Friday, November 29, 2013

மருந்தில்லா மருத்துவம்..!





முடிந்தவரை நடைபயிற்சி செய்யுங்கள் , உடல் நிறையை சீராக வைத்திருப்பதற்கு நடைப்பயிற்சி வெளிப்படையான காரணமாக இருந்தாலும் பாதத்தில் உடலின் நரம்புகள் ஓன்று சேரும் புள்ளிகள் காணப்படுகின்றன. 

இவற்றை மசாஜ் செய்வதன் மூலம் அத்தகைய நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறலாம். இடது காலில் இதயத்திற்கான புள்ளியும் ஏனையை பகுதிகளுக்குமான புள்ளிகளும் காணப்படுகின்றன. 

சீனரின் அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் இத்தகைய புள்ளிகளிலேயே ஊசி குத்தப்படுகிறது, சிறிய கற்கள் நிறைந்த தரையில் வெறுங்காலுடன் நடப்பதும் நல்ல பலனைத் தரும்..


நன்றி: தமிழும் சித்தர்களும் Thamil.Siththars

Saturday, November 23, 2013

தமிழ் இலக்கியங்களில் ஓசோன்!.



ரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழ் இலக்கியங்களில் ஓசோன்!.

தற்கால அறிவியல் அறிஞர்களால் புவிக்கு மேலே இருக்கும் வான்வெளி ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. புவியில் இருந்து ஒன்றன் மேல் ஒன்றா கட்ரோபோஸ்பியர்(troposphere)', ஸ்ட்ரோட்ஸ்பியர் (stratosphere),மீஸோஸ்பியர் (mesosphere), தெர்மாஸ்பியர்(thermosphere), எக்ஸோஸ்பியர் (exosphere), நத்திங்னஸ் (nothingness)என அவை அமைந்துள்ளன.


இவற்றுள் புவிக்கு மேலே முதலில் அமைந்திருப்பது ட்ரோபோஸ்பியர். இது வான்வெளியின் மொத்த கன அளவில் பதினேழில் ஒரு பங்குதான். ஆனால், வான்வெளியில் உள்ள மொத்தக் காற்றின் அளவில் ஐந்தில் நான்கு பகுதி இங்கு தான் இருக்கிறது. இன்றைக்கு ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் வான்வெளியை ஐந்து கூறுகளாகப் பிரித்துக் கூறி இருப்பதை அறியும்போது வியப்பும் மகிழ்வும், பெருமிதமும் ஒருங்கே உண்டாகின்றன. "இருமுந்நீர்க் குட்டமும் வியன் ஞாலத்து அகலமும் வளிவழங்கு திசையும் வறிதுநிலைஇய ஆகாயமும்." (புறநா - 20) என்னும் வரிகளில் புவிக்கு மேல் உள்ள மூன்று பகுதிகள் கூறப்பட்டுள்ளன.

"செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
சூழ்ந்த மண்டிலமும் வளிதரு திசையும் வறிதுநிலை காயமும்." - (புறநா -30) என்னும் வரிகளால் புவிக்கு மேல் ஐந்து பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. "மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக இயங்கிய இருசுடர் கண்ணெனப் பெயரிய வளியிடை வழங்கா வழக்கறு நீத்தம்." (புறநா -365) என்னும் வரிகளில் இரண்டு பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுள் "திசை" என்னும் பகுதியில் காற்று இருக்கும். "ஆகாயம்", "நீத்தம்" என்னும் பகுதிகளில் எதுவும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. "நீத்தம்" என்பது இன்றைய அறிவியலார் கூறும் "வெறுமை" (நத்திங்னஸ்) என்னும் பகுதி. புவிக்கு மேல் இருக்கின்ற இரண்டாவது பகுதியான "ஸ்ட்ரோட்ஸ்பியர்" என்னும் பகுதியில் தான் "ஓசோன்" எனப்படும் காற்றுப்படலம் அமைந்துள்ளது. இப்படலம் கதிரவனிடம் இருந்து வரும் கடும் வெப்பத்தை, தான் தாங்கிக்கொண்டு புவியில் உள்ள உயிர்கள் துன்பம் உறாமல் காத்துவருகிறது. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓசோன் படலத்தைப் பற்றி 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் குறிப்பிட்டிருப்பது வியப்பை அளிக்கிறது அல்லவா?

