Saturday, September 30, 2023
துயில்
தொலைத்துவிட்ட என் தூக்கத்தை உன் கண்களில் தேடுகிறேன்
துயில்கொள்ளும் நேரம் எல்லாம் தொலைதூரம் போயிற்று
என் வானம் இன்னும் சில இருட்டுகளை கொண்டிருந்தாலும் விடியலுக்கான ஒளி சிதறல்களை உன் விழி மூலம் காண்கிறேன்.
என்னை மீட்டு எடுக்கும் உன் நினைவுகளுக்கு முடிவில்லா முள்வேலி போடுகிறது மனது.
வாழ்ந்து விடு
நீல கடலும் தொடுவானமும்
இழையும் புள்ளியாய்
உன்னுடன் பயணிக்கும் நாட்கள்
உன்னுடன் பயணிக்கும் நாட்கள்
நீண்டு கொண்டே இருக்க வேண்டும் என்னாளும்.
கலையாத கனவாக
நிஜத்தின் நிழலாக
தொலையாத வரமாக
தொடர்ந்து வரும் பெரும் துணையாக
அம்மா என்ற ஒற்றை சொல்லின் அடையாளமாக என் அடைக்கலமாக
கலையாத கனவாக
நிஜத்தின் நிழலாக
தொலையாத வரமாக
தொடர்ந்து வரும் பெரும் துணையாக
அம்மா என்ற ஒற்றை சொல்லின் அடையாளமாக என் அடைக்கலமாக
வாழ்ந்து விடு என்னருகே முடிவற்ற செவ்வானமாக என்னாளும்.
வன வாசம்
பதினான்கு வருட வனவாசம் முடிந்தாயிற்று
ஆனாலும் இன்னும் வனம் தான் எனை விடவில்லை
வனம் விட்டு வரா வனவாச வாழ்க்கையில்
சிறு பூக்கள் எனை சிறைப்படுத்துவதேன்...
நொருங்கி விட்ட காய்ந்த இலையாய்
சிறகிழந்த சருகாய் மனம் வனம் சுற்றி வரும் என்னாளும்.
Tuesday, August 30, 2022
தொடரும் செல்லங்கள்
நான் எங்கு சென்றாலும் என் முன்னே
பின்னே தொடரும் நாய் குட்டியாய்
என் மீது படரும் முல்லை கொடியாய்
உன் ரீங்காரத்தில் என் தூக்கம் கலைத்தாய்
உன் நண்பர்களிடமும் என்னைப் பற்றி உரைத்தாய்
என் மீது மோதி மெத்தேன்ற
என் செல்ல அடியில்
பொத்தென்று நீ விழ
கைதட்டிய பாராட்டாய் எண்ணி
உன் இனம் எனை நோக்கி ஆவலாய் படர... உன்னை தொடரவே அனுப்பி வைத்தேன்.
உன் இறப்புக்கு என் ஆழ்ந்த இரங்கல்
ஓ... எனதருமை கொசுவே...!
Tuesday, December 7, 2021
Subscribe to:
Posts (Atom)






