Thursday, April 5, 2012

தோழி

5 மாதங்கள் ஓடிவிட்டன நானும் சுகன்யாவும்(சுடிதார் டீச்சர்) சிநேகமாகி அவள் மூலமே அனைத்தையும் அறிந்தேன். அவளுக்கு மட்டும் எப்படி அனைத்தும் தெரியும் என்றால் அந்த சின்ன சார் இவளது குடும்பத்தாருக்கு குடும்ப நண்பர். இவர்தான் ஸ்கூல் கரஸ்பாண்டண்ட் அப்பறம் அந்த நெட்டை பெரிய சார் பிரின்சிபல். கேட்டவுடன் சிரிப்புத்தான் வந்தது பிறகு அவர்களது முயற்சியும் நிர்வாகத்திறனும் கண்டு அசந்து போனேன். இந்த 5 மாதங்களின் மிகவும் கவர்ந்தவர் பெரிய சார் அவருக்கு நாங்க பெரிய தம்பி எனவும் இவரைவிட குள்ளமாக இருந்ததனால் சின்ன தம்பி எனவும் கோட்வேட் வைத்து கூப்பிட்டோம் எங்களுக்குள். பி.டி (பெரிய தம்பி) மனதில் குடிகொள்ள ஆரம்பித்தார் சிறிது சிறிதாக.

மாதங்கள் ஓடின அடுத்த மே மாதம் வரவும் எங்கள் வீட்டில் எல்லோரும் டூர் போவோம் என கேரளாவிற்கு சென்றோம். மிக ஆனந்தமான நாட்களாக கழிந்தன. எல்லா படங்களுடன் ஆசையாக எனது ஸ்கூல் மிஸ்களுக்கு காட்ட முக்கியமாக பி.டிக்கு காட்ட அவற்றை எப்படி எல்லாம் கமண்ட் அடித்து ரசிப்பார் என ஆவலாக ஊர் திரும்பும் நாளை எதிர்பார்த்திருந்தேன்.
நாளும் வந்தது.எனது க்ளாஸுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இருப்பதால் புகைப்பட ஆல்பமுடன் சென்றேன். எல்லா மிஸ்ஸுக்கும் காண்பித்தாயிற்று பி.டியிடமும் காண்பித்து ஒவ்வோன்றாக ரசிக்கும் அழகையும் பார்த்தாயிற்று ஆனால் சுகன்யாவை மட்டும் காணவில்லை. சரி இன்று முடியாவிட்டால் வீட்டிலேயே உட்கார்ந்து திருத்திக்கொண்டிருப்பாள் போலிருக்கிறதென்னி வீட்டிற்கு வந்தவுடன் அவளின் கைபேசிக்கு தொடர்பு கொள்ள முயன்றேன். யாரும் எடுக்கவில்லை. உடல் நிலை சரியில்லையோ என எண்ணி மீண்டும் அடித்து பின் அதற்கும் பதிலில்லாததால் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவிட்டுவிட்டென்.

அடுத்த நாள் அரக்க பரக்க சுகன்யாவே ஓடிவந்தாள் என் வீட்டிற்கு. அழுது கொண்டே நின்றாள். என்ன ஏதேன்றே தெரியாமல் குழம்பி போயிருக்கும் நேரத்தில் அவளது அப்பாவும் இவளை தேடிக்கொண்டு வந்திருக்க, விஷயம் ஒரளவிற்கு புரிய ஆரம்பித்தது. இவளுக்கு அவசர கல்யாணம் செய்ய முடிவெடுத்ததும் மண்டபத்திலிருந்து போவதறியாது என்னிடம் வந்துவிட்டாள். நடந்த விஷயங்களை அவள் கூறும் முன் அவள் அப்பாவே கூற ஆரம்பித்தார்.

நான் உல்லாச பயணம் சென்ற அன்று இவள் தனது காதலை சொல்ல சென்றாளாம் காதலனிடம். அதை அவர் ஒத்துக்கொள்ளாததால் தற்கொலை செய்து கொள்ள போய் பக்க்த்துவீட்டு அக்காவால் காப்பற்றப்பட்டு வீட்டிற்கு அந்த விஷயம் தெரியவர அவர்களும் இவளுக்கு வேறு வரன் தேடி சொந்தத்திலேயே மாப்பிள்ளையை முடியும் செய்துவிட்டனர். இன்று திருமண நாள். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவளது அப்பாவிடம் நானும் சேர்ந்து கெஞ்ச ஆரம்பித்தேன் அவளது விருப்பபடியே மணவாழ்க்கையை அமைத்துதர. ஆனால் பிடிவாதமாக மறுத்தார். இவளும் இந்த கல்யாணம் வேண்டாம் என்னால் அவரை சமாதானம் செய்து திருமணம் செய்ய இயலுமென பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தாள்.

தொடரும்.....

2 comments:

  1. அடுத்த பகுதி கொஞ்சம் எனக்கு மனக்குழப்பத்திற்கு உள்ளாக்கும் பகுதி. கதையின் நடையில் எந்தக் குறையும் இல்லை. ஆனால் என்னால் இப்பகுதியின் சாராம்சத்தை முழுவதும் கிரகித்துக் கொள்ள இயலாது. அடுத்த பகுதியில் வரும் கதை வரும் போது மேலும் ஏதாவது சொல்ல முயற்சிக்கின்றேன். அது வரைக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. கருத்திற்கு நன்றி சிவா! சிறிது நாட்களாக என்னால் கவனம் செலுத்த முடியாத வேலை பளு காரணமாக சீக்கிரம் இக்கதையை முடிக்க எண்ணுகிறேன். அடுத்தது நிறைவு பதிவு தான். :)

    ReplyDelete