பறந்து பறந்து உலகை
ஒர் வலம். . . ஊர்வலம்.
சுதந்திர சாவி கிடைத்த சந்தோஷம்
எதன் மீதும் விறுப்புவெறுப்பில்லா நேசம்
ஒய்யாரமாய் பறந்து கையில் சிக்காமல்
எக்காளமிட்டு எட்டி செல்லும் வேகம்
நீண்டு பறந்து
நிலவு முட்ட ஆசை
நேரம்காலம் கடந்து
துள்ளலாய் பறக்கும்
நிற்காத வேலை
பனித்துளியிடம் ஒர் பதிவு
பணியாளனின் வியர்வையில்
ஒர் பதிவு
நிலத்திலும் ஒர் பதிவு
ஓடும் நீரிலும் ஒர் பதிவு
காற்றை கிழித்து பதிவிட
நூற்றுக்கணக்கில் முயற்சி
நீலவானம் தொட்டு
கதைகள் பேச நினைக்க
கார்மேகம் முட்டிற்று உன்னை
சிவ்வென்று பறந்து செல்லும்
காற்றாடியின் ஊடே
உன் சிறிய சிறகின் சாதனை
உன் பெயரில் வரும்
ஈகையை எடுத்துக்கொண்டேன்
தன் இச்சையை அனிச்சையாக தணிக்கை
செய்ய. . . .
ஆம் நானும் ஒர் ”ஈ” ஆக ஆசை.
கவிதையின் முடிவிலே கரு அமைக்கப்பட்டிருக்கின்றதே.! அதுவும் ஒரு ஈ போல பறக்க நினைக்கும் எண்ணம் உண்மையிலே மிகவும் அளப்பரியதே என்று தான் சொல்ல வேண்டும்.
ReplyDeleteயாரும் எதிர்பார்த்திருக்காக ஒர் ஆசை அல்லவா!
ReplyDeleteகருத்திருக்கு நன்றி சிவா!
வானில் பறந்திட மட்டுமல்ல வான் எட்டும் புகழும் கிடைக்கட்டும்
ReplyDeleteதங்களது வாழ்த்திற்கு மிக்க நன்றி சந்திரகெளரி அவர்களே! :)
ReplyDeleteசிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு....
ReplyDeleteஇந்த பாட்டு நினைவுக்கு வருகிறது உன் இந்த கவிதை படிக்கும்போது சக்கரக்கட்டி....
சுதந்திரமாய் பறந்து சாதிக்கும்போது ஏற்படும் சந்தோஷம் எப்படி இருக்கும்னு உணர்ந்ததால் சொல்கிறேன்....
ஈ போல் சுறுசுறுப்பாய் எல்லா களத்திலும் இறங்கி சாதனைகளை முறியடித்து வெற்றி சிகரம் தொட்டிட ஆசைப்படும் உன் கவிதை சூப்ப்பர் சக்கரக்கட்டி.... அசத்து மகளே அசத்து....
அன்பு வாழ்த்துகள்...
தங்களின் வாழ்த்திற்கும் அருமையானதொரு கருத்துமிக்க பாராட்டிற்கும் நன்றி மஞ்சு அக்கா!
ReplyDelete