Sunday, September 29, 2013

நிசப்தத்தின் சப்தம் (அத்தியாயம் 5)

குழந்தை தொடர்ந்தது, “ இன்னும் உன் அன்பும், உன் மனைவியின் அன்பும், சுற்றுபுற சூழ்நிலையின் காரணமாகவும் நான் கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் மறந்துடுவேன். அப்பறம் என் மாந்திரீக சக்தி, அதுல நான் கொடிகட்டி பறந்த காலம் கரிந்தே போய்டும்.நீ எனக்கு உதவி செஞ்சா நான் உனக்கும் உதவுவேன் என்ன சொல்லறே? என்றது.

உடனே தருண் “இல்ல... இல்ல என்னால உனக்கு help  பண்ண முடியாது. இது தப்பு. உலகத்தோட ஒத்துபோ அதுதான் நியாயம்எனவும்,

குழந்தை இனி உன்கிட்ட பேசி பலனில்லை, உன்கிட்ட சொன்னதால உன்ன அழிசாத்தான் எனக்கு நிம்மதி, இல்லைனா உன்னால என் ரகசியம் எல்லாம் வெளிய வந்திடும்”  என ஆக்ரோஷத்துடன் சொன்னது.

தருண், “ முடியாது நீ என்ன மிறட்டினாலும் நான் பயப்படமாட்டேன். நீ என்னை அழிச்சு இந்த உலகத்தோட நியதியை மாத்திறத்துக்கு முன்னாடி, நான் உன்ன அழிச்சுடறேன்.என ஆவேசத்துடன் அதன் கழுத்தை நெறிக்க முற்பட்டான்.

அப்போழுது ஏதோ ஒன்று தன் மண்டையை பலமாக தாக்கியதாய் உணர்ந்து திரும்பியவன் அதிர்ச்சியிலும் வலியிலும் உரைந்தே போனான் ஆனால் அவன் ரத்தம் மட்டும் உரையாமல் ஈரமாக்கியது அவனது கழுத்து பகுதியினை.

“சுஜா...நீயா என்னை ஏன் அடிச்சேஎன பலவீனமாய் கேட்டவன் கிட்ட்தட்ட மயக்க நிலைமைக்கு சென்று கொண்டிருந்தான்.

“ஏன்னா இப்போதைக்கு இந்த இரும்பு தடிதான் கிடச்சது எனக்கு. என்ன தைரியம் இருந்த நான் அவ்வளவு சொல்லியும் உங்க பைத்தியகாரதனத்தால், நம்ம குழந்தையை சாகடிக்க நினைப்பீங்க. இப்படிபட்ட புருஷனே எனக்கு வேண்டாம். எல்லாத்தையும்விட ஒரு தாய்க்கு அவ குழந்தைதான் முக்கியம்னு,நாளைக்கு இந்த ஊர் உங்க நிலைமையைப் பார்த்து தெரிஞ்சுக்கட்டும்.என மேலும் தாக்கிவிட்டு வேகமாக குழந்தையை தூக்கி கொண்டு வெளியே சென்றாள், குழந்தையும் அந்த கிண்டல் சிரிப்பு மாறாமல் இவனயே பார்த்துக்கொண்டு சென்றது.

எரிச்சலும் வலியாலும் “சுஜா...சுஜாதா... அது சரியில்லை....சுஜா...அது குழந்தையே இல்லைஎன கத்தலும் முனங்கலுமாக எழுந்திரிக்க முற்பட்டான்.


ஒரே கும்மிருட்டாக இருந்த்து. “என்னங்க...என்னங்க ஆச்சு?! ஏன் இப்படி ஒளரிகிட்டு இருக்கீங்க...எழுந்திரிங்க, என்ன ஆச்சு உங்களுக்குஎன லைட்டை ஆன் செய்ய, சுற்றும் முற்றும் குழந்தையை தேடினான். பின் சுஜாதாவின் குறல் அருகில் கேட்டதும் திரும்பி பார்த்தான். பிறகுதான், தான் தன் படுக்கை அறையில் உள்ளோம் என உணர்ந்து சுஜாதாவையே வெறித்து பார்த்துகொண்டிருந்தான்.

திரும்பவும் சுஜாதா அவனை நன்றாக உலுக்க, “ஓ...எல்லாம் கெட்ட கனவாஎன பெருமூச்சு ஒன்றைவிட்டான்.ஆனாலும் கழுத்திலும் தலையிலும்  உள்ள ஈரபசை பயமுறுத்த் திடுக்கிட்டு தடவி பார்க்க,
சுஜாஅதுசரி தண்ணி பாட்டில் எடுக்கும் போது டொம்முன்னு உங்க மண்டைல விழுந்து மூடி திறந்துடுச்சு, சரி எழுப்பி சொல்லலாம்னு பார்த்தா

இப்படி அலற்றீங்களே?!என சுஜா கூறவும், நிம்மதியான் புண்சிரிப்போடு “அப்பாடா எனக்கு இப்போதான் நிம்மதியா இருக்கு என அவளை அனைக்க போக, அப்போழுது சுஜாதா “ ஏய்...வேண்டாம் வேண்டாம். இப்போ நான் இரண்டு ஆளாக்கும்எனவும் பீதி நிறைந்த அவன் விழிகளுக்குள் குழந்தை அதே கிண்டல் சிரிப்புடன் கண்ணடித்தது. 


முற்றும்.

2 comments:

  1. சூப்பர் வசு கதை. ஓரளவு எதிர்பார்த்த முடிவு தான் ஆனாலும் கொண்டு போன விதம் அருமை. இன்னும் கொஞ்சம் பீதி கிளப்பிவிட்டுட்டு முடிச்சுருக்கலாம் இல்ல. என்னமோ அவசரமா முடிச்சுட்ட மாதிரி தோனுது. ஆனா நல்ல முயற்சி. கீப் இட் அப்.

    ReplyDelete
  2. ஆமாம் அவசரமா தான் முடிச்சேன். போன வருஷம் எழுத ஆரம்பிச்சது ஆனா முடிக்கவிடாமல் சில வேலைகள் தடங்கல்கள் சரி சட்டு புட்டுனு முடிச்சுடலாம்னு முடிச்சுட்டேன்.

    கருத்திற்கும் வருகைக்கும் நன்றி ஹேமா! :)

    ReplyDelete