Monday, September 26, 2011

உன்னை நோக்கி















வானை நோக்கி வளரும் மரம் போல‌
உன்னை நோக்கி என் பயணம்.

எய்தவனை விடுத்து,
இலக்கை நோக்கி செல்லும் அம்பைப்போல
காரணம் அறியா உன் காதலை நோக்கி என் பயணம்.

ஒற்றைக்காலில் தவம் செய்யும் கொக்கின் இரையாய்
உன்னைச் சுற்றி நீந்தும் என் பயணம்.

நீரைத்தேடி நிலத்தைப் பிளக்கும்
வேரின் தாகத்தைப்போல‌
உன்னைத் துர‌த்தும் என் ப‌ய‌ண‌ம்.

சிப்பியைஅடைந்து முத்தாகும்
தூய‌ ம‌ழை துளிபோல‌
உன்னை தேடி என் ப‌ய‌ண‌ம்.

ப‌ய‌ண‌ம் எனதானாலும் பாதை நீ சொன்ன‌து
ப‌ய‌ணிக்கிறேன். என் த‌னித்த‌ ப‌ய‌ண‌த்தின் முடிவு
உன்னிட‌ம் சேருமென‌...

4 comments:

  1. உன்னை நோக்கிய பயணத்தின் முடிவும் அது எவ்வாறெல்லாம்/எந்த வழியிலே சென்றாலும் அது சேருமிடம் குறித்த தெளிவும் அருமை.!


    நன்றி பகிர்ந்தமைக்கு

    ReplyDelete
  2. Reminds me of the song "Idhayam oru kovil"...

    "Paadhai nooru aanapodhum dhisaigal veramma.. Enadhu paadhai veru unadhu paadhai verammaa"..

    ReplyDelete
  3. உனது கருத்தினை பதிவிட்டமைக்கு நன்றி சிவா!

    ReplyDelete
  4. Welcome..!Thanks for yr valuable comment on my blog.

    ReplyDelete