மழை விழுந்த ஈரத்தை இழுத்துக் கொள்ளும்
மண் தரைப்போல என்னுள் விழுகின்ற உன் அன்பு
போதாமல் இழுத்துக் கொள்கிறேன்.
பூக்களின் வண்ணங்களில் வாசம் செய்கிறாய்
அதனால் தானா வண்ணங்களுக்கும் வாசம் பிறக்கிறது.
வெறும் காகிதப்பூவிலும் கசங்கிய வாசம்
நீ சோகம் மீட்டும் போழுது.
பிரபஞ்சத்தைவிட மர்மமானது உன் புன்னகை
அதில் சுடும் சூரியனும் அடங்கும்
குளிர் நிலவும் அடங்கும்
கோடி நட்சத்திரங்களாய்,
உன் மன சஞ்சலங்களும் மின்னும்.
உன்னை நோக்கி எழும்பி
எட்டிவிட துடிக்கும் என் ஆசை
ஒரு நிலையில் அடங்கினாலும்
உருண்டோடி தேடி முடிக்கும் என் காதலை.
நீ இருந்து சென்ற இடத்தின் தூசியைக்கூட
கைப்பற்ற நினைக்கும் குப்பைத் தொட்டி மனது.
ஆம் நீ தூக்கி எரிந்த பலவற்றில்
என் இதயமும் ஒன்று
இப்பொழுது உன் நினைவுகளை
சேகரிக்கும் கிடங்கானது.
No comments:
Post a Comment