Thursday, November 29, 2012


உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில் ஒரு நிமிடத்திற்கு 15 
மூச்சு, ஒரு நாழிகையில் 24 நிமிடங்கள், நாழிகைக்கு 360(15*24) மூச்சு எனச் சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது.(இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது)

ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கின்றீர்களா? சம்பந்தம் இருக்கிறது.
இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216(உயிர்மெய்) சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!


நன்றி: செம்மொழி facebook
                                                                                                                                                                http://www.facebook.com/photo.php?fbid=518988164786406&set=a.466060900079133.109687.466059370079286&type=1&ref=nf

Wednesday, November 28, 2012

நசுகா கோடுகள்(கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்துநசுகா கோடுகள் (Nazca Lines) என்பவை தென்னமெரிக்காவில் இருக்கும் பெரு நாட்டில் உள்ள நசுகா என்னுமிடத்தில் அமைந்த, மனிதர்கள் வாழாத இடமான மிகப்பெரிய நிலப்பரப்பில், பெருவெளிகளில் நேராக, நேர்த்தியாக வரையப்பட்டிருக்கும் சித்திரங்களும், கோடுகளும் ஆகும். சுமார் 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்தச் சித்திரங்களும் கோடுகளும் அமைந்திருக்கின்றன.
இவை ஆறாம் நூற்றாண்டில் அப்பகுதியில் வசித்த நசுகா நாகரிகத்தவரின் செயல் என்று நம்பப்படுகிறது.
இந்தச் சித்திரங்களின் முழுமை எவருக்குமே தெரியாது. இவற்றைப் பார்க்க வேண்டும் என்றால் வானத்தில் உயரப் பறந்தால் மட்டுமே முடியும். 1500 ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்தியம் இல்லை. இருந்தும் இந்தக் கோடுகள் எல்லாமே விமானத்தில் இருந்து எடுத்தாலும் தெளிவாகத் தெரியும் அளவிற்கு கீறப்பட்டிருக்கின்றன. எரிக் வான் டேனிகன் இவற்றை வேற்று கிரக வாசிகளின் விமானத்தளம் என்று கூறியது அறிவியலாளர்களால் ஏற்கப்படவில்லை.

இங்கு கோடுகள் தவிர்த்து பலவிதமான வடிவங்களும், சித்திரங்களும் வரையப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் தொடங்கிய புள்ளியிலேயே முடியும்.
இந்தச் சித்திரங்களை மூன்று விதமான வகைகளில் நாம் பிரிக்கலாம்.
இந்த நாசுகா உருவங்களில் குரங்கு, நாய், சிலந்தி, பல்லி, திமிங்கலம், மீன், வானம்பாடி பறவை என்று தெரிந்த பல உருவங்கள் இருந்தாலும், தெரியாத உருவங்களும் பல இருக்கின்றன. இவற்றில் ஐம்பதுக்கும் மேலாக உள்ள உருவங்கள் மிகப் பிரமாண்டமானவை. மிகப் பெரிய உருவங்கள் கால் கிலோ மீட்டர் நீளத்துக்கும் நேர்கோடுகள் பல கிலோ மீட்டர் நீளத்துக்கும் வரையப்பட்டுள்ளன.

Thursday, November 22, 2012


மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது . 
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிர
ுக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,

ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்".

ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.

உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் "இறையனார் அகப்பொருள் "என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து,"பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .

இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன்"அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.

மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது. இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..

இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் , இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!
நன்றி: செய்தியினை facebookல் பகிர்ந்த தம்பி சிவஹரிக்கு.

Monday, November 19, 2012

பூமிக்கு வந்தார் சுனிதா வில்லியம்ஸ் : திரும்பி வரவே மனசில்லையாம்

ஹூஸ்டன்: விண்வெளி ஆய்வு மையத்தில் 4 மாதங்களாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நேற்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார். 'விண்வெளியை விட்டு திரும்பி வரவே மனசில்லை' என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ மற்றும் ரஷ்யா உள்பட பல நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை (ஐஎஸ்எஸ்) அமைத்துள்ளன. இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விஞ்ஞானி சுனிதா, ரஷ்யாவின் யூரி மெலன்செங்கோ, ஜப்பானின் அகிகிடோ ஹொசைட் ஆகியோர் ரஷ்ய சோயுஸ் விண்கலத்தில் கடந்த ஜூலை 15ம் தேதி விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றனர். நான்கு மாதங்களுக்கு பின்னர், சுனிதா உள்பட 3 பேரும் நேற்று கசகஸ்தான் பகுதியில் தரையிறங்கினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

