என் நிலவின் மறுபக்கம்
Monday, September 22, 2025
Sunday, September 7, 2025
அன்பு
”டேய் கிளம்புடா, டைம் ஆச்சுல்ல...இன்னும் வேணு,குமார்,சாதிஷ்,தினேஷ் எல்லோர் வீட்டுக்கும் வேற போகனும்...நீயே இப்படி தூங்கிகிட்டு இருந்தா எப்படிடா அன்பு...” என கதிர் கத்திக்கொண்டே வந்து அன்புவை எழுப்பினான். இவனும் சோம்பல் முறித்துக்கொண்டே “ஹும் உன் முகத்தில் விழிச்சுட்டேனா, போச்சுடா இன்னைக்கு என்ன ஆகப் போகுதோ..” என கிண்டலடிக்க, அன்புவின் அன்பான அம்மா அங்கு வந்து சேர்ந்தாள். ”சரி சரி, கிளம்பு, கூப்பிடறான்ல போய் சீக்கிரமா குளிச்சு கிளம்பரவழிய பாருடா” என கூறவும் சிரித்துக் கொண்டே நண்பனை ஒரு இடி இடித்து குளிக்கச் சென்றான். “என்னைக்குமே உனக்கு விளையாட்டுத்தான் டா...” என கதிர் சிரிக்க ஒருவழியாக அன்புவும் கதிரும் மற்ற நண்பர்களை அழைக்கச் சென்றனர்.
ஒவ்வொருவராய் கிளப்பிக் கொண்டு செல்வதற்குள் உச்சி போழுதாகிவிட்டது. ஆனாலும்
கொஞ்சமும் வெய்யிலுக்கு நாங்களும் சளைத்தவர்களில்லை என்பது போல அவர்களது
குறிக்கோளான கபடி ஆட்டத்தை ஆடதுவங்கினர். ஆடி முடித்து சிறிது சிரிப்பும்
கும்மாளுமுமாக ஓய்வெடுக்கு போழுது, அந்த அணியின் தலைவனான அன்பு எல்லோரையும்
பார்த்து, “வருகிற ஞாயிறு அன்று நடக்கயிருக்கிற போட்டில நாம ஜெயிச்ச
கிடைக்கற பரிசு தொகைகாக மட்டும் ஆடாம், நம்ம ஊருக்கும் நமது டீமிர்க்கும் பெருமை
சேர்க்க ஆடனும் சரியா...” என கேப்டனுக்கேயுரிய கம்பீரத்துடன் கூற, குழுவினர் அனைவரும்
உற்சாக்த்துடன் கைதட்டி ஆமோதித்தனர்.
அந்த இனிய நாளும் வந்தது, மிகக் கடுமையாக போறாடி வெற்றி கண்டனர் அன்பு குழுவினர்.
ரூபாய் 1 லட்சம் அணியின் தலைவனான அன்புவிற்கு அணியின் சார்பில் பரிசாக
அளிக்கப்பட்டது. வந்திருந்த விருந்தினர் அரசியல் பிரமூகர்கள் ஊர் பெரியவர்கள் என
அனைவரும் பாராட்டு மழை பொழிந்தனர். அடை மழைவிட்டது போல் அத்த்னை சலசலப்பிற்கு
பிறகு அன்புவின் டீம் அவர்களது சொந்த ஊருக்கு திரும்பிற்று. வழியில் எல்லோரும் ஒரே
சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயிருந்தனர் எனபதும் அந்த வெற்றியின் களிப்பு
மீதமிஞ்சியே காணப்பட்டது என்பதும் அவர்களது பேச்சிலும் நடவடிக்கைகளிலுமே நன்றாக
தெரிந்தது. இந்த ஒரு லட்சத்தை என்னவெல்லாம் செய்யலாம் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு
மாதிரி ஐடியா கொடுத்துக்கொண்டே ஊர் வந்தைந்தனர்.
பிறகுதான் கவணித்தனர் அன்புவை மட்டும் காண முடியவில்லை. எல்லோருக்கும் ஒரே
குழப்பமாகவும் பயமாகவும் உணர்ந்தனர். ஒவ்வொருவரும் தனித்தனியே அன்புவைப் பற்றி
எண்ணமிட்டனர். ‘ஒரு வேளை பணத்துடன் வந்த அன்பு அப்படியே கம்பி நீட்டிவிட்டானா...?” என நினைத்த போழுதும் வெளியே காட்டிக்கொள்ளாமல் “பெரிய
தொகையுடன் வந்த்தால் அவனை யாராவது ஏதாவது செய்திருப்பாங்களோ” என பொத்தம்பொதுவாக கூறிக்
கொண்டார்னரே தவிர, ஒருவருக்கும் தான் மனதில் என்ன உண்மையாக நினைத்தோம் என வெளியே சொல்லிக்கொள்ள
துணிவு வரவில்லை.
இரவு ஆனதால் வேறுவழியின்றி அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டியதாயிற்று. விடிந்ததும் ஒவ்வொருவரும் ஒரு புது பொருளுடன் அவரது குடும்பத்தாருடன் அன்புவின் வீட்டின் முன் நின்றிருந்தனர். அன்புவின் அம்மாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அன்புவை எழுப்பி வெளியே வந்து பார்க்கச் செய்தார். அன்புவை பார்த்தும் எல்லா நண்பர்களும் சேர்ந்து நன்றி கூற...கதிர் முன்னால் வந்து நின்று “ஏன் இப்படி செஞ்சே..? எங்க கிட்டயும் சொல்லியிருந்தா நாங்களும் சேர்ந்து வந்து வாங்கியிருப்போம்ல” என்றான். அதற்கு அன்பு,” இல்லடா அன்னைக்கு ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் கூப்பிட போகும் போதுதான் தெரிஞ்சது யார் யாருக்கு அவங்க வீட்ல என்னென்ன தேவைனு, நாமபாட்டுக்கு வெற்றி களிப்பில அதை ஊதாரித்தனமா செலவு செய்ய நினைச்சோம். எனக்கு அது சரினு தோனலை. உங்க சந்தோஷ்த்தைவிட நம்மள பெத்தவங்க, கூடபிறந்தவங்க சந்தோஷம் முக்கியம்னுபட்ட்து அதான் தனியா போயே வாங்கி வந்துட்டேன். உங்கள கூட்டிகிட்டு போயிருந்தா அளவிற்கு மீறியோ குறைச்சோ இல்ல கூச்சபட்டுகிட்டு வாங்காமகூட இருந்திருவீங்கனு தான்.... என தயங்க, நண்பர்கள் அனைவரும் அன்புவை அன்புடன் அணைத்துக் கொண்டனர். நேற்று தப்பாக நினைத்த்தற்கு குற்ற உணர்வினால் மானசீகமாய் மன்னிப்பு கேட்டுக்கொண்டே....!