Wednesday, October 31, 2012

நிசப்தத்தின் சப்தம்(அத்தியாயம் 3)


ஏய் என்ன கிண்டலா இருக்கா உனக்கு?என்றதும். ஆமா, உன்ன மாதிரி பைத்தியக்காரனை பார்த்தா பின்ன எப்படி இருக்குமாம்?என பதில் வர திரும்ப கத்த ஆரம்பித்தான். “ஹேய் சுஜா... சுஜா ப்ளீஸ்டி வா இங்க வந்து பாரு. திரும்ப பேசுதுடி பாரு, பாரு என கத்த, சுஜாதா எரிச்சலுடன் அங்கு ப்ரசன்னமானாள்.அய்யோ, உங்க உளரலுக்கு ஒரு அளவே இல்லையா?என கூறும்போதே குழந்தை தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்து “தயவு செய்து சத்தம் போட்டு தூங்கற குழந்தையை எழுப்பிடாதீங்கஎன கூறி கையுடன் அவனை அந்த அறையைவிட்டு நெட்டி தள்ளினாள்.

இரவில் சினுங்கல் சத்தம் கேட்டு தருண் எழுந்து பார்க்க அது குழந்தையிடம் இருந்துதான் வருகிறது என்றது ஏன் வம்பு என எண்ணி திரும்பி படுக்க எத்தனித்தான். உடனே சுஜாதா “ஏன் போய் குழந்தையை தூக்கி என்னன்னு பார்க்க கூடாதா?என கோவமாக கேட்டுக் கொண்டே குழந்தைக்கருகில் சென்று சமாதனபடுத்த முயல அது அழ ஆரம்பித்துவிட்டது. “ சரி, பசிக்குது போல குட்டிக்கு இதோ வரேன் அம்மா....என குழந்தையை சரேலென தருண் மடியில் கிடத்திவிட்டு சமையல் அறைக்கு சென்றாள்.

இவனும் ஓர் குழந்தை பாவம் அழுகிறதே என்ற பரிதவிப்பில் அதை சமாதனப்படுத்த முயல தோளில் போட்டு கொண்டு தட்டி “ஜோ...ஜோ...என ஏதோ பாடுவதாக முனங்க, “ஓய் போதும் நிறுத்து. நீ பாடறீயா இல்ல அழறியா? எனக்கு ஒன்னும் தூக்கம் வரல. ரொம்ப பசிக்குதுஎனவும், “அதான் பால் கொண்டு வர போய்ருக்கால்ல கொஞ்சம் பொருத்துக்கோஎனதெளிவாக  பதில்  தருண் சொன்னான்.“ஹும்ம்ம்...பரவாயில்லையே பயம் போய்டுச்சா?! நல்லா பேச ஆரம்பிச்சுட்டியே என கிண்டல் செய்த்து குழந்தை. “போரும்...போரும்... வாய மூடு இதுக்கு மேல பேசற வேலை எல்லாம் வச்சுகிட்ட உன்ன கொன்னுடுவேன் ஜாக்கரதைஎன ஆவேசமாக சொல்லிக்கொண்டிருக்கும் போதே சுஜாதா பால் புட்டியுடன் உள்ளே வர, இவனது வார்த்தைகளை கேட்டு அதிர்ந்தவளாய் வெறித்து பார்த்துக்கொண்டு நின்றாள்.

2 comments:

  1. அட ஏம்மா இன்னும் BP ய ஏத்தற. பீட்சா படத்தவிட இது ஏத்துற உசுப்பு ரொம்ப ஓவரா இருக்கே.. சீக்கிரமா அடுத்த அத்தியாத்த போடும்மா மின்னலு....

    ReplyDelete
  2. ஹி...ஹி... கொஞ்சம் கொஞ்சமா BP ஏத்தலாம்னுதான்... சரி நீயே ஆசபடறே சீக்கிரமே அடுத்த அத்தியாம் ரெடிபண்ணி உன் BP ஏத்தறேன்.

    தொடரும் உங்கள் ஆதரவிற்கும் கருத்திற்கும் நன்றி sos madam! :)

    ReplyDelete