Thursday, March 8, 2012

இறப்பு




பிரிவு என்பது
நிலையாதிருப்பதன் மெளன மொழி.

நாம் கேட்கும் சக்தியிழந்த பின்
கிடைக்கும் பெரும் சப்தம்.

காலம் கடந்த காட்டு வழி ஞானம்.

நேசிப்பவரின் இறுதி சுவாசிப்பு.

நிலம் நீங்கி நிலத்தில் புதைத்தாலும்
உரிமை இழந்து உறவாடும் சவப்பெட்டி.

அவ்வழி சென்றோரின் வரிசையில் நாம்
தொலைந்து போனதை தேடிக்கொண்டு.

4 comments:

  1. உண்மை . மனதோடு பேசி விரலோடு வெளிவந்த கவிதை . அழகு

    ReplyDelete
  2. நீண்ட நாட்களுக்கு பிறகு தாங்களை என் ப்ளாகில் காணமுடிந்தது.மிக்க மகிழ்ச்சி.

    தங்களது கருத்துக்கு மிக்க நன்றி சந்திரகௌரி அவர்களே!

    ReplyDelete
  3. நாம் கேட்கும் சக்தியிழந்த பின்
    கிடைக்கும் பெரும் சப்தம்...............

    இறப்பு நெருங்கிய பின் இன்னும்கொஞ்சம் வாழ ஆசை வரும். பாராட்டுக்கள். ஈழநிலா /நிலாமதி

    ReplyDelete
  4. தங்களின் கருத்துக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி மதி அவர்களே!

    ReplyDelete