Friday, October 5, 2018

இலையுதிர் காலம்


பூக்களிடத்திலும் சொல்லவில்லை 
என் மனக்கேதங்களை.
பின் எவ்வாறு தெரிந்தன  

வண்ணங்கள் மாறாவிடினும் 
இலைகளை பிரிந்து உதிந்தன 
என் மனப்பிளவை ஒத்தவாரு...?

வாசனையற்ற பூக்களாய் தெருவோரம் உதிர்ந்து, 
வண்ணங்கள் இழக்கும் தருவாயில்.... 
எதற்கும் இருக்கட்டும் என 
எதற்கு மாலை தொடுற்கிறாய்...?

உதிர்ந்த பூக்கள் மீண்டும் மரங்களில் சேர்வதில்லை. 
இலையுதிர் காலம் வரை காத்திருக்கின்றன. 
இலைகளுக்கும் பூக்களின் வலி புரியும் வரை.

Thursday, May 31, 2018

விடிவெள்ளி நீ













விரிந்து கிடக்கும் விண்மீன்களை பந்தென சுருட்டி
உள்ளங்கையில் ஒளித்து
நிறம் மாறும் முன்
நித்திரைக்கு துணையாய் தந்துவிட்டு
கணவுகளில் மட்டும்
வானவில்லின் வர்ணங்களை சிதரவிட்டாய்

வெறிச்சோடிப் போன என் தெருக்களில் மாவிலை தோரணங்களை
வாசனை பூக்களோடு பேசவிட்டாய்
திருவிழா பூண்டது என் மனகிராமம்

நீரில் மிதக்கும் தாமரை இலையாய்
ஒட்டியும் ஒட்டாமலும்
கழிந்த நேசங்களை ஒன்றினைத்து
தாமரை பூக்களாய் மலரவிட்டாய்
உன் சூரியக் கிரணங்களால்

நீண்ட நெடுந்தூரம் ஆகிப்போன
என் பிரியங்களை
மீட்டெடுத்து உன்னில் முடியவைத்தாய்

தேடி தொலைத்த மொழியாக
என்னை விட்டு சென்ற
நிழலாக
தனித்திருந்த என் தனிமைக்கு
தொலைதூரத்து விடிவெள்ளி நீ

வானவில்


நீ பிறந்தாய் வானவில்லாய்
அங்கு ஏழு வண்ணங்கள் மாட்டும் இல்லை
என் வாழ்வின் அனைத்து வண்ணங்களும்
அப்போதே சேர்ந்து பிறந்துவிட்டன…
சில நிமிடங்கள் வர்ணஜாலம் காட்டி
மறைந்து, நிறமிழந்து போகும்
வானவில் அல்ல நீ
பலரின் உயிரில் வண்ணமேற்றும் தூரிகை நீ
எட்டா கணியாய் மேகத்தினுள்ளே ஓடும்
வானவில் அல்ல நீ
யாவருக்கும் வளைந்து கொடுக்கும்  
பக்குவம் பெற்றவன் நீ
மலர்ந்து விரிந்து கண்களில் குளிர்ந்து
மனதில் நிறைந்து நிற்கிறாய் என்றும்
உன் உயரிய பண்பால்
உன் நட்பெனும் மழை நீரீன் கம்பிகளை
பிடித்துக் கொண்டு சூரியனுக்கு
நிகராய் மின்னும் உன் வானவில் வாழ்க்கையில்
ஒர் நிறமாய் மாற ஆசைப்படுகிறேன்,
சாயம் போகா நம் நட்பின் மீதுள்ள நம்பிக்கையால்

Friday, May 4, 2018

உனக்கானவை

உனக்கானவை எல்லாம்
என் இருதய இருப்பிடம்
என் இரவின் மெளனம்
என் சல்லரை சேமிப்பு
என் சிந்திய கண்ணீர் துளி
என் மூச்சின் வெப்ப பயணம்
என் இரவு நிலவின் நெருக்கம்
என் காதலின் வாசற்படி
என் இறைவனின் சந்நிதானம்
என் கற்பின் கருவரை
என் தோல்வில் முயற்சி
என் மெல்லிய கணவின் தொடற்சி
எனக்காக நான் சேமித்த தனிமையும்
சேர்த்து கொண்டு
இப்பொழுது
 உனக்கானவையாக மாறியது

Sunday, April 15, 2018

நட்பென்னும் வான் மழை

என் நாட்கள், என் நிமிடங்கள், என் நோடிகள் அனைத்தையும் உனதாக்கிக் கொண்டாய்.

உரைநடையாய் கழிந்த வாழ்க்கையை கவிதையால் நிரப்பினாய்.

தண்டவாளம் போல் செல்ல மட்டுமே ஆசை
சேர்ந்தும் சேராமலும்.

நட்பேனும் பாதையில்
நடைபயணம் ஆரம்பம்
நம் கடைசி பயணம் வரையில்

நமது தேளிந்த நீரோடையில்
நம்மை கடந்து செல்வோர்
குளிர் நிலவையும் காணலாம்
சுட்டெரிக்கம் சூரியனையும் காணலாம்
பார்வை பழுதில்லாமல் இருந்தால்

விண்மீன்கள் கரையும் மட்டும் நம் நட்பென்னும் ஒளி வீசும்

விழி மூடி உன்னுடன் நடப்பேன்
இருள் சூழ்ந்த மழைக் காட்டிலும்
வான் மழையாய் நீ்
கை கோர்ப்பதென்றால்

Friday, March 9, 2018

நட்பெனும் சுவாசம்

மறிப்பேனோ உந்தன் மடியில்
மலர்கின்றேன் உன்னுடன் சிரிக்கின்ற பொழுதில்

சில நேரம் தவித்தேன்
பல நேரம் தவழ்ந்தேன்
குழந்தையாய் உந்தன் அருகில்

நட்பென்ற நெருப்பின்பிடியில்
சுட்டாலும் வெண்சங்காய் நிறத்தில்

தேடிக்கிடைத்த நட்பென்ற புதயலுக்கு வழி நீ
விரல் கோர்த்து துணை நின்றாய்

கடைசி நிமிடமும் நீங்கா உன் நேசம் வேண்டும்
நினைவில் உன் நட்பெனும் சுவாசம் வேண்டும்

Sunday, February 11, 2018

நட்பதிகாரம்

ரெக்கை விரிக்கிறேன்
உன் நட்பேனும் வானில்

நிலவாய் ஒளிர்கிறேன்
உன் சூரிய கிரனங்களால்

வீழ போவதில்லை
நட்பெனும் சிகரம் தொட்டு.....
கீழ்நோக்கி பாயும் அறுவிபோல் மட்டுமே ஆவேன்

காதல் கேட்காமல் கவிதை கேட்டாய்
நண்பனே.....
ஆண்மகனில் ஓரே அன்னை நீ.

என்றும் இந்த நட்புக் கப்பல் அலையாடும்
கலங்கரை விளக்காய் நீ இருந்தால்.