"நிலமிசை வாழ்வர் அலமரல் தீர தெறுகதிர் வெம்மை கனலி தாங்கி
காலுண வாக சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவரும் மருள."
(புறநா - 43)

பாடல் வரிகளின் கருத்து, "புவியில் வாழும் மக்களின் துன்பம் தீர கதிரவனின் வெப்பம்மிக்க கனலைத் தாங்கிக்கொண்டு கதிரவனோடு சேர்ந்து சுழல்கின்ற முனிவர்கள்" என்பதாகும். மேலும், முருகக்கடவுளின் ஒரு கை, "விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது" என்று திருமுருகாற்றுப்படை (107) யிலும்,"சுடரொடு திரிதரும் முனிவரும், அமரரும் இடர்கெட அருளி நின் இணையடி தொழுதோம்"என சிலப்பதிகாரத்திலும் (வேட்டுவ வரி - 18)இக்கருத்து கூறப்பட்டுள்ளது.

முனிவர்கள் என்று கூறப்பட்டதாலேயே, மற்ற மதத்தினரும் பகுத்தறிவுவாதிகளும் இது அறிவியல் கருத்தன்று; கற்பகமரம், காமதேனு போன்ற கற்பனைகளுள் ஒன்று தான் என்று சொல்லக் கூடும். முனிவர்கள் என்றாலும் சரி அல்லது பிறவற்றைச் சுட்டினாலும் சரி அது ஒரு பொருட்டன்று. கதிரவனின் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் ஒரு சக்தியைப் பற்றித் தமிழர்கள் (சங்கப் புலவர்கள்) சிந்தித்திருக்கிறார்கள் என்னும் செய்தி நாம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே கூறிவிட்டோம் என்று நினைக்கும் போது, இந்த செந்தமிழ்நாட்டில் பிறந்ததை எண்ணி நாம் பெருமை கொள்ளவேண்டும்!

அப்படிப்பட்ட நம் தமிழ் மொழியை உலகெங்கும்பரவ வழிவகை செய்ய
ஒவ்வொரு தமிழனும் உறுதி ஏற்கவேண்டும்!


நன்றி:தமிழும் சித்தர்களும் Thamil.Siththars

Monday, November 11, 2013

சிதம்பர இரகசியம் என்றால் என்ன ...!

சிதம்பர இரகசியம் என்றால் என்ன ...! சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான 
ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்." சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள். முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்." (1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ). (2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம். (3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது. (4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600). (5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும். (6) திருமந்திரத்தில் " திருமூலர்" மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது. (7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது, (8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது. (9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது. (10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
Thanks to:facebook Incredible Tamilnadu

Thursday, October 10, 2013

கும்பகோணம் "தாராசுரம்" கோயிலில் உள்ள " இசைப்படிகள் "



கும்பகோணம் "தாராசுரம்" கோயிலில் உள்ள " இசைப்படிகள் "

.இந்த கோயிலை கட்டியவர் " ராஜா ராஜா சோழன் " மகன் , " ராஜேந்திர சோழன் ". கும்பகோணத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் பயணித்தாலே இந்த பிரம்மாண்டமான அழிகிய கோயில் வந்து விடும் ".

