Wednesday, September 21, 2011

அம்மா...


இந்த கவிதையை எனது தாய்க்கு சமர்பிக்கிறேன். இது எனது தாய்க்கு மட்டும் அல்ல உலகிலுள்ள அனைத்துத் தாய்மார்களுக்கும் பொருந்தும். அதனால் இக்கவிதை அவர்கள் எல்லாருக்கும் எனது சிறிய காணிக்கை.

அம்மா...

ஒரு வாய் சோற்றுக்கு
ஏங்கி நின்ற காலம் இல்லை
உன் சோற்றுக் கவளங்களையும்
சேர்த்துத்தந்தாய்....

சிட்டாடை கட்ட ஆசையில்லை
பட்டுப்பூச்சியிடம் இரக்கம் காட்ட
கற்றுத்தந்தாய்....

சிறு வயதில் கால் நடை பழக்கமில்லை
குதிரை சவாரியைவிட
உன் இடுப்பு சவாரி சுகமானது....

தங்கவளையல் தரமிழந்து போனது
உன் கண்ணாடி வளையலிடம்
போட்டிப்போட்டு....

உன்னிடத்து என் அன்பை வெளியிட
இச்சொல்லே போதும்
"என் அம்மா"....

என்னுள் ஆறறிவைத்தாண்டி
ஏழாம் அறிவாய் சுழலும்
உன் பாசம்...

என் கண்ணீர் தகுதியானது
உன்னை நினைக்கும்
பொழுது மட்டுமே....

நான் பிறந்த நாளைக்
கொண்டாடுகிறேன்
நீ உயிர்தெழுந்த நாளுக்காக....

நிழலாக போகும் நிஜம் நீ.
ஆனால் முடியவில்லை...
தொடர்கிறது...
ஒவ்வொரு உயிரிடத்தும் தாயன்பு....

3 comments:

  1. நல்லா இருக்கு அக்கா. கவிதையின் வரிகளில் உண்மையிலே பாசம் பொங்குகின்றது.

    கண்ணாடி வளையல்கள் அடிக்கடி உடைந்து விடும் என்று பித்தளை வளையல்கள் அணிந்து பவனிவரும் அம்மாமார்களும் இவ்வுலகில் உண்டே.!

    அருமையான கவிதையினைப் படைத்த அக்காவிற்கு நன்றி

    ReplyDelete
  2. மனதைத் தொடும் பாசக் கவிதை வசு. சும்மாவா சொல்லி வச்சாங்க அம்மான்னா சும்மாயில்ல, அவ போல யாரும் இல்லன்னு...
    ப்ளாக் உலகுக்கு என் இனிய வரவேற்புகள், அதிலும் முதல் கவிதையாக முத்தான கவிதை படைத்ததுக்கு பாராட்டுகள் வசு..

    மேலும் பல எதிர்பார்க்கும்
    அன்பு அக்கா
    ஹேமா

    ReplyDelete