையில் போடலானான்.

“இங்க ரெகமண்டேஷன் இருந்தா தான் வேலைக்கே சேர்த்துப்பாங்களாம் நான் (ஒரு பிரபலமான அரசியல்வாதியின் பெயரை சொல்லி) அவர்கிட்டேயிருந்து வாங்கிகிட்டுதான் உள்ளேயே நுழைந்தேன். ஏன் நீங்க யாரும் அப்படி செய்யலியா...?” என கேட்க அனைவரது முகமும் பேயரைந்த மாதிரியாயிற்று. அதுவும் நமது கதாநாயகன் நிகில் நிற்கும் இட‌த்திலிருந்து கீழே நழுவி பூமிக்கடியில் சென்றுவிட்ட்தை போல உணர்ந்தான். “ரெகமண்டேஷன்... ரெகமண்டேஷன்...” என்ற வார்த்தை மட்டும் அவன் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. முதல் முறையாக நேர்முகத் தேர்வுக்கு வந்தவனுக்கு இப்படி ஒரு இடியா விழவேண்டும் என இருந்த்து. உடனே அம்மாவை மனது தேட,அம்மாவிற்கு ஃபோன் செய்தான் சிறிது நேரத்தில் கொஞ்சம் தைரியம் ஒட்டிக் கொள்ள திரும்பவும் தன் இட்த்திற்கு வந்து அமர்ந்தான்.

நேர்முகத்தேர்வு ஆரம்பமானது தன் முறைக்காக காத்துக் கொண்டிருந்தான், சிலர் சோகமாகவும்,ரெகமண்டேஷன் பார்ட்டியும் சந்தோஷத்துடன் திரும்பி வருவதை பாத்துக் கொண்டும் அமர்ந்திருந்தான். இவனது முறையும் வந்த‌து அழைப்பை ஏற்று புன்முறுவலுடன் உள்ளே வரலாமா என அனுமதி கேட்டபின் அறைக்குள் செல்ல, நான்கு பேர் அடங்கிய குழு ஒன்று இவன் சான்றிதழ் கோப்பை அவர்களிடம் கொடுத்த‌தும் ஒரு முறை சம்பிரதாயத்திற்கு பார்த்தவிட்டு கேள்விகளை கேட்க துவங்கினர்.

பின் கடைசியாக சிபாரிசு கடிதம் உள்ளதா என கேட்டனர். எங்கிருந்து தான் நிகிலிற்கு அப்படி ஒரு ஆவேசம் வந்தோ தெரியவில்லை உடனே ‘ஏன் சார், ரெகமண்டேஷன் லெட்டர் இல்லைனா இந்த வேலையை எனக்கு தரமாட்டீங்களா’ன கேட்க, அவர்கள் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இவன் லெட்டர் கொண்டுவர கேட்கிறானா இல்லை நம்மை திட்ட ஆரம்பிக்கிறான என ஒருவருக்கும் புரியவில்லை .

நிகிலே தொடர்ந்தான், “ரெகமண்டேன் லெட்டர் இருக்கறவன் வேலைக்கு சேர்ந்தா என்ன ஆகும்னு தெரியுமா சார், முதல்ல உண்மையான‌ திறமையுள்ளவன் நிராகரிக்கப்படுவான், பின் இவன் வேலைக்கு சேர்ந்த‌தும் நம்ம சிபாரிசில வேலைக்கு சேர்ந்துட்டோம்னு திமிரா நெனச்சா உடனே அவன் தலையிலே குட்டு போடுறமாதிரி, ஏதாவது தப்பு கண்டுபிடிச்சு அவன ஓரம்கட்ட பார்ப்பாங்க. இல்லைனா, ரெகமண்டேஷன்ல சேர்ந்திருக்கோமேன்னு தன் பேரையும் ரெகமண்ட் செய்தவர் பேரையும் சேர்த்து காப்பாற்ற அதிகமா டென்ஷன், மன அழுத்தம் உண்டாகும். வேலைல தப்புபண்ண கூடாதுன்னு நெனச்சு நெனச்சே பெரிய தப்பா பண்ணுவான். உங்களால அவன வெளிய அனுப்பவும் முடியாது தொடர்ந்து வேலைல வச்சுக்கவும் முடியாது, ஏன் சார் இந்த மாதிரி டென்ஷனுக்கு நீங்க ஆளாகனும்.இதே சிபாரிசு இல்லாதவன்னா தன் முயற்சியில தன் திறமையால வேலைக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பான்.மேலும் அவன் திறமையை வளர்த்து கம்பனியையும் வளர்ப்பான். தேவையில்லாம நீங்களும் யாருக்கும் பயந்து திறமை குறைவானவர்களை வேலைக்கு வச்சுக்கவேண்டாம் என கூறி முடித்து மூச்சுவாங்கிக் கொண்டான்.