ஏழு படிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கலை பொக்கிஷத்தில், மேலே உள்ள படியில் சிறிய கல்லை வைத்து விட்டால் அதுவே ஒவ்வொரு படியாக உருண்டு " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற சப்தஸ்வரங்களை எழுப்பும். ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு ஸ்வரங்களை இது இசைக்கும். இதன் அருமைகளை அறியாத சிலர் இதன் மீது பெரிய பெரிய கற்களை போட்டு சோதித்ததால் இது சேதமடையத் தொடங்கியது. அதனால், இப்போது இந்த படிகளை சுற்றி இரும்பு வேலி அமைத்து பூட்டப்பட்டுள்ளது. உள்ளே சென்று இதன் அருகில் புகைப்படம் எடுக்க மட்டும் இப்போது அனுமதிக்கப்படுகின்றது. இதன் இசையை கேட்க விரும்புவோர் கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றால், அவர்களே இசைத்து காண்பிக்கிறார்கள்.

Tuesday, October 1, 2013

இரயில் பயணம்













தண்டவளம் தரையிறங்கி ஓடும் நிழல் பயணம்

இறக்கும் காக்கை முதல்
இறவா ப்ளாஸ்டிக் பைகள் வரை
குப்பைகளை தன்னகத்தே கொண்டிருப்பினும்
அழுக்கு சுமந்து அமைதி காக்கும் பல பயணம்

நினைவு களைந்து நிஜத்தை தேடும் நீண்ட பயணம்

நிலத்தில் நீந்தி நிலவில் கால் பதிக்க
ஓங்கும் சாகச பயணம்

மரங்கள் பின்நோக்கி ஓடும்
கலங்களின் உண்மை பயணம்.

புதியவர் பழகியவர்களாக மாற்றும்
பழகியவர்களை புதியவர்களாய் ஆக்கும் விந்தை பயணம்.

மேற்கு நோக்கி விடியலையும் கிழக்கு நோக்கி அஸ்தமனத்தையும்
புரட்டிடும் அசுரப் பயணம்

கருவுக்குள் தொடங்கி கல்லரைக்குள் முடியும் முன்
காலதேவனின் தொடர் பயணம்.

பயணங்கள் மாறலாம் பாதை பாராமலேயே....

Sunday, September 29, 2013

நிசப்தத்தின் சப்தம் (அத்தியாயம் 5)

குழந்தை தொடர்ந்தது, “ இன்னும் உன் அன்பும், உன் மனைவியின் அன்பும், சுற்றுபுற சூழ்நிலையின் காரணமாகவும் நான் கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் மறந்துடுவேன். அப்பறம் என் மாந்திரீக சக்தி, அதுல நான் கொடிகட்டி பறந்த காலம் கரிந்தே போய்டும்.நீ எனக்கு உதவி செஞ்சா நான் உனக்கும் உதவுவேன் என்ன சொல்லறே? என்றது.

உடனே தருண் “இல்ல... இல்ல என்னால உனக்கு help  பண்ண முடியாது. இது தப்பு. உலகத்தோட ஒத்துபோ அதுதான் நியாயம்எனவும்,

குழந்தை இனி உன்கிட்ட பேசி பலனில்லை, உன்கிட்ட சொன்னதால உன்ன அழிசாத்தான் எனக்கு நிம்மதி, இல்லைனா உன்னால என் ரகசியம் எல்லாம் வெளிய வந்திடும்”  என ஆக்ரோஷத்துடன் சொன்னது.

தருண், “ முடியாது நீ என்ன மிறட்டினாலும் நான் பயப்படமாட்டேன். நீ என்னை அழிச்சு இந்த உலகத்தோட நியதியை மாத்திறத்துக்கு முன்னாடி, நான் உன்ன அழிச்சுடறேன்.என ஆவேசத்துடன் அதன் கழுத்தை நெறிக்க முற்பட்டான்.

அப்போழுது ஏதோ ஒன்று தன் மண்டையை பலமாக தாக்கியதாய் உணர்ந்து திரும்பியவன் அதிர்ச்சியிலும் வலியிலும் உரைந்தே போனான் ஆனால் அவன் ரத்தம் மட்டும் உரையாமல் ஈரமாக்கியது அவனது கழுத்து பகுதியினை.

“சுஜா...நீயா என்னை ஏன் அடிச்சேஎன பலவீனமாய் கேட்டவன் கிட்ட்தட்ட மயக்க நிலைமைக்கு சென்று கொண்டிருந்தான்.

