நான் இறக்க நினைக்கிறேன்
என் வாழ்க்கை இறந்துவிட்டதால்
மழைக் காடுகளில் சுற்றி திரிய
மண்வாசனை
நாசி நுழைய
பிறந்து கொண்டே இறக்கிறேன்.
பூவிறக்கையின் பனித்துளியாய் நழுவ
விரிந்த பறவையின் காற்றாய் தழுவ
பிறந்து கொண்டே இறக்கிறேன்.
மலையை பிரிக்கும் புனலாய் பாய
மேக மெத்தையின் வெண்மையாய் பரவ
பிறந்து கொண்டே இறக்கிறேன்.
பாதம் நனைத்த குளிராய்
பகலில் குளிக்கும் நிலவாய்
புத்துணர்வூட்டும் கதிராய்
இயற்கையின் மடியில்
இறந்து
கொண்டே பிறக்க இருக்கிறேன்....
ஒன்றை விடுத்து மன்றொன்றை நோக்கும் தொனி இக்கவியில் பயனிக்கின்றது. இது இயல்பான மனிதரின் குணமாகத்தான் இன்னும் இருக்கின்றது.
ReplyDeleteநன்றி
கருத்திற்கு நன்றி சிவா. :)
ReplyDelete