சேற்றுச் செந்தாமரை நீ
இறைவனின் இரக்கம் நீ
நிலவின் நிழலாய்
கனவின் கருவாய்
என் இதய வாசலில் கால் பதித்தாய்
பாலைவனத்திலும் வானவில்லின்
எட்டாவது வர்ணமாய்
நீ தவழும் அழகைப் பார்த்திருப்பேன்
என் தலை சாயும் வரை உடன்வா...
வாழ்ந்து தான் பார்போம்.
வாழ்க்கையின் எதிரெதிர் துருவங்கள்
சேரும் போது சுபமாகட்டும் இங்கே...!
கவிதை அருமை சுப்பர்
ReplyDeleteபாராட்டிற்கு நன்றி ஹிஷாலீ!
ReplyDelete