சுனிதாவின் பெற்றோர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் பிறந்த சுனிதா அங்கேயே படித்து, நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். பாஸ்டன் நகரில் வசிக்கும் இவரது தந்தை தீபக் பாண்டியா, பூமி திரும்பிய மகளை காண கசகஸ்தான் வந்திருந்தார். பூமி திரும்பிய சுனிதா உற்சாகமாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
விண்வெளி மிகவும் ரம்மியமானது. அங்கு போனால் திரும்பி வர யாருக்கும் மனது வராது. எனக்கும் அப்படித்தான். அந்தரத்தில் எந்த பிடிப்பும் இல்லாமல் மிதப்பது ஆச்சரியமானது. விண்வெளியில் இருந்து டி ஷர்ட், குடும்ப போட்டோ ஆல்பம், நோட்புக், யோ யோ விளையாட்டு சக்கரம் ஆகியவற்றை மீண்டும் பூமிக்கு எடுத்து வந்தேன். சோயுஸ் விண்கலத்தில் செல்லும்போது ஒவ்வொருவரும் 1.5 கிலோ எடையுள்ள பொருள் மட்டும்தான் எடுத்து செல்ல முடியும். அதனால் துணி, பிரஷ், பேஸ்ட், ஷாம்பு ஆகியவற்றை எடுத்து செல்லவில்லை. ஏற்கனவே விண்வெளி மையத்தில் அவை இருந்தன. அதனால் பிரச்னை இல்லை.

விண்வெளியில் துணி மாற்றும் பிரச்னை இல்லை. ஒரே பேன்ட்தான். விண்வெளி ஆய்வு மையத்தில் சில பராமரிப்பு பணிகளை செய்யும்போது, பேன்டில் கறை ஏற்படும். மற்றபடி அழுக்கு படியாது. துணி மாற்ற வேண்டுமானால் லாண்டரி எல்லாம் செய்ய முடியாது. பழைய பேன்ட், டி ஷர்ட்களை ‘வெளியே’ (அந்தரத்தில்) வீசிவிட்டு வேறு உடைதான் அணிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள், விலங்குகள், பறவைகளை பார்க்க முடியாவிட்டாலும், விண்வெளியில் இருந்து திரும்பி வரவே எனக்கு மனதில்லை. மிக அற்புதமான அனுபவம் அது. இவ்வாறு சுனிதா வில்லியம்ஸ் கூறினார்.


நன்றி: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=31381

Thursday, November 8, 2012

கிளிஞ்சல்கள்
நினைவு திரும்புகையில்
கரும்பலகை மனதில்
சில கோடுகள்.
நீண்ட கோடுகள் நெஞ்சம் கிழிக்க
சிறு கோடுகளோ இதயத்தை பிளந்தது.
சில மணிதுளிகளை நிந்தித்ததால்
கணவுகளில் மன்னிப்புகள் பகிர்ந்து கொள்ளப்பட்டாலும்,
கடல் அலைகளின் கிளிஞ்சலகளாய்
அலைக்கழிக்கப்பட்டு எங்கோ ஒதுங்கினோம்.
நம்மை தேர்ந்தெடுத்து கலைந்த மனிதக் கூட்டம்
கடலில் தூக்கி எரிந்து விளையாட
மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்
ஒற்றையில் அலையாடுகிறேன் வருடக் கணக்கில்...


Monday, November 5, 2012

நான்கு சூரியன்களைக் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்புநான்கு சூரியன்களால் ஒளிபெறும் புதிய கிரகத்தை வானியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இப்படியானதொரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்கிறார்கள் இந்த கிரகத்தை கண்டுபிடித்திருக்கும் வானியலாளர்கள்.

பிளானட் ஹண்டர்ஸ் என்கிற இணையதளமும், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் வானியல் ஆய்வு மையங்களும் இணைந்து இந்த கண்டுபிடிப்பை செய்திருக்கின்றன. எனவே பிளானட் ஹண்டர்ஸ் இணையத்தின் பெயரை குறிக்கும் வகையில் இதற்கு பிஎச்1 என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
பூமியிலிருந்து சுமார் ஐந்தாயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கிரகம் இரண்டு சூரியன்களை சுற்றிவருகிறது. அதேசமயம் வேறு இரண்டு சூரியன்களும் இந்த இரண்டு சூரியன்களை சுற்றிவருகின்றன. எனவே இந்த குறிப்பிட்ட கிரகத்திற்கு நான்கு சூரியன்களின் ஒளியும் கிடைக்கும்.
இதுவரை வானியலாளர்கள் ஒரு சூரியனால் ஒளி பெறும் கிரகங்கள், இரண்டு சூரியன்களால் ஒளி பெறும் கிரகங்களை மட்டுமே கண்டறிந்திருக்கும் பின்னணியில், நான்கு சூரியன்களால் ஒளிபெறும் இந்த புதிய கிரகம் வானியலாளர்கள் மத்தியில் ஆச்சரியமான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.
நெப்டியூனைவிட இந்த புதிய கிரகம் கொஞ்சம் பெரிய அளவில் இருப்பதாகவும் மதிப்பிட்டிருக்கிறார்கள்.