ஓடு நனையாத வீட்டில் ஒட்டடைப் பூச்சிகள்
அடுப்பு எரியாவிட்டாலும்
அதன் கதகதப்பில் பூனை
சின்னஞ்சிறு ரயில் வண்டிகளின் உரசல்
என் காலடியில் மரவட்டையின் ரூபமாக
சிந்திய சக்கரைத் துகள்களைத்
தேடி அலையும் எறும்புக் கூட்டம்
என் மனம் சட்டைப் பையில்
சில்லரைகளைத் தேடி
அலைவது போல....
அடி சோற்றுப் பானையில்
வயிறு நிரம்பினர் பித்ருக்கள்
வழி வழியாய் வந்தோர்க்கு
என்ன செய்தோம் என்று எண்ணி
சோர்ந்து விழுந்த என் நினைவுகளில்
ஓர் ஆனந்தம்....
ஆம் என் வீடும் ஒரு சரணாலயம் தான் என்று.
எப்பேர்பட்ட புண்ணியவான்கள் பிறந்த பூமியிலே நாம் பிறந்திருக்கின்றோம் என்பதற்கு இக்கவியும் நல்ல உதாரணம்.
ReplyDeleteவறுமை வந்து வந்து ஆடினாலும் தன் பெருமை மாறவில்லையே.! நல்ல கவிதை.
நன்றி
மிக இனிமையான கவிதை
ReplyDeleteதங்களது பாராட்டிற்கு மிக்க நன்றி சிவஹரி மற்றும் ஒளவை அவர்களே...!
ReplyDelete