
உன் அறிமுகம் எனக்கு
தாய்மொழியாம் தமிழ்
மறைமுகமாய் வெளிப்பட்டது
என் எழுத்தின் உன் பிழைத்திருத்தங்கள்
பின்னிருந்து அக்கரை பேசியது எனக்காக.
உன் கோவ கேள்விகளில்
விடையும் ஒளிந்து சிரித்தது என்னை பார்த்து
செதுக்கிய சிற்பமாய் நானாக,
உளியின் கல்லாய் உருமாற,
என்னைவிட்டு கவலை கற்கள் அகலவைத்தாய்
தெளிந்த நீரோடையின் கூழாங்கற்களாய்
உவமேயம் அன்றி உவமானமாய்
நட்பில் தொடங்கி சகோதரத்தில் முடிந்த
உறவு பாலமாய் தொடர்ந்தாய்
காற்றாய் மாறி என் திசை காட்டினாய்
மேகத்துடன் மேகமாய் பயணித்து
மண்ணில் விழும் மழையாய் உருமாற்றினாய்
நிலவு பூசி முகம் காட்ட
சூரியனுக்கு ஒர் இரவு
என் துயர் இருளில்
நீ நிலவு கதிர்வீச்சு
உயிர்த்தோழமையே
உலகிற்கு தெரியா உண்மையிது
நீ என் அடுத்த அம்மாவென்று.
நட்பின் பெருமை சொல்லும் இக்கவிதை அழகு... நட்புக்கும் உனது கவிதை திறனுக்கும் பாராட்டுகள்..
ReplyDeletethanx hema...
ReplyDeleteவிழிநீர் கசிய வைக்குமொரு கவிதையினை மீண்டும் வாசிக்க இன்றும் என்னாலே முடிந்தது அக்கா..
ReplyDeleteஇதனின் மறுமொழி சொல்வதற்கு என்னில் ஒன்றுமே இல்லை அக்கா.