Monday, July 2, 2012

நிசப்தத்தின் சப்தம்(அத்தியாயம் 2)


உள்ளிருந்து சிரிந்த முகமாய் சுஜாதா வெளியே வந்தாள். “என்னங்க ஏன் இவ்வளவு லேட்டா வரீங்க? சரி வந்தது வந்தீங்க ரொம்ப நேரமா இங்கயே நின்னுகிட்டு இருக்கீங்க, நீங்களும் வருவீங்க வருவீங்கனு பார்த்தா, சரியான ஆளுங்க நீங்க..... நீங்க தெரு முக்குக்கு வரும்போதே பார்த்துட்டேன். உள்ளே நீங்களே வரலைன்னதும் நானே சர்ப்ரைஸ் கொடுக்க வெளியே வந்தேன். என ஒரே மூச்சில் கூறி முடித்தபின்னும் அவள் சுஜாதா தானா என சந்தேகமும் துணைக்கு ஆள் கிடைத்ததே என்ற சந்தோஷமும் வர, அப்படியே அயாசமாக அவளை கட்டிபிடிக்க எத்தனிக்க, “ஹேய் வேண்டாம் வேண்டாம். இப்போ நான் இரண்டு ஆளாக்கும்”, என கூற இரட்டிப்பு சந்தோஷத்தில் துள்ளினான்.


சில மாதங்களுக்கு பிறகு...

“ஹும்... கொஞ்சம் குழந்தையை பார்த்துக்கொங்களேன்என்று கூறி குளிக்க சென்றாள் சுஜாதா. குழந்தை கொள்ளை அழகாக தனது பொக்கை வாயை காட்டி சிரித்தது இவனை பார்த்து. “ஹே என் அச்சு குட்டி, பட்டு குட்டி, அம்மு குட்டிஎன கொஞ்ச ஆரம்பித்தான். “ஏய், போரும் போர் அடிக்குது. ஒரே மாதிரி கொஞ்சாதேஎன்ற குரல் வந்த திசையை பார்த்து அதிர்ச்சியடைந்தான் தருண். உட்கார்ந்த வாக்கில் பூகம்பம் வந்ததாக் உணர்ந்தவன் குழந்தையின் முகத்தையே உற்று பார்த்து திருதிருவென விழித்தான். மிக கடுப்புடன் “அட, ஏன் இப்படி பார்க்கிற?! இதுவரைக்கும் குழந்தைகளை பார்த்ததே இல்லையா?என அலட்ச்சியமாக கூறியது குழந்தை. உடனே தருண் திக்கி தினறி என்ன நடக்கிறது இங்கே என குழம்பி, ‘ஏய்...நீ... நீ...பே...பேசற? எப்படி...? என்று ஒரு வழியாக முடித்தான்.

இது என்ன வம்பா போச்சு. நான் சாகர வரைக்கும் நல்லாத்தான் பேசிகிட்டு இருந்தேன். ஏன் இப்ப என்னல பேச முடியாதா? என கேட்டது தான் தாமதம் உடனே அலறி அடித்துக்கொண்டு குழந்தையை படுக்கையிலேயே தொப்பென்று போட்டுவிட்டு குளியலறை பக்கம் ஓடினான்.” “ஹே...சுஜா...சுஜா... கதவை திறடி, கதவை திற... என உளரலாக கத்த, “ஏங்க, இப்படி கத்தறீங்க, போங்க போய் வேலைய பாருங்க, என்னமோ இப்பத்தான் புதுசா கல்யாணம் ஆனமாதிரி நடந்துக்கறீங்க. போய் குழந்தையை கவனிச்சுக்கோங்க முதல்ல” என திட்டி தீர்த்தாள்.
‘ஏய் இல்லமா... நம்ம குழந்தை பேசுது எனவும். ஹும்ம்... விளையாடாதீங்க நீங்க என்ன சொன்னாலும் நான் கதவை திறக்கமாட்டேன். நிம்மதியா குளிக்க கூட விட மாட்டீங்களா? குழந்தையை இரண்டு நிமிஷம் தான் பார்த்துக்க சொன்னேன். அதுகூட முடியலையா? என பேசிக் கொண்டே போக, “ஏய் அது பேசுதுடி பேசுது புரியுதா? நான் ஒன்னும் விளையாடல. பயந்து போய் உன்கிட்ட வந்து சொன்னா. நீ வேற.... வெளில வா சீக்கிரம். நான் உண்மை என்னன்னு காட்டறேன் என்றான்.

