Tuesday, November 15, 2011
பொய் முகம்
பொய்யும் புரட்டும் முகத்தில் தாண்டவமாடி
பொய்யென உரைக்கும் மெய்யாய்.
வெளிப்பட்ட வேஷம் துவேஷமாய் மாற
உரைந்து நிற்கும் உண்மையும்
இரக்க குணம் அரக்க குணமாய்
நெஞ்சை பிளந்து வெடிக்கும் நாற்புறமும்
காலம் முழுதும் கசையடியாய்
கனவுகள் தொலைத்த கருவறையாய்
மீந்து கிடக்கும்
எதை கொண்டு அதை அழிக்க
எதை கொண்டு நான் விழிக்க
என கெஞ்சி கேட்கும் மனிதமும்.
நீரூற்றி நெருப்பூற்றி
நெடுங்கால நினைவூற்றி
துவேஷம் வளர்ந்து நிற்கும் வேளையிலே
உண்மை உறுத்தலாய் உள்மனதை உடைக்கும்
திருந்திட திண்டாடும் மனதின் மூலையில்
பொய் முகம் அழியத்துவங்கும்.
நல்லதொரு ஆரம்பம்
நாள் முடிவில் துவங்கும்.
மாற்ற இயலாத மனதினை
மாற்றிவிட்ட பெருமிதத்தோடு
காலம் கடைசி நிமிடங்களை கடக்கும்...
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான கவிதைங்க. வாழ்த்துக்கள்.
ReplyDeleteகவிதை அருமைங்க தோழி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதிருந்திட நினைக்கும் மனமே ஒருநாள் பொய் முகத்தை அழிக்கும். காலம் வர அனைத்தும் கூடி வரும் என்பதும் உண்மையே . வாழ்த்துகள். என் பக்கம் உங்கள் வருகைக்கும் நன்றி
ReplyDeleteமிக்க நன்றி காந்தி அவர்களுக்கும் மற்றும் சந்திரகெளரி அவர்களுக்கும். தங்களது இருவரின் வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து தங்களின் கருத்தைதினை அறிய ஆவலுடன் உள்ளேன்.
ReplyDelete