Wednesday, March 19, 2014

பெண் எனும் புத்தகம்:













திறந்த புத்தகமாய் இருக்க சுவாரஸ்யமற்றாவள்
அதனாலேயே மூடிய புத்தகமாய் இருந்தேன்
யாரும் படிக்காத புதிய புத்தகமாய் கிடந்தேன்.
யாரோ என்னை தூசிதட்டிவிட்டது போல் உணர்ந்தேன்
என் மன இலைகளில் மழை துளிகளால் கழுவப்பட்டேன்.
இளம் வெய்யிலின் சூட்டில் துளிர் விடுவது போல்
உன் அன்பில் குளிர் காய்கிறேன்.
நீல வானில் பறக்கும் பறவைக் கூட்டத்தில்
உன் எழுத்துக்களை படிக்கிறேன்.
படித்து முடித்தும் முடியாமல்
தொடர்கிறது எழுத்துக்கள்
கடைசி நிமிட பயணம் போல
ஆர்பரிக்கிறது மனம்
நிறைந்த பெளர்ணமியில்
அலைகளின் கால் பதித்த ஞாபகம்
உன் நினைவுப் பக்கங்கள் பறந்தோடி,
கலைந்து கிடக்கிறேன் நீ சேர்ப்பாய் என.

2 comments:

  1. முடிவில் நம்பிக்கை அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தங்களது வாழ்த்துக்கும் கருத்திற்கும் நன்றி திரு.தனபாலன் அவர்களே!

    ReplyDelete