Thursday, October 10, 2013

கும்பகோணம் "தாராசுரம்" கோயிலில் உள்ள " இசைப்படிகள் "



கும்பகோணம் "தாராசுரம்" கோயிலில் உள்ள " இசைப்படிகள் "

.இந்த கோயிலை கட்டியவர் " ராஜா ராஜா சோழன் " மகன் , " ராஜேந்திர சோழன் ". கும்பகோணத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் பயணித்தாலே இந்த பிரம்மாண்டமான அழிகிய கோயில் வந்து விடும் ".

ஏழு படிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கலை பொக்கிஷத்தில், மேலே உள்ள படியில் சிறிய கல்லை வைத்து விட்டால் அதுவே ஒவ்வொரு படியாக உருண்டு " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற சப்தஸ்வரங்களை எழுப்பும். ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு ஸ்வரங்களை இது இசைக்கும். இதன் அருமைகளை அறியாத சிலர் இதன் மீது பெரிய பெரிய கற்களை போட்டு சோதித்ததால் இது சேதமடையத் தொடங்கியது. அதனால், இப்போது இந்த படிகளை சுற்றி இரும்பு வேலி அமைத்து பூட்டப்பட்டுள்ளது. உள்ளே சென்று இதன் அருகில் புகைப்படம் எடுக்க மட்டும் இப்போது அனுமதிக்கப்படுகின்றது. இதன் இசையை கேட்க விரும்புவோர் கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றால், அவர்களே இசைத்து காண்பிக்கிறார்கள்.

Tuesday, October 1, 2013

இரயில் பயணம்













தண்டவளம் தரையிறங்கி ஓடும் நிழல் பயணம்

இறக்கும் காக்கை முதல்
இறவா ப்ளாஸ்டிக் பைகள் வரை
குப்பைகளை தன்னகத்தே கொண்டிருப்பினும்
அழுக்கு சுமந்து அமைதி காக்கும் பல பயணம்

நினைவு களைந்து நிஜத்தை தேடும் நீண்ட பயணம்

நிலத்தில் நீந்தி நிலவில் கால் பதிக்க
ஓங்கும் சாகச பயணம்

மரங்கள் பின்நோக்கி ஓடும்
கலங்களின் உண்மை பயணம்.

புதியவர் பழகியவர்களாக மாற்றும்
பழகியவர்களை புதியவர்களாய் ஆக்கும் விந்தை பயணம்.

மேற்கு நோக்கி விடியலையும் கிழக்கு நோக்கி அஸ்தமனத்தையும்
புரட்டிடும் அசுரப் பயணம்

கருவுக்குள் தொடங்கி கல்லரைக்குள் முடியும் முன்
காலதேவனின் தொடர் பயணம்.

பயணங்கள் மாறலாம் பாதை பாராமலேயே....