“ஏன்னா இப்போதைக்கு இந்த இரும்பு தடிதான் கிடச்சது எனக்கு. என்ன தைரியம் இருந்த நான் அவ்வளவு சொல்லியும் உங்க பைத்தியகாரதனத்தால், நம்ம குழந்தையை சாகடிக்க நினைப்பீங்க. இப்படிபட்ட புருஷனே எனக்கு வேண்டாம். எல்லாத்தையும்விட ஒரு தாய்க்கு அவ குழந்தைதான் முக்கியம்னு,நாளைக்கு இந்த ஊர் உங்க நிலைமையைப் பார்த்து தெரிஞ்சுக்கட்டும்.என மேலும் தாக்கிவிட்டு வேகமாக குழந்தையை தூக்கி கொண்டு வெளியே சென்றாள், குழந்தையும் அந்த கிண்டல் சிரிப்பு மாறாமல் இவனயே பார்த்துக்கொண்டு சென்றது.

எரிச்சலும் வலியாலும் “சுஜா...சுஜாதா... அது சரியில்லை....சுஜா...அது குழந்தையே இல்லைஎன கத்தலும் முனங்கலுமாக எழுந்திரிக்க முற்பட்டான்.


ஒரே கும்மிருட்டாக இருந்த்து. “என்னங்க...என்னங்க ஆச்சு?! ஏன் இப்படி ஒளரிகிட்டு இருக்கீங்க...எழுந்திரிங்க, என்ன ஆச்சு உங்களுக்குஎன லைட்டை ஆன் செய்ய, சுற்றும் முற்றும் குழந்தையை தேடினான். பின் சுஜாதாவின் குறல் அருகில் கேட்டதும் திரும்பி பார்த்தான். பிறகுதான், தான் தன் படுக்கை அறையில் உள்ளோம் என உணர்ந்து சுஜாதாவையே வெறித்து பார்த்துகொண்டிருந்தான்.

திரும்பவும் சுஜாதா அவனை நன்றாக உலுக்க, “ஓ...எல்லாம் கெட்ட கனவாஎன பெருமூச்சு ஒன்றைவிட்டான்.ஆனாலும் கழுத்திலும் தலையிலும்  உள்ள ஈரபசை பயமுறுத்த் திடுக்கிட்டு தடவி பார்க்க,
சுஜாஅதுசரி தண்ணி பாட்டில் எடுக்கும் போது டொம்முன்னு உங்க மண்டைல விழுந்து மூடி திறந்துடுச்சு, சரி எழுப்பி சொல்லலாம்னு பார்த்தா

இப்படி அலற்றீங்களே?!என சுஜா கூறவும், நிம்மதியான் புண்சிரிப்போடு “அப்பாடா எனக்கு இப்போதான் நிம்மதியா இருக்கு என அவளை அனைக்க போக, அப்போழுது சுஜாதா “ ஏய்...வேண்டாம் வேண்டாம். இப்போ நான் இரண்டு ஆளாக்கும்எனவும் பீதி நிறைந்த அவன் விழிகளுக்குள் குழந்தை அதே கிண்டல் சிரிப்புடன் கண்ணடித்தது. 


முற்றும்.

Wednesday, September 18, 2013

நிசப்தத்தின் சப்தம் (அத்தியாயம் 4)

என்ன சொன்னீங்க? நம்ம குழந்தையை போய் கொண்ணுடுவேன்னா சொன்னீங்க!?அத்திரத்துடன் கேட்டாள் சுஜாதா.
இல்...இல்ல... இல்ல சுஜா நான்... வந்து... எனக்கு எப்படி குழந்தையை சமாதனபடுத்தறதுன்னு தெரியல. அதான் என தினறி தினறி பேசி முடித்தான்.
இருந்தும் ஆவேசம் வந்தவளாய் பால் பாட்டிலுடன் வந்து நங்கென்று அவன் தலையில் வைத்து, “ இதோட இப்படி பேசுறத நிறுத்திருங்க, இல்ல நான் ராட்சசியா மாறிடுவேன்”, என்று குழந்தையை தூக்கிக்கொண்டு அப்பால் சென்றாள்.
இப்ப மட்டும் என்னவாம்என முனு முனுக்க, அதை கண் அடித்து சிரித்து வெறுப்பூடிடியது குழந்தை. இனியும் அதன் அட்டகாசம் பொறுக்காது என திட்ட்மிடலானான் தருண்.

