Tuesday, October 1, 2013

இரயில் பயணம்













தண்டவளம் தரையிறங்கி ஓடும் நிழல் பயணம்

இறக்கும் காக்கை முதல்
இறவா ப்ளாஸ்டிக் பைகள் வரை
குப்பைகளை தன்னகத்தே கொண்டிருப்பினும்
அழுக்கு சுமந்து அமைதி காக்கும் பல பயணம்

நினைவு களைந்து நிஜத்தை தேடும் நீண்ட பயணம்

நிலத்தில் நீந்தி நிலவில் கால் பதிக்க
ஓங்கும் சாகச பயணம்

மரங்கள் பின்நோக்கி ஓடும்
கலங்களின் உண்மை பயணம்.

புதியவர் பழகியவர்களாக மாற்றும்
பழகியவர்களை புதியவர்களாய் ஆக்கும் விந்தை பயணம்.

மேற்கு நோக்கி விடியலையும் கிழக்கு நோக்கி அஸ்தமனத்தையும்
புரட்டிடும் அசுரப் பயணம்

கருவுக்குள் தொடங்கி கல்லரைக்குள் முடியும் முன்
காலதேவனின் தொடர் பயணம்.

பயணங்கள் மாறலாம் பாதை பாராமலேயே....

4 comments:

  1. பயணங்கள் ஓய்வதில்லை. அழகான ஆக்கம். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். அந்தக்காலப் புகைவண்டிப் படத்தேர்வும் அருமை.

    ReplyDelete
  2. ரசிக்க வைத்தது பயணம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தங்களது வருகைக்கும் தங்களது உயர்வான கருத்திற்கும் மிக்க நன்றி திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

    ReplyDelete
  4. என்றும் போல தங்களது ரசிப்பிற்கு மிக்க நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே! :)

    ReplyDelete