ஒற்றை மரமாய் வாழ்க்கை
உன் நினைவு என்னும் காற்றில்
ஊஞ்சலாட்டம் போடுகிறது.
சிட்டுக் குருவிகளின் சிறையில் இருந்தாலும்
அதனுடன் சிறகடித்து செல்ல வாய்பில்லை.
என் நிழல் கற்றைகளின் நடுவே
இளைப்பாறும் மான் கூட்டத்தில்
குதித்தோடி சென்று சுதந்திரம்
சுவாசிக்க வழியில்லை.
என்னை சுற்றியிருக்கும் ஈரத்தை எல்லாம்
வேர்களின் வழியே உறிஞ்சிவிடினும்
பழங்களை பரிசளிக்க விழைகிறேன் எப்போழுதும்.
பழுத்த மரம் தான் கல்லடிபடும் என்ற
பழமொழிக்குக்கூட விதிவிலக்கானவள்.
வருடங்கள் மட்டும் வழிவிட
வயதாகிப் போனவள்.
No comments:
Post a Comment