Sunday, April 22, 2012

தோழி

அப்போதுதான் எனக்கு ஆத்திரம் தாங்காமல் யாருடி அவ்ளோ பெரிய ஆளு? நான் பேசறேன். ஒத்துக்கொண்டால் சரி இல்லை என்றால் அப்பாவின் மானத்தை காப்பாத்த மண்டபத்திற்கு போ என சொன்னதும் அவள் என்னடி இப்படி கேட்கற உனக்கு தெரியாதா நான் பி.டியை விரும்புவது என்றாள்.

எனக்கு தரை நழுவியது. பூகம்பம் வந்தது போலவே தோன்றியது. என்னால் நம்ப முடியவில்லை என் தோழி இவள் நான் விரும்புபவனையா காதலிக்கிறாள் அவனுக்காகவா இவ்வளவு பாடுபடுகிறாள் என்றதும் மனதில் இருந்த ஏதோ ஒன்று கழன்று விழ உணர்ந்தேன்.

 இப்பவும் ஒர் வாய்ப்பு இவள் அப்பாவுடன் சமாதானம் செய்து மண்டபத்திற்கு செல்ல சொன்னால் இவளால் ஒன்றும் செய்ய இயலாது அடுத்து அவள் அப்பாவின் பிடிவாதத்தால் திருமணம் நடந்துவிடும். பின் நமக்கான பாதை வெளிச்சத்துடன் காணப்படும் என்று எண்ணத்திற்கூடே மனசாட்சி மனதிலிருந்து எட்டிபார்க்க, நானே பி.டிக்கு ஃபோன் செய்தேன். இவளுக்காக வார்த்தை வராமல் பேசினேன். பேச பேச என்னையறியாமல் என் தோழிக்காக பரிந்து பேச ஆரம்பித்தேன். கடைசியில் நேரில் சென்று பேச அவர் சம்மதித்தார். அதே திருமண்டபத்தில் அவள் கழுத்தில் இவர் கட்டிய தாலியுடன் சிரித்த முகத்துடன் என்னை பார்த்தாள்.

 மண்டபத்திலிருந்து விடைபெற்று பழய நினைவுகளிலிருந்து விடுதலை பெற்று மன நிறைவுடன், தெளிந்த வானத்தை பார்த்தேன். மனதின் பிரதி பிம்பமாய் தோன்றியது. இவள் என்றும் என் தோழி. மாற்றமில்லாமல் என்றும் தோழமையுடன் நானும்.

3 comments:

  1. ஒரு முடிவுடன் கதையினை அமைத்து விட்டிருக்கின்றீர்கள் என்றாலும் முன்னர் கூறியது போல் எனக்கு முற்றிலும் ஜீரணிக்க முடியாத விடயம் பெற்றோரின் மானமரியாதை குழந்தை காற்றில் பறக்க விடுவதும், அதே சமயம் தன் குழந்தைக்கு தேவையான அன்பையும், அறிவுரையும் தகுந்த நேரத்திலே பெற்றவர்கள் வழங்காமல் இருப்பதுமே ஆகும்..

    நன்றி அக்கா.

    ReplyDelete
  2. வாழ்க்கையில் நடக்கிறதே இதை போன்ற இதைவிட ஜீரணிக்க முடியாத விஷயங்கள் எல்லாம்... அதை அடிப்படியாக கொண்டே எழுதினேன்.

    நன்றி சிவா கருத்திற்கு! :)

    ReplyDelete
  3. ஜீரணிக்க முடிகின்ற விடயங்களை ஜீரணத்திற்கு கொள்ள நாம் தவறி விடுகின்றோம் என்பதும், ஜீரணிக்கவே முடியாத விடயங்களில் ஜீரணிக்க முயற்சிப்பதும், ஜீரணிக்கத் தேவையின்றி உதறித்தள்ளிச் செல்ல வேண்டிய விடயங்களுக்கு பதட்டம் கொள்பவதும், மனப்பக்குவம் மாறுவதும் உலகில் நடந்து கொண்டிப்பதும் தான் அக்கா சிரிக்க வேண்டிய விடயமே.!

    ReplyDelete