அவர்கள் நால்வரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். ”மிஸ்டர்.நிகில்,நீங்க நினைக்கற‌ மாதிரி இங்க நாங்க ரெகமண்டேஷன்ல வர்ற‌வங்கள மட்டும் தேர்ந்தெடுக்கலை. அவங்களை மாதிரி ஆட்களை ஸ்மூத்தா ஹேண்டில் செய்து வெளியே அனுப்பிட்டு உங்கள் மாதிரி உள்ளவங்களோட அப்ளிகேஷன தான் தேர்ந்தெடுக்க முடிவு செஞ்சிருக்கோம்.
எனிவே, உங்க தைரியமான பேச்சும், சிபாரிசு பெற்றவர் மேல உள்ள உங்களோட கண்ணோட்டமும் எங்களுக்கு பிடிச்சிருக்கு. அதனால உங்க அப்ளிகேஷன் தான் முதல்ல ஃபைனல் இண்டர்வியூவிற்கு அழைப்பதற்காக‌ வைக்க போறோம். அதில் தேர்வாக எங்கள் வாழ்த்துகள் என கூறவும், நிகிலிற்கு அப்போதும் பூமி நழுவியது சந்தோஷத்தில்.

Thursday, December 8, 2011

ஷேர் ஆட்டோ




பாஸ்கரன் அன்றும் பரபரப்பாக கிளம்பிவிட்டான். இப்போ போய் ஆட்டோ பிடித்தால் தான் சரியாக இருக்கும் இந்த டிராஃபிக் ஜாமில் மாட்டிக்கிட்டு 10 நிமிஷத்தில் போகவேண்டிய ஆபிஸ்க்கு 45 நிமிஷம் ஆகிறது. சரி இன்னும் எத்தனை நாள்னு பார்ப்போம். என எண்ணியவாரே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டான். அவசரமாக வந்தவன் பஸ் நிறுத்தத்திற்கு வந்த 3 ஆட்டோக்களையும் விட்டுவிட்டு அடுத்த ஆட்டோ...அடுத்த ஆட்டோ என பார்த்துகொண்டிருந்தான். அவனது நன்பன் ஷாம் பைக்கில் கிராஸ் செய்ய ஹாய் டா என கூறி மீண்டும் கர்மசிரத்தையாக அடுத்த ஆட்டோவை பார்வையுற்றான்.

ஷியமே அருகில் வந்து “ என்னடா இது அநியாயம், நானும் 10 நாளா பாக்கறேன் உன் வண்டிய என் கிட்ட கொடுத்துட்டு நீ ஷேர் அட்டோ பிடிச்சு ஆபிஸ் வர, இதில் சில நேரம் லேட் ஆகி மெனேஜரிடம் திட்டுவேற வாங்கற. போறும்டா இந்த கண்ட்றாவி வேலையெல்லாம். என் கூட இன்னைக்கு நீ வர. எனவும் பாஸ்கர் ஏதோ சொல்ல வாயேடுக்க, ஷியாம் “ஒன்னும் பேசாதே, வா போகலாம், எனவும் ஷேர் ஆட்டோவரவும் சரியாக இருந்த்து. அதை ஒரு நிமிடம் உற்று பார்த்ததும் ஷாயாமிற்கு பதிலேதும் சொல்லாமல் ஏற சென்றான்.

