Friday, May 24, 2013







பெர்முடா முக்கோணம்[The Bermuda Triangle] - உண்மையும் , கட்டு கதையும் !!!

நீங்கள் ஒரு வரைபடத்தில் இதைக் காண முடியாது என்றாலும், பெர்முடா முக்கோணம் உண்மையாகவே உள்ளது. கடந்த காலத்தில் நிறைய கப்பல்கள், விமானங்கள் மற்றும் மக்கள் பலரும் காணமால் போய் உள்ளனர். பல சம்பவங்களுக்கு நம்பும்படியான விளக்கம் இருந்தாலும் , அங்கு நடந்த பல சம்பவங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் இன்று வரை எந்த அறிவியல்ரீதியான விளக்கமும் இல்லை !

பெர்முடா முக்கோணம் மியாமி, போர்டோ ரிகோ மற்றும் பெர்முடாஸ் இடையே புளோரிடா கடற்கரையில் அமைந்துள்ளது. இது அட்லாண்டிக் பெருங்கடலில் 500 000 சதுர மைல்களை உள்ளடக்கியது. பெர்முடா முக்கோணத்தை, சாத்தானின் முக்கோணம் என்று கூட அழைப்பர் , ஏனெனில் பெர்முடாவை முற்காலத்தில் சாத்தானின் தீவு என்று அழைத்தனர் !

தீவை சுற்றிலும் பவளபாறைகள் அமைந்துள்ளதால் , பல நூற்றாண்டு காலமாக அந்த கடல் வழியை மிகவும் ஆபத்தானதாக கருதினர் கப்பலோட்டிகளும், மாலுமிகளும். பெர்முடா முக்கோணம் பற்றிய அசாதாரண நிகழ்வுகள் கிறிஸ்டோபர் கொலம்பஸ் காலத்தில் இருந்து உள்ளது . அவர் சில நேரங்களில் திசைகாட்டி தாறுமாறாக சுற்றியது என்று தனது அறிக்கையில் கூறி உள்ளார். பல பத்திரிகையாளர்கள் இந்த பகுதியில் நடந்த விபத்துக்கள் அனைத்தும் அசாதாரண விஷயங்கள் என்று நிரூபிக்க முயற்சி செய்து தோற்றனர் . சில சம்வத்தில் எந்த விதமான துப்பும் கிடைக்காமல் கூட போனது !

நன்கறியப்பட்ட சம்பவங்களில் ஒன்று அமெரிக்க கடற்படை பயிற்சி விமானம் பிளைட் 19 காணாமல் போனது !. டிசம்பர், 1945 , ஐந்து அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் வழக்கமான பயணத்தை ஃபுளோரிடா, ஃபோர்ட் லாடர்டேல்லில் இருந்து தொடங்கியது. பல வானொலி செய்திகளை அனுப்பிய பின்னர் , அந்த விமானத்தில் இருந்த 14 குழு உறுப்பினர்களும் விமானத்தோடு காணாமல் போயினர். அந்த விமானத்தை தேடி சென்ற இன்னொரு மீட்பு விமானமும் காணமல் போனது !

என்ன தவறு நடந்தது என்று முழுமையாக தெரியவில்லை.திசைகாட்டிகள் தவறான திசைகளை காட்டியது மற்றும் தெரிவுநிலை மோசமாக இருந்தது, அதனால் விமான ஓட்டி கீழே தெரியும் அடையாளங்களை வைத்து விமானத்தை செலுத்த முயற்சி செய்தார் என்பது மட்டுமே தெரியும் !

பின்னர் ஒரு திடீர் புயயலினால் வானொலி தொடர்பு இல்லாமல் போனது . கப்பல்கள் இந்த பெர்முடா முக்கோண பகுதியில் காணாமல் போயுள்ளன. மேரி செலஸ்டி, ஒரு அமெரிக்க வணிக கப்பல், 1872 ஆம் ஆண்டில் காணாமல் போனது . அந்த கப்பல் நியூயார்க்கில் இருந்து ஜெனோவாவை நோக்கி சென்று கொண்டிருத்த போது அது மாயமானது . ஆனால் பின்னர் அந்த கப்பல் , எந்த குழு உறுப்பினர்களும் இல்லாமல் ஆப்ரிக்கா கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது . மேரி செலஸ்டி கப்பல் பெர்முடா முக்கோணத்தில் பயணித்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் , அந்த கப்பலின் பணிக்குழு என்ன ஆனது என்பது இன்று வரை புரியாத புதிரே !

ஏன் பல விமானங்கள் மற்றும் கப்பல்கள் பெர்முடா முக்கோண பகுதியில் காணாமல் போகின்றன என்பதற்கு பல கோட்பாடுகள் மற்றும் காரணங்கள் கூறப்படுகின்றன. சிலர் கூறுகின்ற காரணமானது , மிகவும் பலம் வாய்ந்த மின்காந்த புலன் [Magnetic Field] . அழிந்து போன அட்லாண்டிஸ் என்னும் தீவு தான் இந்த நிகழ்வுகளுக்கு காரணம் என்று பலர் வாதிடுகின்றனர் !. பெர்முடா முக்கோண கடலில் பலவகையான ரசாயனம் உள்ளது என்றும் , அதனால்தான் இவ்வளவு பிரச்னை என்று சில சாரார் வாதிடுகின்றனர் !

கரீபிய கடல் மிகவும் ஆபத்தானது என்றும் , அங்கு சீதோசன நிலை ஒரே மாதிரி இருப்பது கிடையாது என்றும் , கடல் மட்டம் ஒரே மாதிரி இருபது இல்லை என்றும் , திடீர் என்று பல பகுதிகளில் தாழ்வான தரைமட்டம் வரும் என்றும் . இது போன்ற பல காரணங்களை முன் வைக்கின்றனர் !!!

இந்த 20ஆம் நூற்றாண்டில் மட்டும் சுமார் 1000 பேருக்கு மேல் பெர்முடா முக்கோணத்தில் மறைந்து போகினர் !

பெர்முடா முக்கோணத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் , சம்பவங்களுக்கும் , அறிவியில்ரீதியான விளக்கம் கண்டிப்பாக இருக்கும் என்று அனைத்து விஞ்ஞானிகளும் கூறி கொண்டிருந்தாலும் , இன்று வரை அது ஒரு புரியாத புதிராகவே உள்ளது !!!


***** நன்றி: நண்பர் திரு.கஜேந்திரன் (face book)*****


No comments:

Post a Comment