Thursday, January 12, 2012

நான்!




காற்று புகாத மூங்கில்
அல்ல நான்.
புல்லாங்குழலாய் மாறியபின்னும்
இசை சேரா வெற்று
குழல் நான்!

கடல் சேர்ந்தும் சேரா
நுரை அல்ல நான்.
கரையை எட்ட துடிக்கும்
சிறிய அலை நான்!

பாரதியாய் பாடி
பெண்ணியம் வளர்க்கும்
பிறை அல்ல நான்.
பாச வலையால் பின்னப்பட்ட
கூட்டுப் புழு நான்!

பொய்மை மறைய போராடும்
புழுதி புயல் நல்ல நான்.
நிதர்சனம் தேடி நிம்மதி துலைத்த
மெய்மையின் பகுதி நான்!

நான் என்றும் நானாக
வாழ முயல்கிறேன்
மாற்றம் சகிக்கும் வானாக
நிலைக்க‌ நினைக்கிறேன்.

2 comments:

  1. நான் நானாகவே வாழ்ந்து வருதல்/ வாழ முயல்தல் என்றுமே உன்னதக் கலை. ஆனால் சரியாகப் பின்பற்றுபவர்கள் எண்ணி(ன்)க்கையில் குறைவு..

    நற்கருத்தினை சூசகமாகத் தெரிவிக்கும் கவிதையிது.

    படைத்துப் படிக்கச் செய்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  2. கருத்திட்டமைக்கு நன்றி சிவா!

    ReplyDelete