கடற்கரை
மணலில் தொலைந்து போன பாதச் சுவடுகளாய்
இப்போது
நாமிருவரும்
கிடைக்க நேரமின்றி
தவிக்கும் மணிமுள்ளாய்
ஓடிக்கொண்டிருந்தாலும்
மனச்சுவரின்
கிறுகலில் நம் பெயர்
பொறித்திருக்கிறது
எப்போதும்.
நிலத்தில் விழுந்த
மழைத் துளியைத் தேடி
தாகம் தனிக்க
எண்ணுவது போல்
நாம் தேடுகிறோம்
வாழ்க்கையை.
கிடைத்த போழுது
கைக்குள் பொத்திவைக்கத்
தவறிய பனித்துளியை
காய்ந்த நிலத்திற்கு
உயிராகவேனும் விட்டுவிடு
நிலமாவது தாகம்
தனிக்கட்டும்.
காய்ந்த கடற்கரையாய்
நான் இருந்துவிட்டு போகிறேன்
வாழ்வை விதி
குடிக்கும் வரைக்கும்.
வணக்கம்
ReplyDeleteஇரசிக்கவைக்கும் வரிகள் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி திரு.ரூபன்.
ReplyDelete