“ சரி...சரி... இருங்க வரேன். நம்ம குழந்தை பேசுறதை நானும் கொஞ்சம் கேட்டு சந்தோஷபடறேன்.என கிண்டலடித்துக் கொண்டே வந்து குழந்தையை தூக்கி கொஞ்சினாள். அது சமத்தாக தூங்கிக் கொண்டிருந்ததால் சின்ன செல்ல சினுங்கல் ஒன்றை உதிர்க்க. “ஆஹா...ஆஹா... நம்ம குழந்தை சூப்பரா பாட்டு பாடுதுல.. என மேலும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிவிட்டு சமயலுக்கு தாளிக்க எண்ணெய் எடுக்க சென்றாள் நமுட்டு சிரிப்புடன். ரொம்ப சந்தோஷம்டி, ரொம்ப சந்தோஷம். என வெறுப்புடன் குழந்தையை திரும்பி பார்க்க அது இவனை பார்த்து கண் அடித்து சிரித்தது. 

10 comments:

 1. Heysuper story. Un expected twist. Rooommm pootttu yosippayo?!!!...

  ReplyDelete
 2. இதெல்லாம் தானா வருதுமா...என்ன பண்ணறது?! ரத்தத்திலியே ஊரி போச்சு. சரி..சரி... ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்பபபப....நன்றி கருத்திட்டமைக்கு. :)

  ReplyDelete
 3. அடுத்த திருப்பம் என்ன என்று அறிந்திட ஆவல் மேலும் மேலும் கூடுகின்றது அக்கா! இனிமையான வழியிலே கவிதை, கதை என்று எழுதிக் கொண்டிருந்த ஒரு எழுத்தாளரால் இப்படியும் எழுத முடியும் என்று நிரூபிக்கும் வகையில் கதையில் திருப்பங்கள் அமைகின்றதே! பாவம் தருண் :) நம்ம சாதீ போலிக்கு. பார்க்கத்தான் பென்சிலிலே கோடு போட்ட மாதிரி இருப்பேன். ஆனால் எட்டி அடிச்சா இருபது பேரை அடிப்பேன் என்ற ஏக வசனம் மட்டும் தான் பேசுவான் போலிருக்கே.

  அடுத்த பகுதியினைக் காண மிகவும் ஆவல்.!

  கதை முடிஞ்சிட்டது என்று சொல்லாதீக அம்மையாரே! அப்புறம் தருண் குழந்தையிடம் சொல்லிப் புடுவேன்.

  ReplyDelete
 4. HI CHITHI IT IS NICE TO READ IT I LEARNT A LOT FROM THIS

  THANKS

  DEAR DAUGHTER OF HEMAMALINI BALAJI

  ReplyDelete
 5. wow! surprise visit?! thanx for yr comment on my blog da chellam. :)

  ReplyDelete
 6. சீக்கிரம் முடித்துவிடுவேன் சிவா! ஆனால் சுவாரஸ்யம் போகாமல் இருக்க முயல்கிறேன். நன்றி உனது ஆவல் மிகுந்த கருத்திற்கு!

  ReplyDelete
 7. என்னம்மா.. கதையோட அடுத்த அத்தியாயத்தை இன்னும் கானோம். என்ன இன்னுமா சுஜாதா சமையல் அறையில் தாளிச்சுட்டே இருக்கா...

  சீக்கிரம் வாம்மா... மின்னலு. நம்ம ஹேமாக்கா வந்துருக்காக, சிவஹரித்தம்பி வந்துருக்காக.. லக்ஷனா குட்டியும் காத்திருக்காக.. மற்றும் நம்ம ப்ளாக் விசிட்டர்ஸ் எல்லாம் பார்த்துட்டு போராங்க. வாம்மா வசு மின்னலு. வந்து கதைய சீக்க்ரம் போட்டுடும்மா...

  ReplyDelete
 8. ஹா...ஹா...ஹா... வந்துடறேன்மா பெரிய மின்னலு... சீக்க்க்க்க்கிரம் முடிக்க பார்க்கிறேன்.

  ReplyDelete
 9. ஹேமா அக்கா, மூன்றாவது பாகம் வரும் பொழுது நாம எல்லோரும் முதலிரண்டு பாகங்களையும் சேர்த்துத் தான் படிக்கோணுமாக்கும்.. நினைவிலே வச்சுக்கோங்க.. இல்லீனா அடுத்த பாகம் நமக்கு சீக்கிரம் புரியாது :(

  சுஜாதா இன்னுந்தான் தாளிக்கிறாள் போலிருக்கு.. :)

  தொடருங்கள் கதாசிரியையே!!!

  ReplyDelete
 10. சரிங்க சபாநாயகர்... சீக்கிரம் தொடருகிறேன். :)

  ReplyDelete