ஷேர் ஆட்டோவை ஒரு அலசு அலசினான் ஷியாம் ஒரு முருகர் படம், ஒரு ஆளின் புகைபடம் அதற்கு ஒரு மாலை. ஒரு வேளை பெண் யாரையாவது நினைத்து சுத்துகிறானோ எண்ணி வண்டியை நோட்டமிட்டான். வண்டியில் யாரும் இல்லை. சிறிது நேரம் நின்றுவிட்டு சென்றது அந்த ஷேர் ஆட்டோ. ஒன்றும் புரியாமல் விழித்துவிட்டு அவனும் பைக்கை கிளப்பினான்.

மதிய உணவு இடைவேளையில் பொறுக்கமுடியாமல் ஷியாமே பாஸ்கரிடம் சென்று கேட்டுவிட்டான். அதற்கு சிரித்துக்கொண்டே பாஸ்கர், “ தேவையில்லாம தப்பு தப்பா யோசிக்காதேடா, நான் ஒரு நல்ல எண்ணத்தோடதான் அந்த ஷேர் ஆட்டோவில் வருகிறேன்.
நான் ஒரு நாள் வண்டி சர்வீஸ் விட்டதால் ஷேர் ஆட்டோவில் வருவதாக ஆகிவிட்டது. அப்போது பார்த்து நிறைய ஆட்டோக்கள் வந்தனவே ஒழிய காலியாகவோ சிறிது இடத்துடனோகூட வரவில்லை. எல்லாவற்றிலும் கூட்டம் நிறம்பிவழிந்தது.
என்ன செய்ய ஆபிஸிற்கு டயம் ஆகிவிட்டதே என நினைத்துக்கொண்டிருந்த போதுதான் இந்த ஷேர் ஆட்டோ வந்து நின்றது அதுவும் காலியாக. என்ன ஆச்சர்யம் என சந்தோஷத்துடன் ஏறி அமர்ந்தேன்.

சிறிது நேரம் நின்று காத்திருந்த ஆட்டோவை டயம் ஆனதால் சீக்கிரம் போகச்சொல்லி கூறினேன். ”சரி தம்பி இப்போ கிளம்பிடறேன்”, என எனக்கு பதிலளித்தவர் திரும்பி என்னை பார்த்து முறுவலித்தார். எனக்கு ஆச்சர்யமாகவும் சிறிது அதிர்ச்சியாகவும் கூட இருந்தது. ஏனேன்றால் வண்டியை ஓட்டியவர் ஒரு மூதாட்டி. 60 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க ஒரு வயதான பாட்டி ஷேர் ஆட்டோ ஓட்டுகிறாரா என அதிர்ந்துதான் போனேன்.

நான் இறங்கும் வரை ஒருவர் கூட ஏறாமல் இந்த ஆட்டோவை தவிர்த்துவந்தனர். அவரிடன் வந்த்திற்கான காசை கொடுத்துவிட்டு அன்று ஆலுவலகம் வந்தடைந்தேன்.அன்று முழுவதும் அந்த பாட்டியின் நினைவு இருந்துகொண்ட்டே இருந்த்து எனக்கு. எனது பைக் வர மேலும் ஒரு நாள் ஆகலாம் என கூறினான் மெகானிக். சரியென அன்று மாலை திரும்பவும் ஷேர் ஆட்டோவிற்காக காத்திருக்கையில் ஏனோ அவரை பார்க்கவேண்டும் போல இருந்த்து. மற்ற வண்டிகளை வேண்டுமென்றேன் தவறவிட்டு இவருக்காக காத்திருந்தேன். அவரும் வந்தார் சிரித்த முகத்துடன் என்னை அடையாளம் கண்டு கொண்டு வரவேற்றார். நானும் முன் இருக்கையில் சென்று அமர்ந்து அவரிடம் மெல்ல பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன்.

