Friday, December 2, 2011
சக்கரகட்டி
"நிரஞ்சனா.... நான் ஆபிஸ்க்கு கிளம்பறேன். நீ இன்னைக்கு லீவ் தானே...? நீயே போய் நான் சொன்ன லிஸ்ட்ல உள்ள சாமானை மட்டும் வாங்கிண்டு வந்துடு...சரியா...? எனக்கு இன்னைக்கு வர லேட் ஆகும்." என அவசரமாக ஷூ மாட்டிக் கொண்டே பேசும் கணவனுக்கு தஞ்சாவூர் பொம்மையாக தலையை ஆட்டி பதில் சொல்லிக் கொண்டிருந்த நிரஞ்சனாவின காதில் பக்கத்து வீட்டு மலர்கொடியின் குரல் வாசலைத் திரும்பிப் பார்க்கவைத்தது.
இடுப்பில் குழந்தையும் கையில் சிறிய கிண்ணமுமாய் நின்று கொண்டிருந்த மலர்கொடி, "நீரூ... கொஞ்சம் சக்கரை இருந்தா தாயேன் குழந்தைக்கு பால் கரைக்கனும்" என கேட்க, நிரஞ்சனா
" என்ன அக்கா நீங்க இப்படி கேட்கறீங்க, கிண்ணத்தைதாங்ககா...." என வாங்கி கொண்டே, பாருங்க இப்பத்தான் சக்க்ரை தீந்து போகப்போக்குது அவசரத்துக்கு கொஞ்சம் தான் இருக்குனு இவரை வாங்கிகிட்டு வர சொன்னா, இவர் என்ன வாங்கிகிட்டு வர சொல்லிட்டார். இத மாதிரி நிறைய காரணங்களால் அடிக்கடி தீருது ஒரு 2 கிலோவா வாங்கி போடுங்க சொன்னா கேக்கராரா இவரு...இருங்க அக்கா இருக்கற சக்கரைல கொஞ்சம் தரேன் என நீட்டிமுழக்கி பேசி ஏன் கேட்டோம் என் மலருக்கு தோன்றவைத்துவிட்டு உள் சென்றாள்.
உள்ளே அவளுடன் வந்து கிண்ணத்தில் சிறிதளவே கொடுப்பதைப் பார்க்கையில் முகம் மாறியது அவள் கணவன் திவாகருக்கு. "ஏன் டப்பா நிரைய சக்கரை வைச்சுகிட்டு இவ்வளவு கம்மியா தரே அவங்களுக்கு" என கேட்டவனை,"உங்களுக்கு ஒன்னும் தெரியாது, போதும் எல்லாம் இவங்களுக்கு." என கூறி வாயடைத்துவிட்டாள்.
சிறிது நேரத்தில் திவாகர் அலுவலகம் சென்றது அரக்கப் பறக்க மலர்கொடியின் வீட்டு சமையலறை ஜன்னலில் வந்து மலரை கூப்பிட்டாள்.
மலர்கொடிக்கு ஒரே ஆச்சர்யம்...ஒரு டப்பா நிரைய சக்கரையை போட்டு கொண்டு வந்து அந்த ஜன்னலில் வழியே கொடுத்துக் கொண்டே, “என்ன அக்கா நீங்க...அவர் முன்னாடி கேட்கறீங்களே, அவரை பற்றி உங்களுக்கு தெரியாதா சரியான கஞ்சனாச்சே, இன்னைக்கு கூடவே வந்து எவ்வளவு கொடுக்கறேனு பார்க்க வேற செய்தார். அதான் அவர் ஆபிஸ் போனதும் கொண்டுவந்தேன் என கூறி கையில் தவழும் குழந்தையை எட்டி கொஞ்சி “இந்த சக்கரகட்டிக்கு இல்லாத சக்கரயா என்ன...?” என கேட்டுவிட்டு செல்லும் நிரஞ்சனாவை ஆச்சர்யம் விலகாமல் பார்த்துக் கொண்டே நின்றாள் மலர்கொடி.
Subscribe to:
Post Comments (Atom)
Nice story and a good try vasu. Keep it up.
ReplyDeletethanx for yr comment hema...
ReplyDelete