Thursday, April 12, 2012

உரிமை 7

சுகம் தரும் குளிர் போய்
இதம் தேடி நான்
போர்வையின் கதகதப்பில்...
மேலும் என் போன்றோரின்
தேவைக்காக உருவானது கம்பளிகள்
ஆட்டுத் தோலுரிப்பில்....

3 comments:

  1. ஆட்டுத்தோலுரிப்பில் விளைந்த கதகதப்பு, உயிர்கள் கொல்லாமை குறித்து வலியுறுத்தும் தர்க்கவாதிகளுக்கும் இருக்குமா அல்லது அவர்கள் ஆட்டுத்தோலில் செய்யப்பட்ட போர்வையில் கதகதப்பிலே குளிரை நாடிடுவார்களா என்பது தான் கேள்விக்குரிய கேள்வியே :) !!

    உள்ளொன்று வைத்து புறமொன்று நடத்திடும் மாந்தகர்களுக்கு சாட்டையடி இதனை விட வேறு வகையிலும் நாசூக்காக கொடுத்திட இயலுமா என்பது சந்தேகமே!

    ஒரு பொருளில் இழப்பில் தான் அடுத்த பொருள் உருவாகின்றது என்ற உலக நீதி வெளிப்படும் நாள் எதுவோ??

    நல்ல கவிதைபகிர்ந்தமைக்கு நன்றி அக்கா.!

    ReplyDelete
  2. //ஒரு பொருளில் இழப்பில் தான் அடுத்த பொருள் உருவாகின்றது என்ற உலக நீதி வெளிப்படும் நாள் எதுவோ??//

    இது எப்படி மாறும் சிவா எல்லாம் சுழற்சியின் அடிப்படையில் இயங்குகின்றனவே...உலக நியதியே அதானே! ஆனால் இப்படிபட்ட வேதனைகள் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன...

    உனது ஆராய்ந்த கருந்த்திற்கு மிக்க நன்றி சிவா!

    ReplyDelete
  3. சுழற்சியின் அடிப்படையிலே இயங்கிடும் போது பேதம் எங்கிருந்து வருகின்றது என்று தான் தெரியவில்லையே அக்கா.

    நாங்கள் எந்த உயிரையும் அழிக்கமாட்டோம். நாங்கள் தான் உத்தமர்கள். எங்கள் மதமும், இனமும், வழிபாடும், கொள்கையும், உணவு பழக்க வழக்கங்களும் உத்தமம் என்று திரை மறைவில் வாழும் மேன்மையானோர் இயற்கைக்கு அஞ்சி, வயிற்றுக்கு அஞ்சி வெளியில் தெரியாமல் உயிர்வதம் செய்து வாழ்வதன் ரகசியம் எதனை உணர்த்துகின்றது அக்கா..?

    விரிவாக விலாசுவோம் வாருங்கள். :)

    ReplyDelete