“தம்பி, என் வயசு 63 ஆகுது, என் வீட்டுக்காரன் ஒரு ஆட்டோ டிரைவர், ஷேர் ஆட்டோவும் வாங்கி ஓட்டிகிட்டு இருந்தார். நாங்க இரண்டு பேரும் காதலித்து கல்யாணம் செஞ்சுகிட்டவங்க, நல்ல முறைல வாழ்ந்தோம். இப்போ ஒரு 6 மாசத்துக்கு முன்னாடி, ஹார்ட் அட்டாக்குல அவர் இறந்துட்டார். எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை, என்னோட பெண் காலேஜ் முடிக்க போறா.காசுக்கு என்ன பண்ணறதுன்னு தெரியாம இருக்கும் போதுதான், அவர் காதலோட சின்ன வயசுல ஆட்டோ ஓட்ட கத்துகொடுத்தார் லைசன்சும் வாங்கி நானும் ஆட்டோ ஓட்டினேன். அவருக்கு முடியாத சமயத்துல நான் தான் சவாரிக்கு போவேன். ஆனா இப்போ எனக்கு வயசு ஆயிடுச்சு என்னால ஓட்ட முடியாது ஏதாவது ஆக்ஸிடெண்ட் பண்ணிடுவேன்னு நினைச்சு யாரும் இதிலே ஏறமாட்டேங்கறாங்க தம்பி.

எனக்கும் ஆட்டோ ஓட்டி அனுபவம் இருக்குன்னு சொன்னாலும் எத்தனை பேர்க்கிட்ட என்னால சொல்லிகிட்டே இருக்கமுடியும் அதுவும் இங்க ஷேர் ஆட்டோன்னா ரொம்ப டிமாண்ட், சாதாரண ஆட்டோவில் போவதை தவிர்த்து இப்போ எல்லோரும் ஷேர் ஆட்டோல தான் போக விரும்பறாங்க. சரி இதை ஓட்டி காலத்தையும் ஓட்டிடலாம்னு வந்தா, இங்க ஷேர் ஆட்டோ சங்ககாரங்க ஏதோ இளைக்காரமா பார்க்கறாங்க. என்ன செய்ய தம்பி உன்ன மாதிரி உள்ள நல்லபுள்ளைங்கதான் எப்பவாச்சும் அவசரம், மத்த ஆட்டோவில் இடம் இல்லைனா ஏறுதுங்க. மத்தபடி என் மேல நம்பிக்கை வச்சு ஒருத்தரும் ஏற மாட்டேங்கறாங்க தம்பி”,என கூறும் போதே அந்த வயதான புதுமைப்பெண்ணின் கண்ணிலும் கண்ணீர் திரண்டது ஆற்றாமையால்.

“அதாண்ட நான் ஒவ்வோருநாளும் அவங்களுக்கு சின்ன உதவியா இருக்கட்டுமேன்னு அவங்க ஆட்டோவில போறேன். இப்போ இரண்டு ஸ்டாப் தள்ளி இரண்டு பொண்ணுங்க ஏற ஆரம்பிச்சுருக்காங்க. வரும்போது ஒரு பெரியவர், வருகிறார். அப்படியே கொஞ்சம் ஆட்கள் வர ஆரம்பிச்சாங்கன்னா. மத்தவங்களும் இவங்களை பார்த்து பார்த்து தைரியமா இந்த ஆட்டோவில வருவாங்க. அதுக்குத்தான் இந்த முயற்சி. இன்னும் 10, 15 நாள் தான்...என்னோட இந்த சின்ன சேவை எனக்கு மனநிறைவை தருதுடா”, என்ற பாஸ்கரிடம் நானும் வருகிறேன் என்பது போல் ”கோபால் இந்தா பைக் கீ, நானும் பாஸ்க்கரும் ஒன்னா ஷேர் ஆட்டோவில் வருவோம் ரூமுக்கு வந்து கொடு,என்றான் ஷியாம். புரியாத கோபால் தன் காதலியுடன் சவாரிக்காக சந்தோஷமாக ஏற்றுக்கொண்டான் இந்த கடமையை.