சுஜா கடைவீதிக்கு சென்றிருந்த நேரம் பார்த்து,

“உட்காரு உன்கிட்ட பேசனும்என்றான் தருண்.

எனக்கு தூக்கம் வருது இப்போ என்னால் உட்காரமுடியாது. ஏன்னா நான் கை கொந்தே தம்பிஎன பல்லில்லா ஈரை காட்டி கேலி செய்த்து குழந்தை.

“சரி படுத்துகிட்டே பதில் சொல்லு எப்படி இருந்தாலும் எனக்கு நீ பேசற ரகசியம் தெரிஞ்சுக்கனும்என ஆவேசமுடன் கூறினான் தருண்.

இனி இவன் விடாகொண்டனாகிவிட்டான் என தெரிந்த்தும் குழந்தை,
“சரி ஆனா நார் கிட்டையும் சொல்ல கூடாது சரியா? இந்த டீலுக்கு ஓகே வா? என கிண்டல் அடித்த்து.

சாதுர்யமாக எரிச்சலை அடக்கிக்கொண்டு தருணூம், “சரி, ஓகே....ஓகே....சரி. விஷயத்துக்கு வாஎன்றான்.

அது என்னப்பா... சரி ஓகே....சரி எல்லாம் ஒண்ணுதானே?! இப்போ மாத்திட்டாங்களா என்ன? என மேலும் வெறுப்போற்ற எரிச்சலின் உச்சத்திற்கே போய்விட்டான் தருண் ஆனாலும் பல்லை கடித்துக்கொண்டு இந்த அதிசயத்தை, ரகசியத்தை இதனிடமிருந்து கரப்பது என முடிவு செய்து திரும்பவும் அதே கேள்வியை அமைதியாக வினவினான்.


“ஹேய் சரி உன் ஜோக்...ஹா...ஹா...ஹா...சிரிச்சுட்டேன் போருமா? இப்போ சொல்லு, என கேட்க, “எதை கொல்ல சீ...சீ...சொல்ல சொல்லறே? என புரியாத்து போல விழித்த்து குழந்தை.
“உம்ம்ம்ம்...சரி, உன்கிட்ட முன்னாடியே கேட்டேன். எப்படி நீ இந்த் வயசிலேயே பேசற, உனக்கு மட்டும் அப்படி ஒரு சக்தியா? என் குழந்தைக்கு இப்படி ஒரு சக்தியிருந்தா எனக்கு பெருமைதானே....? நீயே சொல்லு. அதனால் எல்லாத்தையும் அழகாக நீ சொல்லுவியாம் நானும் நீ பேசறதையே ஆச்சர்யமா பார்பேனாம் சரியா? எங்க சொல்லு...சொல்லு பார்க்கலாம்? என குழய,
குழந்தையிடம் ஓர் நக்கலான சிரிபொன்று உதிர்ந்த்து. தொடந்து, “சரி நீ இவ்வளவு ஆசபடுற, நான் சொல்லறேன். எனக்கு இன்னும் பழய் ஜென்மத்து ஞாபகம் போகல, எல்லா குழந்தைக்கும் இருக்கும் ஆனால் நான் ஒரு மாந்திரிகன். அதனால என்னால நினைக்க மட்டும் இல்ல பேசவும் முடியுது.
நான் இந்த உடல்ல பிறந்தேனோழிய எனக்கு பழய சக்தி இன்னும் இருக்கறத நான் இழக்க விரும்பல.

தன்னையும் மறந்து குழந்தை சொல்வதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் கண் இமைக்க மறந்தவனாய் அந்த மாந்திரிக குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தான்.