(2)
இந்த முறையும் இந்த படத்தின் இளம் ஹீரோ டிப்ஸ் கேட்டுக் கொண்டிருக்கும் போது தேவதையாக ஒரு பெண் ரகுவிடம் ஆட்டோகிராஃப் கேட்க, அவனும் போட்டு கொடுத்தான். திருப்பி கொடுக்கும் போதுதான் பார்த்தான், அதில் 'இன்று டேட்டிங்கிற்கு போகலாமா?' என்றிருந்தது. அதை பக்கதிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த ஹீரோவிற்கு பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது என எண்ணி ரகுவை பார்த்து அசட்டு சிரிப்பொன்றை உதிர்க்க, அதை பொருப்படித்தாமல் ரகு வந்த தேவதையை மேலும் கிழும் பார்த்தான்.
உடனே தைரியம் வந்தவளாக எழுதியதை வாய்விட்டே கேட்டாள். ரகுவிற்கு கோபம் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. " என்ன நினைச்சுகிட்டு இப்படி ஒரு வார்த்தையை என்னை பார்த்து கேக்கறீங்க? மரியாதை கெடறதுக்கு முன்னாடி இங்கிருந்து போய்டுங்க" என அவளுக்கு மட்டும் கேட்கும் அளவிற்கு கடுமையாக கூறினான். அவளது முகம் வெளுத்து ப்ரம்மை பிடித்தவள் போல் சிலையாக நிற்க, மேலும் ரகு " என்ன ஒரு தடவை சொன்னா புரியாதா? போங்க... எனக்கு கல்யாணமாயிடுச்சு... வீட்டல் பொண்டாட்டி இருக்கா. வேணும்னா நான் அவளை கூட்டிகிட்டு டேட்டிங் போவேன். பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணறவன் நான் இல்ல. புரியுதா?!
உங்கள மாதிரி ரசிகைனு சொல்லிகிட்டு வர்ர எந்த பெண் தோழியும் வேண்டாம் எனக்கு." என ஆத்திரமுடன் கத்தி தீர்த்த பிறகே அவள் ஓடாத குறையாக அங்கிருந்து சென்று காணாமல் போனாள்.
இதை எல்லாம் வெகு அதிர்ச்சியோடும் ஆச்சர்யத்தோடும் பார்த்துக் கொண்டிருந்த ஹீரோவிற்கு என்ன கேட்பதென்றே தெரியவில்லை. ரகுவையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.
தொடரும்....

வணக்கம்
ReplyDeleteநன்றாக உள்ளது..தொடருங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
thanks for your valuable comment Mr.Rupan
ReplyDelete