Friday, December 2, 2011

சக்கரகட்டி





"நிரஞ்சனா.... நான் ஆபிஸ்க்கு கிளம்பறேன். நீ இன்னைக்கு லீவ் தானே...? நீயே போய் நான் சொன்ன லிஸ்ட்ல உள்ள சாமானை மட்டும் வாங்கிண்டு வந்துடு...சரியா...? எனக்கு இன்னைக்கு வர லேட் ஆகும்." என அவசரமாக ஷூ மாட்டிக் கொண்டே பேசும் கணவனுக்கு தஞ்சாவூர் பொம்மையாக தலையை ஆட்டி பதில் சொல்லிக் கொண்டிருந்த நிரஞ்சனாவின காதில் பக்கத்து வீட்டு மலர்கொடியின் குரல் வாசலைத் திரும்பிப் பார்க்கவைத்தது.

இடுப்பில் குழந்தையும் கையில் சிறிய கிண்ணமுமாய் நின்று கொண்டிருந்த மலர்கொடி, "நீரூ... கொஞ்சம் சக்கரை இருந்தா தாயேன் குழந்தைக்கு பால் கரைக்கனும்" என கேட்க, நிரஞ்சனா
" என்ன அக்கா நீங்க இப்படி கேட்கறீங்க, கிண்ணத்தைதாங்ககா...." என வாங்கி கொண்டே, பாருங்க இப்பத்தான் சக்க்ரை தீந்து போகப்போக்குது அவசரத்துக்கு கொஞ்சம் தான் இருக்குனு இவரை வாங்கிகிட்டு வர சொன்னா, இவர் என்ன வாங்கிகிட்டு வர சொல்லிட்டார். இத மாதிரி நிறைய காரணங்களால் அடிக்கடி தீருது ஒரு 2 கிலோவா வாங்கி போடுங்க சொன்னா கேக்கராரா இவரு...இருங்க அக்கா இருக்கற‌ சக்கரைல கொஞ்சம் தரேன் என நீட்டிமுழ‌க்கி பேசி ஏன் கேட்டோம் என் மலருக்கு தோன்றவைத்துவிட்டு உள் சென்றாள்.

உள்ளே அவளுடன் வந்து கிண்ணத்தில் சிறிதளவே கொடுப்பதைப் பார்க்கையில் முகம் மாறியது அவள் கணவன் திவாகருக்கு. "ஏன் டப்பா நிரைய சக்கரை வைச்சுகிட்டு இவ்வளவு கம்மியா தரே அவங்களுக்கு" என கேட்டவனை,"உங்களுக்கு ஒன்னும் தெரியாது, போதும் எல்லாம் இவங்களுக்கு." என கூறி வாயடைத்துவிட்டாள்.

சிறிது நேரத்தில் திவாகர் அலுவலகம் சென்றது அர‌க்கப் பற‌க்க மலர்கொடியின் வீட்டு சமையலறை ஜன்னலில் வந்து மலரை கூப்பிட்டாள்.

மலர்கொடிக்கு ஒரே ஆச்சர்யம்...ஒரு டப்பா நிரைய சக்கரையை போட்டு கொண்டு வந்து அந்த ஜன்னலில் வழியே கொடுத்துக் கொண்டே, “என்ன அக்கா நீங்க...அவர் முன்னாடி கேட்கறீங்களே, அவரை பற்றி உங்களுக்கு தெரியாதா சரியான கஞ்சனாச்சே, இன்னைக்கு கூடவே வந்து எவ்வளவு கொடுக்கறேனு பார்க்க வேற செய்தார். அதான் அவர் ஆபிஸ் போனதும் கொண்டுவந்தேன் என கூறி கையில் தவழும் குழந்தையை எட்டி கொஞ்சி “இந்த சக்கரகட்டிக்கு இல்லாத சக்கரயா என்ன...?” என கேட்டுவிட்டு செல்லும் நிரஞ்சனாவை ஆச்சர்யம் விலகாமல் பார்த்துக் கொண்டே நின்றாள் மலர்கொடி.